SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2021-12-14@ 12:28:40

14-12-2021 - செவ்வாய்க்கிழமை - பௌமாஸ்வினி

நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு. நாள்கள்  7. ஒவ்வொரு நட்சத் திரத்துக்கும், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விசேஷம் உண்டு. அந்த வகையில் செவ்வாய்க்கிழமையை  மங்களவாரம் என்று சொல்லுகின்றோம். செவ்வாய்க்குரிய ராசிகள் காலச்சக்கரத்தின் முதல் ராசியும் எட்டாவது ராசியும் ஆகும். அதாவது மேஷ ராசியும்,  விருச்சிக ராசியும் ஆகும். முதல் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். கேது பகவானுக்கு உரியது. கேது பகவானை ஜோதிட சாஸ்திரத்தில் ஞானகாரகன் என்று சொல்வார்கள். முதல் ராசியான மேஷ ராசிக்குரிய செவ்வாய்க்கிழமையும், முதல் நட்சத்திரமான அசுவினியும் சேரும் நாள் “பௌமாஸ்வினி” நாள். இந்த அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் வருடத்தின் ஒரு சில நாட்களில் மட்டும் இணைந்து வரும்.  இந்த  அபூர்வமான விசேஷ நாள் கார்த்திகை மாதம் இருபத்தி எட்டாம் தேதி 14.12.2021 வருகிறது.

இந்த விசேஷமான புண்ணிய தினங் களில் தீபத்தை ஏற்றி பூஜித்தால் பல மடங்கு புண்ணிய பலன் கிடைக்கும். அம்பாளின் வழிபாட்டுக்கு மிகவும் ஏற்ற நாள். அன்று அம்பாள் கோயிலில் அர்ச்சனை அபிஷேகம் செய்யலாம். வீட்டில் முக்கியமானநவகிரக ஹோமம் போன்றவைகள் செய்ய அம்பாளுடைய கடாட்சம் கிடைக்கும். அரிதான இந்த நாளில் செய்யப்படும் அனைத்து செயல்களும் மிகச் சீரிய பலன்
களைத் தரும். இந்த நாள் செவ்வாய் தோஷத்தைப் போக்குகின்ற நாள். பூமி லாபம் தருகின்ற நாள். பௌமாச்வினி ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கு உரிய நாளாகவும் கருதப் படுகிறது. இந்த லக்ஷ்மி நரசிம்மரை முப்பத்திரண்டு எழுத்துக்கள் கொண்ட

 ‘‘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்,
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்”

எனும் மூல மந்திரத்தால், முப்பத்தி இரண்டு முறை ஜெபித்து பயன்பெற வேண்டும். அன்றைக்கு ருண விமோசன ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய  கடன் மற்றும் நோய் நொடிகள் தீரும் .செவ்வாய் தோஷத்தால் ஏற்படுகின்ற திருமணத் தடைகள், விபத்து தோஷம் போன்றவை விலகும்.தனலாபம், பூமி லாபம் கிடைக்கும். சொந்த வீடு வாங்க முடியாதவர்கள் இந்த  நாளில் லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி ஆராதனைகள் செய்து பிரார்த்தனை செய்ய பூமி லாபம் கிடைக்கும். விரைவில் அவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படும். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் உடைய ருண விமோசன ஸ்தோத்திர மந்திரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி
ருணமுக்தயே

2. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

3. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

5. ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

6. ப்ரஹலாத வரதம் ஸ்ரீ சம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

7. க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

8. வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

9. ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

இன்னொரு வழிபாட்டு முறையும் இந்த நாளில் பரிந்துரைக்கப்படுகிறது.ஈசானிய மூலையில், அதாவது வடகிழக்கு மூலையில், கோலமிட்டு அதன் மேல் தீபமேற்றி ஒன்பது முறை “துர்க்கா சப்த ஸ்லோகி” பாராயணம் செய்யலாம். ஒவ்வொரு பாராயணம் முடிந்த போதும் ஒரு ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி 9 முறை செய்தால் மிகச்சிறந்த அனுக்கிரகத்தை பெறலாம். சத்ரு பயம் நீங்கும். சரீர பலம் கூடும். யோக நரசிம்மர் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பானகம் நிவேதனமாக வைத்து தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

