SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடக ராசி குழந்தை

2021-10-04@ 17:17:10

என்னோட  ராசி நல்ல  ராசி

கடக ராசி குழந்தை என்று இங்குக் குறிப்பிடு வது கடக ராசி என்பது ஜூன் 21 முதல் ஜூலை 22க்குள். ஆடி மாதம் மற்றும் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்த  ஜாதகத்தில்; கடக லக்கினம் கடக ராசியில் பிறந்த குழந்தையைக் குறிக்கும்.  லக்கினாதிபதி அல்லது ராசியாதிபதி சந்திரனாக இருந்து  அதுவும் வலிமையாக இருந்தால் அந்தக் குழந்தை இங்குக் குறிப்பிடப்படும்
குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்.

பாதுகாப்பு வளையம்
 
கடக ராசி என்பது நிலத்துக்குரிய ராசி. அதன் அடையாளம் நண்டு. நண்டு என்றால் அதன் கொடுக்குகள் தான் நினைவுக்கு வரும். தன்னைப் பாதுகாப்பதிலும் தன் குஞ்சுகளை முதுகில் சுமந்து செல்வதிலும் தனித்தன்மையாக விளங்குவது நண்டு. அது போல கடக ராசியினர் எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருக்கவே விரும்புவர் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.  சேஃபர் சைட் இருப்பதை விரும்புவார்கள். குழந்தைகள் எல்லாம் அலர்ட் ஆறுமுகங்கள் தாம். ஜாக்கிரதையாக இருப்பார்கள் எல்லோரிடமும் சிரித்துப் பழகுவார்கள். தனது வசீகரப் புன்னகையால் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோருக்கும் நண்பராகிவிடுவர்.

கடக ராசிக் குழந்தையைப் பார்த்துவிட்டு யாரும் கொஞ்சாமல் போக மாட்டார்கள். கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் முழு நிலா போல இவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும். கண்கள் பளிச்சென்று இருக்கும் முத்துப்போன்ற பற்கள், வசீகரப் புன்னகை, யாரையும் கவரும் மென்மையான இதமான பேச்சு. இவர்களின் தனிச் சொத்து. இவர்களின் கோபம் ஆழ்கடல் போல அமைதியானது. பட்டென்று வெடித்து விட இவர்கள் மேஷ ராசியும் அல்ல உள்ளே வைத்து பிறரறியாமல் வெளிப்படுத்த மிதுன ராசியும் அல்ல.

எதையும் மறக்க மாட்டார்கள். ஆனால் சொல்லிக்காட்டுவதோ குத்திக் காட்டு வதோ இவர்களிடம் இருக்காது. இவர்கள் மறந்துவிட்டார்கள் என்றோ நாம் நினைத்திருப்போம். ஆனால் மறக்காமல் தக்க தருணம் வரும்போது செயலில் காட்டுவார்கள். பாவம் பயந்த  சுபாவம் கொண்ட குழந்தைகள். எந்தச் சூழ்நிலையிலும் கத்திக் கூப்பாடு போட மாட்டார்கள்.

வளர்பிறை தேய்பிறை

கடக ராசி பொதுவாகவே MOODY TYPE என்போம். அதாவது தேயும் நிலாவைப் போல இவர்களிடம் MOOD SWINGS இருக்கும். அருகில் போய் கொஞ்சினால் அகமகிழ்ந்து எழுந்து உட்கார்ந்து பாடத்தைப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கோபதாபங்கள் திடீர் திடீரென்று மாறி மாறி வரும்.  பாடங்களை மாற்றி மாற்றி படிப்பார். HOBBIES இவர்களுக்கு மாறிக்கொண்டே இருக்கும். ஸ்திர புத்தி இருக்காது. ஒரு நேரம் ஒன்று பிடிக்கும், மறு நேரம் வேறொன்று பிடிக்கும். எதையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ஒரே படிப்பு, ஒரே விளையாட்டு, ஒரே பொழுதுபோக்கு என்பது இவர்களுக்கு சலிப்பூட்டிவிடும்.

அம்மா செல்லம்

அம்மா செல்லம் அதிகம், வளர்ந்த பிறகும் அம்மாவின் சேலையை அருகில் வைத்துக்கொண்டு அல்லது போர்த்திக்கொண்டு உறங்குவது இந்தப் பிள்ளைகளதாம். தாத்தா பாட்டியைவிட  குழந்தை வளர்க்கும் ஆயாவிடம் அதிகம் ஒட்டிக்கொள்வார்கள். அது ஒரு பாதுகாப்புனை, சாமி கதை, புராணக் கதை, சாகசக் கதைகள் கேட்க ஆசைப்படுவர். சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி இவர்களை வளர்க்கலாம்.  சாமி கண்ணைக் குத்தாது என்பது தெரிந்த பிறகும் சாமிக்கு பயந்துகொண்டு தப்பு பண்ண மாட்டார்கள்.

