SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசியின் முக்கிய விசேஷ தினங்கள்!!

2022-02-11@ 15:04:01

“மாசிமகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம்” என்ற மூதுரை ஏற்பட்டதே இம்மாசி மகத்தில், ஸ்ரீமகாவிஷ்ணு அவதரித்ததினால்தான்! இம்மாதத்தைத்தான் “மாங்கல்ய மாதம்'' என அழைத்து புது தாலிச்சரடு அணிந்து, அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சிக்க, தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் மணமான தம்பதியினர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, ஸ்ரீசரஸ்வதி தேவியையும், ஸ்ரீஹயக்ரீவரையும் இம்மாதத்தில் பூஜிக்க, கல்வியறிவில் சிறந்து விளங்குவர், மாசி மகத்தன்று திருக்கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை நதி நன்னீரில் நீராட்டுவர்
புனித நதிகளில் நீராடினாலோ அல்லது தங்கள் வீட்டில் குளிக்கும்போது கங்கை, யமுனா, காவேரி, சரஸ்வதி, நர்மதை, துங்கபத்ரா, கருடகங்கா, திரிவேணி சங்கமம், மாந்தாகினி, தாமிரபரணி, கர்ணப்ரயாகை, ருத்ரப்ரயாகை ஆகிய புண்ணிய நதித்தீரங்களை மனத்தால் நினைத்து, நீராடினாலோ அல்லது மாசிமக வைபவங்களைப் படித்தாலோ மிகப் பெரும் புண்ணிய பலனை அடைவர்.

இம்மாதத்தில், நீர்நிலைகளில் புதிய நீரூற்றுகளும் உண்டாகி, எடுக்க எடுக்கக் குறையாத மேன்மேலும் பொங்கிப் பெருகி, என்றென்றும் வற்றாத ஜீவநதியாக பிரவீகரிப் பதும் இம்மாசியில்தான். அன்னை பார்வதிதேவி, வலம்புரிச்சங்கு அம்சமாகத் தோன்றியதும், சிவபெருமான், தனது திருவிளையாடல்களை நிகழ்த்தியதும் இம்மாதத்தில்தான்! இம்மாதத்தில் தானதர்மம் செய்வோருக்கு சிவபெருமானும்  திருமாலும் இணைந்து வரங்களை வாரிவழங்கி, அருளுவர். மாபதகங்களைச் செய்து அதனாலுண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்களையும் போக்கடிக்கும் இரண்டு ஏகாதசி விரதங்களும் வருவதும் இந்த மாதத்தில்தான் காரடையான் நோன்பும், சாவித்திரி விரதமும் வருவது இம்மாதத்தில்தான்! யந்திர தந்திரங்களும், மந்திர உபதேசங்கள் பெறவும் சாலச் சிறந்த மாதம்! குலசேகர ஆழ்வார் அவதரித்த மாதம்.

தானத்தில் சிறந்த அன்னதானத்தின் பெருமைகளைச் சொல்வதும் இந்த மாதம்தான். சுவாமி மலையில் தன் தகப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையனின் (ஸ்ரீமுருகப் பெருமானின்) வைபவமும், இந்த மாசிமாதத்தில்தான்! குறுமுனியாகிய அகத்தியர், கடும்தவம் இயற்றி, தனது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டதும் இந்த மாசி மாதத்தில்தான்! இம்மாதத்தில், புதுமனை குடிபுகுந்தால், தொன்றுதொட்டு வாழையடி, வாழையாக பல தலைமுறைச் சந்ததிகள் அந்தப் புதுவீட்டில் வாழ்வாங்கு வாழ்வார்கள்!!

காரடையான் நோன்பு! விரதம் இருந்து, மஞ்சள் சரடு கட்டிக்கொள்ளவேண்டிய நேரம்:  14-3-2022ம்தேதி இரவு 8.00 மணியிலிருந்து 8.45 மணிக்குள் மஞ்சள் சரடு கட்டிக்கொண்டு, பெரியவர்களிடம் ஆசி பெறுதல் வேண்டும். வாழ்க வளமுடனும் உடல்நலமுடனும்!!

- ஏ.எம்.ஆர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்