அந்த நாளில் பராசக்தியை பூஜை செய்து மங்கலப் பொருள்களான மஞ்சள் குங்குமத்தை மற்ற பெண்களுக்கு கொடுக்கலாம். லலிதா ஸஹஸ்ரநாமம், துர்கா சந்திர கலா ஸ்துதி, சௌந்தர்யலஹரி போன்ற தோத்திரங்களைப்  பாராயணம் செய்யலாம்.

15-12-2021 - புதன்கிழமை -
ஷீராப்திசயன விரதம்

திருமாலுக்குரிய பற்பல விரதங்களில் ஒரு முக்கியமான விரதம் ஷீராப்தி சயன விரதம். ஷீரம் என்றால் பால். ஷீராப்தி என்றால் பாற்கடல். திருப் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு உரிய விரதம் இந்த விரதம். கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.இந்த  துவாதசியை “உல்கா துவாதசி” அல்லது  “மத்ஸ்ய துவாதசி” என்று அழைப்பர். இதில் சிறப்பாக செய்ய வேண்டிய பூஜை லட்சுமி நாராயணருக்கு  உரியது. ஆதிசேஷன் மீது, நாராயணனாக திருமகளோடு சயனித் திருக்கும் இருப்பை நினைத்துக்கொண்டே இந்த விரதத்தை இருக்க வேண்டும்.
இந்த விரதத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் உண்டு. பொதுவாக வைணவத்தில் இறைவனின் இருப்பை 5 நிலையாகச் சொல்வார்கள். அதில் இரண்டாவது நிலை ஷீராப்தி சயன நிலை .இந்த நிலைகளுக்கு காரணம் ஒரு பக்தனின் மனதில் இடம் பிடிப்பது தான். இதை பெரியாழ் வார் ஒரு பாசுரத்தில் சொல்லுகின்றார்.

“திருப்பாற்கடலில் நீ பள்ளி கொண்டாலும், உன்னுடைய நோக்கம், என் னுடைய மனதில் வந்து, என்னுடைய மனதையே பாற்கடலாகக் கொண்டு  வாழ்வதே.உனக்கு திருப்பாற்கடலை விட என்னுடைய மனமாகிய பாற்கடல்  தான் விருப்பமானது என்பதை நான் அறிவேன் என்கிறார். அவர் ஸ்ரீ வில்லிபுத்தூரில் வழிபட்டது கூட இந்த ஷீராப்தி சயன நிலை யைத்தான். பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக்கடலில் வாழவல்ல  மாயமணாளநம்பீ!தனிக்கடலே!  தனிச்சுடரே!  தனியுலகே என்றென்று
உனக்கிடமாய்யிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே.

திருப்பாவை இரண்டாவது பாசுரத்தில் இந்த பெருமானை  ‘‘பையத் துயின்ற பரமன் அடிபாடி” என்று பாடுகின்றாள்.திருப்பாவை விரதம் கூட ஒரு வகையில் ஷீராப்தி சயன விரதம் தான்.
இந்த விரதம் இருப்பவர்களின்  மன ஆசைகளை எல்லாம் பகவான் விஷ்ணு மூர்த்தி பூர்த்தி செய்து வைப்பர். விரதம் என்பது பகவானுடைய ஆராதனை தான். இன்று துவாதசி பாரணைக்கு முன், விஷ்ணு மூர்த்தியை துளசியாலும் வாசனையுள்ள  மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். மாலை பள்ளிகொண்ட பெருமாள் கோயில் ஏதேனும் அருகாமையில் இருந்தால், அங்கு சென்று பகவான் ஸ்ரீ மன் நாராயணனை வணங்கி அருள் பெறலாம்.

