SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயில் காளைக்கு வழிபாடு!

2022-01-03@ 13:31:48

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள்,  நகரங்களுக்கு இணையான நாகரீக வாழ்க்கை முறையை பின்பற்றும் நிலையிலும், கோயில் திருவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்கள் நடத்துவதில், முன்னோர்களின் பாரம்பரிய சடங்கு சம்பிரதாய முறைகளை இன்றளவும் கைவிடாமல் பின்பற்றி வருகின்றனர்.வாழப்பாடி பகுதியில் மாரியம்மன், காளியம்மன், சென்றாயப்
பெருமாள், செல்லியம்மன் கோயில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டத்திற்கு, கோயில் காளைகள் மற்றும் குதிரைகளை அலங் கரித்து மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்சென்று, பொது மக்களிடம் திருவிழா செலவுக்கு ‘வரி’ வசூல் செய்யும் பாரம்பரிய தண்டல் நடைமுறை இன்றளவும் தொடர்ந்து வருகிறது.கோயில் தேர்த்திருவிழா முன்னேற்பாடுகள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும், தேர்த்திருவிழா நடத்தும் செலவிற்கு வரி வசூல் செய்வதற்கும், கோயில் காளையை அலங்கரித்து வீடுகள் தோறும் அழைத்துச்சென்று, ஊர் பெரிய
தனக்காரர்கள் என அழைக்கப்படும் கோயில் நிர்வாகிகள் பாரம்பரிய முறைப்படி வரி தண்டல் செய்து வருகின்றனர்.

கோயில்களை நிர்வகித்து திருவிழாவை முன்னின்று நடத்தும் ஊர் பெரியதனக்காரர்களுக்கு முதல் மரியாதை கொடுக்கும் விதத்தில், பொது மக்களிடம் வரி வசூலிப்பதற்கு முன்பாக, கோயில் நிர்வாகிகளின் வீடுகளுக்கு கோயில் காளையை அலங்கரித்து அழைத்துச்செல்லப்படுகிறது.பக்தர்கள், கோயில் விழாவிற்கு நன்கொடை கொடுப்பது மட்டுமின்றி, கோயில் காளைக்கு தீவனம் கொடுத்து, தொட்டு வணங்கி வழிபாடு நடத்துகின்றனர். கோயில் காளையோடு ஊர்வலமாக வந்து திருவிழாவிற்கு வரி வசூல் செய்யும் ஊர் பெரியதனக்காரர்களுக்கு குளிர்பானங்கள், தேநீர் வழங்கியும் மக்கள் உபசரிக்கின்றனர்.

கோயில் காளையை பராமரித்து திருவிழா வரி வசூலுக்கு அழைத்துச் செல்லும் உரிமையை அருகிலுள்ள மன்னாயக்கன்பட்டி கிராமத்திற்கு வழங்கி, அண்டை கிராம மக்களோடு இணக்கமான உறவை பல நூற்றாண்டுகளாக வாழப்பாடி பகுதி மக்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியார் மன்னன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்