SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோஷ நிவர்த்தி தலங்கள்

2021-12-08@ 13:22:59

    சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் பகலவனைக் கண்ட பனி போல் விலகுகிறது.
    திருவையாறு-கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திங்களூர். இத்தல சந்திரபகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்கி அவர் வாழ்வில் தண்ணொளி வீசுகிறது.
    மதுரையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திரரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.
    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு கிரக தோஷங்கள் நீங்கிவிடும்.
    64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகியதோ பொன்னான வாழ்வு கிட்டும்.
    சென்னை- மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நதி கொண்டிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பில்லி சூன்ய தோஷங்கள் விலகியோடுகின்றன.
    ஸ்ரீ ரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால் சுக்கிர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.
    காஞ்சிபுரத்தில் அருளும் சித்ரகுப்த சுவாமியை மனமுருக வேண்டினால் கேது கிரக தோஷங்கள் மறையும்.
    காரைக்குடி- மயிலாடுதுறை பாதையில் திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளதிருக்கொள்ளிக்காட்டில் அருளாட்சி புரியும் சனிபகவானை வணங்க சனி கிரக தோஷங்கள் சட்டென மறைந்தோடும்.
    சென்னை அரக்கோணத்திற்கருகே தெற்கு நோக்கி தனிக்கோயில் கொண்டுள்ள வாராஹியை வணங்க, செவ்வாய் கிரக தோஷங்கள் தொலைந்தோடும்.
    சென்னை கும்மிடிப்பூண்டி சாலையில் செங்குன்றத்தை அடுத்துள்ள பஞ்சேஷ்டியில் ஆனந்தவல்லியம்மன் பாதத்தில் உள்ள சப்தசதி மகாயந்திரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த யந்திரத்தில் எலுமிச்சை கனிகள் வைத்து வணங்க திருமண தோஷங்கள் நீங்குகின்றன.
    கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்துகொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.
    சென்னை தாம்பரம் அருகே படப்பை காஞ்சி புரம் சாலையில் உள்ள கண்டிகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஹி, திதிநித்யா தேவிகள் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து  9 வாரங்கள் இவர்களை தரிசிக்க அனைத்து வித தோஷங்களும் நீங்குகின்றன.
    கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலை விலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும், முல்லைவனநாதரும் கர்ப்பத் தடை தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.
    சென்னை ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தரித்திர தோஷம் தொலைந்து வளமான வாழ்வு கிட்டுகிறது.
    திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பெரமண்டூர் அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், 9 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற, அத்தோஷங்கள் தொலைகின்றன.
    நீத்தார் கடன் செய்ய மறந்தவர்கள் அல்லது தவறியவர்கள் காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாளையும் தரிசித்தால் அந்த தோஷங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.
    ஈரோடு திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மும்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னிமரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.
    திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்கு வதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்