இந்த வார விசேஷங்கள்
2021-12-20@ 13:36:03

22.12.2021- புதன்கிழமை -
பரசுராமர் ஜெயந்தி
பரசுராமரை நீதியை நிலைநாட்ட வந்த அவதாரமாகக் கருதுவார்கள். திருமால் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த அவதாரங்களில் ஆறாவது அவ தாரம் பரசுராம அவதாரம். சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் அவர் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை. ஆனால் முதன்முதலாக பரசுராம அவதாரத்தில் தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகின்றார்.இதை ராமானுஜ நூற்றந்தாதி பாசுரம் “கோக்குலமன்னரை ஓர் கூர் மழுவால்
போக்கிய தேவன்” என்று வர்ணிக்கும்.
பரசுராமர் சிரஞ்ஜீவி என்பதால் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திர மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். எங்கெல்லாம் தர்மம் குறைந்து, நலிந்து மக்கள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பரசுராம அவதாரம் நிகழும் என்பார்கள்.கோடரியை ஆயுதமாகக்கொண்ட பரசுராமர் தம்முடைய அவதார காலத்தின் முடிவில் கோடரியை கடலில் வீசினார். அதன் வேகத்திற்கு பயந்து மேற்குக் கடல் பின்வாங்கியது. அப்படி உருவான புண்ணியபூமிதான் கேரள பூமி என்பார்கள்.திருவள்ளம் பரசுராம சுவாமி கோவில் தென்னிந்தியாவின் மிகப் பழமையான கோயில் களில்ஒன்றாகும். இது திருவனந்தபுரத்தின் திரு வள்ளம் அருகே கரமணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பரசுராமருக்கு ஒரே கோயில் இது. பாண்டியன் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட இந்த ஜெயந்தி நாளில் பெரு மாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபடுவதன் மூலம் எண்ணற்ற நற்பலன்களை அடைய முடியும்.
Tags:
பரசுராமர் ஜெயந்திமேலும் செய்திகள்
இந்த வார விசேஷங்கள் : திருஞானசம்பந்தர் குருபூஜை
இந்த வார விசேஷங்கள் :மோகினி ஏகாதசி
இந்த வார விசேஷங்கள் :அட்சய திருதியை
இந்த வார ஆன்மீக விசேஷங்கள்
இந்த வார விசேஷங்கள்
இந்த வார ஆன்மீக விசேஷங்கள்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்