16-12-2021 - வியாழக்கிழமை - தனுர்மாத பூஜை

இன்று மார்கழி மாதம் பிறந்து விட்டது. இந்த மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கீதையில் கண்ணன் சொல்லி இருக்கின்றான். ஆகையினால் இது 12 மாதங்களில் மிக உயர்வான, ஆன்மீகத்துக்கு வழிகாட்டும், தலை மாதமாகக்  கருதப்படுகிறது. அதனால் வடமொழியில்  மார்கழி மாதத்தை, “மார்க சீர்ஷம்’' என்பார்கள். மார்க்கம் என்றால் வழி. சீர்ஷம் என்றால் தலை. ஆன்மீகத்துக்கு வழிகாட்டும் தலைமை  மாதம் இது. இந்த மாதத்தில் விடியலில் எழுந்து இறைவனை வழிபட வேண்டும்.
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் இந்த மார்கழி மாதத்திற்கு உரிய ஒரு அருமையான தமிழ் பிரபந்தத்தை அருளிச் செய்திருக்கிறாள்.
அந்த பிரபந்தத்திற்கு திருப்பாவை என்று பெயர்.’ மார்கழி மாதத்தின்  பெயரோடு துவங்குகிறது.

நாளுக்கு ஒரு பாசுரமாக 30 பாசுரங்கள் இருக்கின்றன. இந்த பாசுரங்களை திருப்பள்ளியெழுச்சி ஆகவும் பாடுவார்கள். இந்த திருப்பாவையைப்  பாடித்தான்  விஷ்ணு ஆலயங்களில் ஒவ்வொரு பூஜையும் நிறைவு செய்ய வேண்டும். அதிலும்  காலசந்தி ஆராதனையில் திருப்பாவை அவசியம் இடம்பெறும். இந்தத் திருப்பாவை பிரபந்தத்தை கால நியமம் இன்றி எல்லாக் காலத்திலும் சொல்லலாம். திருப்பாவையை உபநிஷத் ஸாரம் என்றும், கோதைத்  தமிழ் என்றும்  அடைமொழி கொடுத்து அழைப்பார்கள். வைணவத்தில் திருப்பாவை என்றால் சைவத்திலும் மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளி
யெழுச்சி  என்று மார்கழி மாதத்திற்கு உரிய பாடல்களைப்  பாடி அருளியிருக்கிறார்.மார்கழியின் விடியல் பனி  வேளையில் இந்தப் பாசுரங்களைப் பாடி திருமாலையும், சிவபெருமானையும் ஆராதிப்பது எல்லையற்ற புண்ணிய பலன்களைத்  தரும்.மார்கழி மாதம் முழுக்கவே இப்பாசுரங்களைப் பாடலாம். வழிபாடு நடத்தலாம்.

16-12-2021 - வியாழக்கிழமை -
பிரதோஷம்

இன்றைய நாள் பிரதோஷ நாள்.  மாதப்பிறப்பும் பிரதோஷமும் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் மார்கழி பிரதோஷம் சாலச் சிறந்தது. இந்த
பிரதோஷ வேளையில் விரதமிருந்து, மாலை சிவபெருமானை வணங்குவதன் மூலமாக சிறந்த  புண்ணிய பலன்களைப்  பெறலாம்.
நினைத்ததெல்லாம் நிறைவேறச்  செய்யும் அற்புதமான வழிபாடு பிரதோஷ வழிபாடு. எல்லாக் காரியங்களிலும் வெற்றியைத் தரும் வழிபாடு.  

இது தவிர இன்றைய நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அனங்க திர யோதசி நாள் என்றும் இந்த நாள் சொல்லப்படுகிறது.  அனங்கன் என்றால் அங்கமில்லாதவன்.மன்மதன் என்று பொருள். திருமணத்தடை உள்ளவர்கள், இந்த நாளில் ரதி மன்மதனை வழிபட்டால் திருமணத் தடங்கல்கள் நீங்கி சீக்கிரம் திருமணம் நடைபெறும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்