பிறந்த தேதி பலன்கள் ஜூன் 8 முதல் 14 வரை
2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தனியா தொழில் பண்றவங்க, கூட்டுத் தொழில்லயும் இறங்கலாமுங்க. அல்லது கூட்டாளிகளைத் தேர்வு செய்து உங்க தொழில்லயே சேர்த்துக்கலாமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்க ரொம்பவும் கவனமா இருங்க. ஏற்கெனவே உங்களுக்கும் மேலதிகாரிக்கும் இருந்திருக்கக் கூடிய பிரச்னை, இப்போ உங்களுக்கு பாதகமாகத் திரும்பலாமுங்க. உங்க மேல எந்தத் தப்பைக் கண்டுபிடிக்கலாம்னு காத்திருக்கறவங்களை ஏமாற்றமடைய வைக்கிற ஒரே வழி, நீங்க கவனத்தைச் சிதற விடாம பணியில் ஈடுபடறதுதாங்க. சிலர் புதுமனை, வீடுன்னு வாங்குவீங்க. சுப விசேஷத்துக்காகக் கடன்பட வேண்டியிருக்கும்; தப்பில்லேங்க. கண்கள், வயிற்றுப் பகுதியில் ஏற்கெனவே பாதிப்பு இருக்கறவங்க மருத்துவத்தை இடைவிடாம தொடரணுமுங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு அவங்களோட நீண்ட நாள் கனவு நிறைவேறுமுங்க. ஞாயிற்றுக்கிழமை அனுமனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; அனைத்து நன்மைகளும் பெறுவீங்க.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உத்யோகத்ல இருந்த சிறு பிரச்னையும் விலகி, பரிபூரண நிவர்த்தி கிடைக்குமுங்க. பதவி, ஊதிய உயர்வுகள் நீங்களே ஆச்சரியப்படற வகையில அமையுமுங்க. எடுக்கும் முயற்சிகளெல்லாம் வெற்றியாகவே முடியுமுங்க. புது யோசனைகளும் உங்களுக்குப் புது உற்சாகம் கொடுக்குமுங்க. கணவன்-மனைவி உறவில் பிரிவினை அளவுக்கு விவகாரம் வந்தாலும் வீட்டுப் பெரியவங்களோட மத்தியஸ்தத்தால சுமுகமாகிடுமுங்க. பிரிந்த உறவினர் மீண்டும் சந்தோஷமா ஒண்ணு சேருவீங்க. எதிர்பாராத இடத்லேர்ந்து நல்ல செய்திகள் வருமுங்க. உயரமான இடம் மற்றும் நெருப்போடு வேலை செய்யறவங்க நிதானமா வேலை பாருங்க. சிலருக்கு ஒவ்வாமையால் சுவாசக் கோளாறு ஏற்படலாமுங்க.
இந்தத் தேதிப் பெண்களின் வார்த்தைக்கு குடும்பத்திலும் வெளிப் பழக்கத்திலும் மதிப்பு கூடுமுங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; துயரமே அண்டாது, பாருங்க.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வெளிவட்டாரப் பழக்கத்ல கவுரவம் கூடும்; தன்னம்பிக்கை வலுப்பெறுமுங்க. பெற்றோர் மற்றும் குடும்பத்ல இருக்கற பெரியவங்க உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. உங்களோட பிற வேலை மும்முரத்தோட இந்த கவனிப்புக்கும் முக்கியத்துவம் கொடுங்க. உத்யோகப் பிரச்னை நிவர்த்தியாகுமுங்க. இளவயதினருக்கு அவங்க தகுதிக்கேற்ப, விரும்பிய வேலையே கிடைக்குமுங்க. அசையும் அசையா பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்குங்க. விலை குறைவாகவே இருந்தாலும், எந்த சொத்தையும் வாங்குமுன் உரிய ஆவணங்களின் நம்பகத் தன்மையை சரிபார்த்துக்கோங்க. தைரியமா ஷேர் அல்லது பிரபல நிறுவனங்கள்ல முதலீடு செய்யலாம். பரம்பரை நோயை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்காதபடி மருத்துவம் பார்த்துக்கோங்க.
