SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்

2022-01-04@ 12:42:20


இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போரில் எதிரியின் நாட்டைப் பிடிக்க ஒரு பாலத்தைக் கடக்க வேண்டும். தலைவன் தன் படையை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால், எதிரிகள் அந்த பாலத்தைத் தகர்த்துவிடப் ேபாகிறார்கள் என்ற தகவல் வந்தது. தனது படை பாலத்தைக் கடந்து கொண்டிருக்கும்போதே  பாலம் உடைந்து விழுந்து விட்டால்? படைகள் தயங்கின. தலைவன் சிந்தித்தான். முடிவாகச் சொன்னான். நாம் பாலத்தைக் கடப்பதா? வேண்டாமா? கடவுள் வழிகாட்டட்டும். பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் உடனே தயங்காமல் பாலத்தைக் கடப்போம். வெற்றி பெறுவோம் எனச்சொன்ன தலைவன் தன் பையிலிருந்து ஒரு காசை எடுத்துச் சுண்டி விட்டான். தலை விழுந்தது. படை கடவுளின் கட்டளையோடு புறப்பட்டது. பாலத்தைக் கடந்தது. போரில்
வென்றது.

மன்னர் படைத்தலைவரைப் பாராட்டினார். ஆனால், அவருக்கு ஒரு சந்தேகம். தயங்கியபடியே அவர் கேட்டார். ‘‘பூ விழுந்தால் நீ என்ன செய்திருப்பாய்?’’ படைத்தலைவன் சிரித்துக்கொண்டே, தான் சுண்டிய காசை எடுத்துக்காட்டினான். அதில் இருபக்கமும் தலைதான் இருந்தது.‘‘கவலை வேண்டாம் அரசே, நமக்கு எப்போதும் தலைதான்.’’ ஓர் அமைச்சர் கேட்டார், ஆனால் கடவுள் காட்டிய வழி என்று இதை எப்படி நம்புவது? தலைவன் தயங்காமல் சொன்னான். ‘‘நீதிக்காகத் துணிவோடு போராடுவது கடவுள் காட்டும் வழிதானே!’’‘‘அன்பார்ந்தவர்களே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், இறைப் பற்றில்லாமல் நமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக்காலத்தில் தோன்றுவர் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள். இவர்கள் பிரிவினை பண்ணுபவர்கள். மனித இயல்பின்படி நடப்பவர்கள் கடவுளின் ஆவியைக் கொண்டிருந்தவர்கள்.

அன்பானவர்களே! தூய்மைக்கு  விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வை தட்டி எழுப்புங்கள். தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள். கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திடுங்கள். நம்பத்தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள். வேறு சிலரை அழிவுத் தீவிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள். ஊனியல்பாய் கரைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள். உங்களைக் காக்கவும் தமது மாட்சித்திருமுன் மகிழ்ச்சியோடு மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வரியாய் மாட்சியும், மாண்பும், ஆற்றலும், ஆட்சியும், ஊழிக்காலம் தொட்டு இன்றும் என்றும்
உரியன.’’ - (யூதா 1: 17-25)

தனிமனிதனை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். அதன்மூலம் உலகம் முழுவதையும் அறிந்துகொள்ள முடியும். நீங்கள் உங்களை அறிந்துகொள்வதன் மூலம் இறைவனை அறிந்துகொள்கிறீர்கள். கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் மனிதருக்கு இருக்கிறது. ஆனால் எந்த மனிதனும்தான் இருப்பது குறித்து சந்தேகப்படுவதில்லை. உண்மையை அல்லது உங்கள் ஆத்மாவின் மூலாதாரத்தைக் கண்டுகொள்ளுங்கள். பிறகு அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள்.

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்