SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடக ராசி முதலாளி - முதலாளியே அல்ல குடும்பத்தில் மூத்தவர்!

2021-10-05@ 15:01:51

என்னோட  ராசி    நல்ல    ராசி

கடக ராசிக்காரர்கள் கடக லக்கினக்கார்கள் ஆடி மாதம் பிறந்தவர், ஜூன் இரண்டாம் வாரத்தில் இருந்து ஜூலை இரண்டாம் வாரத்துக்குள் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் முதலாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பின்வரும் பண்புகள் இருக்கும். இனி இவர்களை கடக ராசிக்காரர்கள் என்றே அழைப்போம்.

பொதுப் பண்பு

கடக ராசி என்பது சந்திரனின் ஆதிக்கத்தில் இருப்பதால் சந்திரன் மனோகாரகன் மற்றும் மாதுர்காரகன் என்பதால் கடக ராசிக்காரர்கள் அறிவைவிட மனதின் சொல்படி நடப்பவர்களாக இருப்பார்கள். அது என்ன மனம் அறிவு என்று கேட்கலாம். அறிவு என்பது சமுதாயம் கற்பித்த நெறிமுறைகள் மனம் என்பது குறிப்பிட்ட அந்த நபருக்கு விருப்பமான நெறிமுறைகள். இவர் தன் மனம் போனபடி நடப்பார். ஆனால், மனசறிஞ்சு துரோகம் செய்ய மாட்டார். முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றுவார். குடும்பத்தினரிடம் பாசமாக இருப்பார். அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு நடப்பார். பெரும்பாலும் இவர்கள் தங்கள் குடும்பத் தொழிலையே செய்வார்கள்.

பேச்சைக் குறைப்பீர்! பெருக்குவீர் உழைப்பை!

கடக ராசிக்காரர் ஆண் அல்லது பெண் முதலாளியாக இருந்தால் அந்த நிறுவனத்தை அவர் ஒரு குடும்பம்போல கருதுவார். பணியாட்கள் எல்லோரையும் அண்ணன், அக்கா, அம்மா, சகோ டியுட் ப்ரோ என்றே அழைப்பார். பேர் அல்லது பணியைச் சொல்லி அழைக்க மாட்டார். குடும்பமாகப் பழகுவார். பணியாட்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வார். வெட்டிப் பேச்சுக்களை விரும்ப மாட்டார்.

வேளையில் ஏமாற்றுவது வேலை செய்யாமல் பொழுதைப் போக்குவது, போன்றவை இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார். தவறு என்பதை இவரால் சகித்துக் கொள்ளவே முடியாது.  கவனக்குறைவை மன்னிக்க மாட்டார். எந்தப் பொருளையும் வீணாக்குவதோ அங்கு இங்கு வாரி இறைத்துப் போடுவதோ இவருக்கு மிகுந்த கோபத்தை வரவழைக்கும். எல்லாம் அந்தந்த இடத்தில் இருக்க வேண்டும். வேலை மட்டும் நடக்க வேண்டும். வீண் பேச்சு, கதை, அரட்டை, கேலி, வேடிக்கை விளையாட்டுக்கு அங்கு இடமில்லை.

சிக்கனத்தில் கவனம்

கடக ராசிக்காரர் அனாவசியமாக ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டார். சிக்கனத் திலகம். எதையும் வீணாக்க மாட்டார். காகிதத் துண்டுகளைக் கூட  அதை எடுத்து ஒரு சிறு கணக்குப் போட உதவும் என்று வைத்துக் கொள்வார். கச்சா பொருட்களை விலை பேசி வாங்குவதில் கெட்டிக்காரர். முடிந்தவரை பேசி மற்றவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு குறைந்த விலைக்கு வாங்குவார்.

அதுபோல பொருட்களை விற்கும்போது நல்ல விலைக்கு விற்பார். ஆனால், அநியாய லாபம் பார்க்க மாட்டார். நேர்மை ஒழுக்கம் என்பது இவரது தனியுடைமை. கலப்படம் செய்வது, தரம் குறைந்த பொருட்களை உற்பத்தி செய்வது போன்ற பித்தலாட்ட வேலைகளில் ஈடுபட மாட்டார். தொழில் சுத்தம், கை சுத்தம் என்பது இவரது அக்மார்க் முத்திரை.

திட்டங்களும் முன்னேற்றமும்

தனது நிறுவனத்தை தரத்திலும் உற்பத்தியிலும் உயர்த்த எந்நேரமும் புதுப்புது திட்டங்களை உருவாக்குவார். இவர் கற்பனைத் திறன் மிக்கவர். இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்று கற்பனை செய்து கொண்டே இருப்பார். அதனால் புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுவார். பரீட்சார்ந்த முறையில் சிறிய அளவில் செய்து பார்த்து முடிவு செய்வார். எடுத்த எடுப்பில் அகலக்கால் வைக்க மாட்டார்.

அனுபவஸ்தர்களோடு கலந்து பேசி தனது திட்டங்களை மேம்படுத்த முயல்வார். சிறியவர்களை விட பெரியவர்களை அதிகம் நம்புவார். புதுமை நாட்டம் படைத்தவர். மேலும்... மேலும்... முன்னேற வேண்டும் என்ற தீர்க்கமான சிந்தை கொண்டவர். அதனால் எப்போதும் நிறுவனத்தின் உயர்வு, முன்னேற்றம் குறித்து சிந்தித்தபடி இருப்பார். கடலலை ஓய்ந்தால்தான் இவரது சிந்தனை அலைகள் ஓயும்.

தொழில்கள்

கடக ராசிக்காரர் கற்பனைத் திறனும், கலா ரசனையும் மிக்கவர் என்பதால் திரைத்துறையில் பின்னணி பேசுபவர், வசனகர்த்தா, பாடலாசிரியர் போன்ற பணிகளில் ஜொலிப்பார். கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியம், விளக்கு மற்றும் பூசைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டின் உள் அலங்காரம் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்படைவார்கள்.

கவிதையை விட கதை எழுதுவதில் கெட்டிக்காரர்கள். சீட்டுக் கம்பெனி, நிதி நிறுவனம் வைத்து நேர்மையாக நடத்துவார்கள். சிலர் அச்சகம் வைத்திருப்பார். பெரும்பாலும் குடும்பத் தொழில் குலத்தொழில் செய்வார்கள். உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் அதிகமாக பணியில் அமர்த்துவர்.

நிறைவு

கடக ராசி முதலாளி வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். பணம் சேர்ப்பதில் திறமை சாலி. வேலைக்கேற்ற நல்ல சம்பளம் வழங்குவார். பணியாட்களை குடும்ப உறுப்பினர்களைப்போல பாசத்துடன் நடத்துவார். சம்பளத்தில் சேமிப்பது குறித்து வலியுறுத்தி அதற்கான வழிமுறைகளையும் கற்றுத் தருவார். பிள்ளைகளின் படிப்புக்கு வேலை வாய்ப்புக்கு திருமணத்துக்கு தானே முன்வந்து உதவுவார். மொத்தத்தில் அவர் முதலாளி அல்ல. உங்கள் குடும்பத்தில் மூத்தவர்.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்