இந்தத் தேதிப் பெண்களுடைய முயற்சிகள் வெற்றி பெறுமுங்க. வெள்ளிக்கிழமை அம்பிகைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; அனைத்தும் நன்மையாகும்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
குலதெய்வ கோயிலுக்குப் போய், விடுபட்ட பிரார்த்தனை ஏதாவது இருந்தா நிறைவேற்றிடுங்க. ஏதேனும் பெரிய முதலீட்டுக்கு வாய்ப்பு வந்தா உடனே செய்யலாமுங்க. தொலைதூரச் செய்திகள் நன்மைகளைச் சுமந்து வருமுங்க. வெளிநாட்டிலிருக்கும் உறவுக்காரங்க அல்லது நண்பர்களால சில எதிர்கால லாபங்களுக்கு வழிவகை கிடைக்குமுங்க. சேமிப்பும் கூடும். உத்யோகத்ல மேலதிகாரிகளோட ஆதரவு நிம்மதி தருமுங்க. புது முயற்சிகள்ல வெற்றியை ருசிப்பீங்க. வயிற்றில், குறிப்பா ஈரல் கோளாறில் எச்சரிக்கையா இருங்க; இதுக்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்; நாட்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்க.
இந்தத் தேதிப் பெண்கள் பெற்றோர், கணவர், நண்பர்கள், அண்டை அயலாருடன் நிதானமாகவே பேசணுமுங்க. வியாழக்கிழமை இஷ்டப்பட்ட மகான் கோயிலுக்குப் போய் அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; மேன்மைகள் துலங்கும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தொழில், உத்யோகம் எல்லாமே மேன்மையாகுமுங்க. குடும்பத்தில் தடைகள் நீங்கி சுபவிசேஷங்கள் இனிதாக நடந்தேறுமுங்க. தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய வாரமுங்க. அதே சமயம், அந்த வெற்றிக் களிப்பிலே வார்த்தைகள்ல ஆணவத்தைச் சேர்த்துக்காதீங்க. யாரிடமும் எதற்கும் கொஞ்சமும் கோபத்தைப் பிரதிபலிக்காதீங்க. இப்படி இருந்துட்டீங்கன்னா உத்யோகம், குடும்பம், வெளிவட்டாரப் பழக்கத்திலே இருந்த பிறருடனான இடைவெளி நீங்கி, சுமுகமான உறவுக்கும் நட்புக்கும் வழி கிடைக்குமுங்க. மனசில் தன்னம்பிக்கை வளரும். உங்களைச் சார்ந்திருக்கறவங்களோட அருமை புரியும். இந்தத் தேதி இளைஞர்கள் மேல்படிப்புக்காக விரும்பிய வெளிநாடு போவாங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு, அவங்க விரும்பிய பொருள் கிடைத்து மகிழ்ச்சி பெருகுமுங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல உபாதை வரலாம். சனிக்கிழமை சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; சிறப்புகள் அணிவகுக்கும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்ல அக்கறை காட்டுங்க. யார்கிட்டேயும் ஆறுதலையோ, உதவியையோ எதிர்பார்த்து குடும்ப விஷயங்களை வெளியே சொல்லிகிட்டிருக்காதீங்க. அரசியல், அரசுத்துறையினருக்குப் புதிய பதவி, சந்தோஷம் தருமுங்க; உத்யோகத்தில் இடமாற்ற வாய்ப்பு கிடைச்சா தயங்காம ஏற்றுக்கோங்க, அது எதிர்கால நன்மைகளைத் தருமுங்க. தனித்தொழில்ல முன்னேற்றம் உண்டுங்க. குடும்பத்ல சுபநிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டா, குலதெய்வத்துக்கு வேண்டுதல் செய்து முடிக்க, எல்லாம் நல்லபடியாக நடந்தேறுமுங்க. ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தா, நீங்களாகவே நேரடியாக அதில் ஈடுபட்டீங்கன்னா காலதாமதம் குறைந்து விரைவாகப் பைசலாகுமுங்க. உடலின் இடது பக்க உபாதையை உடனே மருத்துவர் கவனத்துக்குக் கொண்டு போங்க.
