SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவித்ரோற்சவம் காணும் குன்னத்தூர் பெருமான்!

2021-12-08@ 14:14:38


வேதங்கள் ஸ்ரீமன் நாராயணனை போற்றுகிறபோது ஸ்ரீமஹா லட்சுமி யையும் சோ்த்தே நமக்கு சொல்கிறது. ஸ்ரீமஹாலட்சுமியுடன் சோ்ந்து இருப்பதே பகவானுக்குப் பெருமை. அதனால்தான்  
“அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமாா்பா” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தவாறு “உன்னை விட்டுச்  சிறிதும் பிரியமாட்டேன்” என வரம் தந்து ஸ்ரீமஹாலட்சுமி யுடன்  நித்யவாசம் செய்து எழுந் தருளியிருப்பவர் எம்பெருமான்.

எம்பெருமானும் பிராட்டியும் சோ்ந்து இருக்கும் உத்தமமான தத்துவம் ஸ்ரீலட்சுமி நாராயணத் திருவடிவமாகும். இந்த திவ்யத் தம்பதிகளான ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீமஹாலட்சுமியும் இக்கலியுகத்தில் நாம் வாழுகின்ற இந்த பூமண்டலத்தில் நமது வசதிக்காக எளிய வடிவமான அர்ச்சாவதாரத் திருமேனிகொண்டு பல புராதனமான திருத்தலங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

அத்தலங்களில் ஒன்று தான் ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயிலாகும். இத்திருக்கோவில் திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள குன்னத்தூர் எனும் திருத்தலத்தில்
உள்ளது.  வரலாற்றில் குன்னத்தூர்10 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயி லுக்குப்  பல்லவ மன்னா்களாலும் சோழ மன்னர் களாலும் பல திருப்பணிகள் செய்து உள்ளனர். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் அரசாட்சி செய்த சுந்தரபாண்டிய மன்னனின் கல்வெட்டு தொல்லியல் துறையினரால்
படியெடுக்கப்பட்டுள்ளது.

குன்னத்தூர் குளம் அருகே உள்ள ஒரு கல்வெட்டு கடல்மல்லை தலசயனப் பெருமாள் வழிபாட்டிற்கு விஜயநகர மன்னன் திருவரங்கன் கி.பி.1579ல் தானம்  அளித்ததைக்  குறிப்பிடுகிறது. இந்த ஊரில் அருள்பாலிக்கும் விநாயகர் ‘‘கமல விநாயகா்” என்று வணங்கப்பட்டதையும் கல்வெட்டின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இத்தலத்திலுள்ள சிவன் கோயில் முன்புறமும் ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது.

ஸ்ரீலட்சுமி நாராயணர் குன்னத்தூர் திருக்கோயிலில் எம்பெருமான் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமான் என்னும் திருநாமம் கொண்டு பேரழகுப் பெருமானாக எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் உற்சவப் பெருமான் ஸ்ரீதேவி ஸ்ரீபூமி தேவி சமேதராக எழுந்தருளியுள்ளார். பெருமானின் தரிசனம் நம் கண்களை விட்டு அகல மறுக்கின்றது. இத் திருக்கோவில் எம்பெருமான் கண்ணை இம்மை காப்பது போல் காண வரும் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. மன்னா்கள் காலம் தொட்டு பல மகான்கள் ஆராதித்த இப்பெருமானுக்கு வருகின்ற 16.11.2021 முதல் 18.11.2021 வரை திருப்பவித்ரோற்சவம் நடைபெறுகிறது.

“பவித்ரோற்சவம்” என்றால்  புனிதப்படுத்துதல் என்று  பொருள் ஆகும். பெருமானுக்கே “பவித்ரன்” அதாவது “புனிதமானவன்” என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. பெருமானுக்கு பூஜைமுறைகளாலும் மந்திர உச்சரிப்புகளாலும் இதர பல காரணங்களாலும் குறைபாடுகள் நேர வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் அந்த தோஷங்களை நீக்கி பரிசுத்தம் செய்யவே பெருமாள் கோயில்களில் “திருப்பவித்ரோற்சவம்” நடத்தப்படுகிறது. இதனை வேத பண்டிதா்களால் திருக்கோயில்களைப் புனிதப் படுத்தும் பிராயச்சித்த பூஜை என்றும் கூறுவர்.

இந்த உற்சவத்தின்போது மூலவருக்கு மட்டுமல்லாமல் உற்சவ விக்ரகங்களுக்கும் சோ்த்து பூஜை செய்யப்பட்ட பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும். இதனால் திருவாராதனம் செய்வதில் ஏற்படும் குறைகளும் நீங்கி மூர்த்தங்களின் சாந்நித்யம் கூடும். குன்னத்தூர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெறும் இந்தப் புனிதமான திருப்பவித்ரோற்சவ நிகழ்வில் கலந்து கொண்டு  நம் மனதில் உள்ள மாசுகளும் குறைபாடுகளும் நீங்கி மனநலமும் உடல்நலமும் செம்மை பெறுவோமாக...

பிரியா மோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்