கால்நடைகள்-ஓர் அருட்கொடை
2022-01-04@ 12:41:34

மாடு’ என்றாலே செல்வம் என்றுதான் பொருள். யாரிடத்தில் பெருமளவில் கால்நடைகள் இருந்தனவோ அவர்களே சமுதாயத்தில் மிகப்பெரும் செல்வந்தர்களாய் இருந்தார்கள். நவீன காலத்திலும் வேளாண் பொருளாதாரத்தில் கால்நடைகளின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த உண்மைதான்.இஸ்லாமிய வாழ்வியல் கால்நடைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.ஒருமுறை நபியவர்கள், கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ஒட்டகத்தைப் பார்த்தார். சரியான உணவும், நீரும் அதற்குத் தரப்படவில்லை என்பதுடன், அளவுக்கு மீறி வேலை வாங்கும் செய்தியும் இறைத்தூதருக்குத் தெரியவந்தது. உடனே, ஒட்டக உரிமையாளரை அழைத்து, “கால்நடைகள் விஷயத்தில் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்” என்று கடுமையான தொனியில் அறிவுறுத்தினார்கள். கால்நடைகளின் சிறப்புகள் குறித்து இறுதி வேதத்திலிருந்து சில வசனங்களைப் பார்ப்போம்.
“அவனே கால்நடைகளையும் படைத்தான். அவற்றில், உங்களுக்கு உடையும் இருக்கிறது. உணவும் இருக்கிறது. இன்னும் ஏராளமான பயன்களும் இருக்கின்றன.” (குர்ஆன் 16:5)
“திண்ணமாக, கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றுக்குள் இருப்பவற்றிலிருந்து ஒரு பொருளை(பால்) உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம். மேலும், அவற்றில் ஏராளமான பயன்களும் உங்களுக்கு இருக்கின்றன.”
(குர்ஆன் 23:21)
மனிதகுலத்தின் நன்மைக்காகத் தன் கைகளாலேயே கால்நடைகளைப் படைத்து அருளியதாகக் கூறும் இறைவன், இந்த அருட்கொடைக்காக இறைவனுக்கே நன்றி செலுத்தும் அடியார்களாய்த் திகழுங்கள் என்றும் அறிவுறுத்துகிறான்.“அவர்கள் கவனிக்கவில்லையா என்ன? திண்ணமாக நம் கைகள் உருவாக்கியவற்றிலிருந்து அவர்களுக்காகக் கால்நடைகளை நாம் படைத்துள்ளோம். இப்போது, அவர்கள் அவற்றின் உரிமையாளர்களாய் இருக்கின்றார்கள். மேலும், அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள், சவாரி செய்கிறார்கள். சிலவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றார்கள். மேலும், அவற்றில் அவர்களுக்குப் பலவிதமான பயன்களும் பானங்களும் இருக்கின்றன. அவர்கள், நன்றி செலுத்துவோராய் இருக்க வேண்டாமா?”
(குர்ஆன் 36:71-73)
கால்நடை எனும் செல்வத்தை அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியார்
களாய்த் திகழ்வோம்.
- சிராஜுல்ஹஸன்
மேலும் செய்திகள்
கூட்டுத் தொழுகை..!
கடவுள் ஒரு தோழர்
வீடு சொர்க்கமாக...
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், துவண்டவர்களைத் துணிவடையச் செய்வது ஆகும்
ஈகைத் திருநாள்..!
உயிர்த்த ஆண்டவரால் வல்லமை!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்