இந்தத் தேதிப் பெண்களுக்கு சுமுகமான குடும்ப வாழ்க்கை அமையுமுங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; மங்கலம் நிறையும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு கவுரவம் அதிகரிக்குமுங்க. அவங்களோட முயற்சிகள்லாம் அவங்களுக்கு மட்டுமல்லாம, அவங்க சார்ந்திருக்கற நிறுவனங்களுக்கும் பெருமை தேடித் தருமுங்க. சிலர் கூட்டுத் தொழில்லேர்ந்து பிரிந்து தனியாகத் தொழில் மேற்கொள்வீங்க; அயல்நாட்டு ஒப்பந்தங்களும் கிடைச்சு வெற்றி மேல் வெற்றி பெறுவீங்க. விஐபிகள் தொடர்பால பல நன்மைகள் ஏற்படுமுங்க. முதுகெலும்பில் கோளாறு தெரியுமுங்க. பாதத்தில் தோன்றக்கூடிய சிறு பிரச்னையை அலட்சியப்படுத்தாதீங்க. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ரொம்பவும் கவனமா இருக்கணுமுங்க. அவங்களுக்குக் கால்ல அடிபட வாய்ப்பு இருக்கு. அசையும் அசையா பொருள் சேர்க்கைக்கும் வழி இருக்குங்க. சிலருக்கு பூர்வீக சொத்து, பிரச்னை இல்லாம வந்து சேருமுங்க.
இந்தத் தேதிப் பெண்களின் கௌரவம் கூடுமுங்க. புதன்கிழமை பெருமாளுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; பெரிய நன்மைகளைப் பெறுவீங்க.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தொழிலிடத்தில் யார்கிட்டேயும் பகைமை பாராட்டாதீங்க; அதனால பாதிப்பு உங்களுக்குதான். வேறு வேலைக்கான முயற்சிகள் வெற்றி தருமுங்க. சிலர் தனியார் துறையிலிருந்து அரசுத்துறைக்குப் போவீங்க. குடும்பத்தாரோடு அனுசரிச்சுப் போகவேண்டியது ரொம்பவும் முக்கியமுங்க. வெளிவட்டாரப் பழக்கத்திலே அதிகமா அறிமுகமாகாதவங்ககிட்டகூட விட்டுக் கொடுத்துப் போகத் தயாரா இருக்கற நீங்க, உங்களைச் சார்ந்திருக்கறவங்களை ஏன் புறக்கணிக்கறீங்க? எப்படியாவது விடுப்பு அல்லது ஓய்வு நாட்களுக்கு ஏற்பாடு செய்துகிட்டு குடும்பத்தாரோட எங்காவது சுற்றுலா போய்வாங்க. அவங்களோட சந்தோஷம்தான் உங்களுக்குப் பெரிய நிம்மதி. கழுத்து, முழங்காலில் வலி ஏற்படுமுங்க.
இந்தத் தேதிப் பெண்கள், பொதுவா எல்லா உறவுக்காரங்களோடும் அன்பாகப் பழகணுமுங்க. திங்கட்கிழமை சிவனுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; சிக்கலெல்லாம் சீராகும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
பிள்ளைகளோட பழக்க வழக்கங்களை கவனிங்க. அவங்களுக்கு ஒரு தோழனாக இருந்து மென்மையாக, இதமாக அறிவுரை சொல்லுங்க. குடும்பத்ல தடைகள் நீங்கி, சுபவிசேஷங்கள் சந்தோஷமாக நடந்தேறுமுங்க; நீண்டநாள் தொடர்பில்லாம இருந்த உறவுகளும் புதுப்பிக்கப்படுமுங்க. தொழில், உத்யோகம் எல்லாம் சிறப்பாகவே அமைஞ்சிருக்குங்க. தொழிலில் புது ஒப்பந்தங்கள், புது பாகஸ்தர்கள் சேர்வது, அரசாங்க சலுகைகள், பெரிய மனிதர்களின் ஆதரவுன்னு பல ஆதாயங்களைப் பெறுவீங்க. விடுபட்ட வேண்டுதல், பிரார்த்தனை ஏதாவது இருந்தா அதை நிறைவேற்றிடுங்க. கண் நரம்பு, உணவுக் குழாயில் பாதிப்பு தெரியுதுங்க. வயிற்றில் அமிலச் சுரப்பில் ஏற்படும் கோளாறும் சேர்ந்துக்குமுங்க.
இந்தத் தேதிப் பெண்களோட பேச்சு எடுபடுமுங்க; ஆனா, யாரையும் சபிக்காம பேசணுமுங்க. இளவயதினரின் முயற்சிகள் கைகூடும். சனிக்கிழமை அனுமனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ங்க; அற்புதங்கள் நிகழும்.
மேலும் செய்திகள்
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை
பிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை
பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!