SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலத்தின் மீது சத்தியமாக..!

2021-12-28@ 13:46:52

புத்தாண்டு கொண்டாட்டங்களும் ஆட்ட பாட்டங்களும் களை கட்டுகின்றன. வழிபாட்டுத் தலங்களில் மக்கள் மனம் உருகிப் பிரார்த்திக்கிறார்கள். “இந்தப் புத்தாண்டிலாவது நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்று பிரார்த்தனை செய்யாதவர்களே இருக்க மாட்டார்கள்.எது வெற்றி? யார் வெற்றியாளர்கள்?இந்தக் கேள்விகளுக்குத் தொண்ணூறு விழுக்காட்டினர் சொல்லும் பதில் இதுதான்: “நிறைய பணம்
சம்பாதிக்க வேண்டும்..! மகிழுந்து, வளமனை (பங்களா) என்று சொகுசாக வாழ வேண்டும்...அதுதான்  வெற்றி.”இதுவா வெற்றி? பணம், பதவி, புகழ் என எல்லா வளங்களையும் பெற்றவர்கள்கூட- இன்றைய உலக வழக்கில் சொல்வதானால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்கூட- மன நிம்மதியின்றித் தவிப்பது ஏன்?வசதி வாய்ப்பு உள்ளவர்கள்தாம் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தொலைக்காட்சி நாடகங்களில் ஒரு மணிநேரத்திற்கு ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் விரக்தியால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வீட்டின் நீச்சல்குளத்திற்கு மட்டுமே கோடியில் செலவு செய்யும் வணிக சாம்ராஜ்ய அதிபர்களின் வீடுகளிலும் நிம்மதி இல்லை. சொத்துப் பிரச்னை தகராறுகள்.ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. பணம் புகழ் பதவி-இவை எல்லாம் உண்மையான வெற்றிகள் அல்ல. இவற்றை அடைந்தவர்கள் உண்மையான வெற்றியாளர்களும் அல்லர். அப்படியானால் யார்தான் வெற்றியாளர்கள்?இறுதிவேதம் குறிப்பிடுகிறது.“காலத்தின் மீது சத்தியமாக.மனிதன் உண்மையில் பேரிழப்பில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக் கைகொண்டு, நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத் தை எடுத்துரைத்துக்கொண்டும், பொறுமையைக் கடைப் பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர.”
(குர்ஆன் 103: 1-3)

அதாவது நான்கு பண்புகள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்தாம் உண்மையான வெற்றியாளர்.
1.இறை நம்பிக்கை (ஈமான்)
2.நற்செயல்கள்
3.சத்தியத்தை
எடுத்துரைத்தல்
4.பொறுமையை
அறிவுறுத்துதல்.

இந்த நான்கு பண்புகளின் அடிப்படையில் யார் செயல் படுகிறார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.வெற்றிக்கான இந்த இலக்கணத்தை வகுத்தவன் இறைவன்.
- சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்