பாசப் பறவைகள்

கடக ராசி குழந்தைகள் மூத்தவராக இருந்தால் அவர் ஒரு அம்மாதான். தாயன்பு செலுத்துவதில் இக்குழந்தைகளை மிஞ்ச ஆளில்லை. பெற்ற தாய்க்கும் அதிகமாக தம்பி தங்கைகள் மீது பாசம் காட்டி பார்த்துக்கொள்வர். தன் தோழியர்  கூட்டத்தை வழிநடத்துவதிலும் தேவைப் படும் சமயத்தில் கண்டிப்பதிலும் தாய் தான். ஒழுக்கம், நட்பு, நேர்மை, கற்பு போன்றவற்றில் இவர்கள் பிடிவாதக்காரர்கள்.  நேர்மை, உண்மை, நீதி, நியாயம், பக்தி, அறம், கொடை என்று பேசுவதோடு நின்றுவிடாமல் அவற்றைச் செயல்படுத்து வதில் தீவிரமாக இருப்பார்கள். சிறு குழந்தைகள்தான் என்றாலும் வளரும் பயிர் முளையிலே என்பதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

பெற்றோர்கள் தப்பு செய்தால் லஞ்சம் வாங்கினால் இவர்கள் மதிக்க மாட்டார்கள். பெரியவர்களாக இருந்தாலும் பட்டென்று எதிர்த்து ஒரு வார்த்தை கேட்டுவிடுவார்கள். இவர்களை வைத்துக்கொண்டு ஒரு அம்மாவோ அப்பாவோ  ‘யார் இந்தக் காலத்தில் ஒழுங்கு? யார் தப்பு பண்ணாமல் இருக்கிறார்கள்? என்று பேசி தங்களின் தவறை நியாயப்படுத்தக் கூடாது. பிறகு அவர்களை மனுஷராகவே இக்குழந்தை மதிக்காது. மௌனமாக தனது புறக்கணிப்பை, வெறுப்பைக் காட்டும். பல நாட்கள் பேசாமல் இருந்துவிடும்.

கலை வித்தகர்கள்

கடக ராசி குழந்தைகள் அழகாக படம் வரைவார்கள். எம்பிராய்டரி, வயர் பின்னல், ரங்கோலி போன்ற கைவினை வேலைகள்  [HANDICRAFT] செய்வார்கள். கதை எழுதுவார்கள். [கவிதை NO] அழகாகக் கதை சொல்வார்கள். சாமி கதை சொல்வார்கள். இசைப்பாடல்கள் கேட்டு ரசிப்பதில் ரசிகர்கள். வாய் பேசுவதில் இருக்கும் ஆர்வத்தை விடக் கேட்பதிலும் இக்குழந்தைக்கு ஆர்வம் அதிகம். வாய் திறந்து பேசினால் ஒவ்வொரு சொல்லும் முத்து முத்தாக உதிர்க்கும். கனியாக இனிக்கும்.

சில சமயம் ஒரே சொல்லில் கனையாகக் கிழிக்கும். சாஸ்திரிய சங்கீதம், பரத நாட்டியம், வீணை, வயலின் போன்றவற்றைக்  கற்றுக் கொள்வார்கள். ஆனால் ‘லைம்லைட்’ டுக்கு வரத் தயங்குவார்கள் INTROVERT என்று சொல்லலாம். முத்துச்சிப்பி போல் இருப்பார்கள். குளிர்ச்சியாக ஒளி வீசியபடி அழகாக மென்மையாக அதிகப் பகட்டு மினுமினுப்பு இல்லாமல் அழுத்தமாக, தெளிவாக இருப்பார்கள். தெய்வக் குழந்தை போலக் காட்சி  தருவார்கள். சந்திரனின் சோபை அந்த மந்தகாச அழகைத் தரும்.

நினைவாற்றல்

கடக ராசிக் குழந்தைக்குப் பாடம் நினைவில் இருப்பதை விட வீட்டில் வெளியில் நடந்த கேட்ட சம்பவங்கள் அனைத்தும் என்றும் நினைவில் இருக்கும். வாழ்க்கையைக் கற்பதில் கெட்டிக்காரக் குழந்தை இது. மனிதர்களை ஆராய்ந்து வகைப்படுத்தி வைத்திருக்கும். நல்ல நீதிபதி, ஒவ்வொருவரையும் சரியாக எடைபோட்டு மனதிற்குள் வைத்துக்கொள்ளும். கடக ராசிக் குழந்தையை ஏமாற்ற முடியாது. அன்று சொன்னது இன்று சொல்வது எல்லாம் அதன் மனதில் இருக்கும். குழந்தை தானே விளையாட்டில் மறந்திருக்கும் என்று பெரியவர்கள் நினைத்தால் அவர்கள் முட்டாள்கள்.

கேலியாக சிரிப்பது, கெக்கலிப்பது, நையாண்டி பேசுவது, கிண்டலடிப்பது போன்றவை இக்குழந்தையிடம் இருக்காது. ஆனால் கண்ணுக்கு கண் அழுத்தமாக ஒரு பார்வை பார்க்கும்; தப்புச் செய்தவர் பெரியவரோ குழந்தையோ தலை குனிந்து நிற்பார். தவறு செய்துவிட்டால் மன்னிப்பு கேட்பது இக்குழந்தையின் மாண்பு. அதை மற்றவரிடமும் எதிர்பார்ப்பது அதன் பண்பு. ஒரு நாளைக்கு 100 முறை சாரி, தேங்க்ஸ் சொல்லிக்கொண்டே இருக்கும். தங்கள் கார் டிரைவர், பஸ் கண்டாக்டர். ஓட்டல்காரர், அப்பா ஆபீஸ் பியூன் என எல்லோரிடமும் சாரி, தேங்க்ஸ் என்று சொல்லத் தயங்காது.

PUBLIC ETIQUETTE திலகம். யாரும் சொல்லித் தராமலேயே அடுத்தவர் உணர்வைப் புரிந்துகொள்வதன் மூலமாக இக்குழந்தை இச்சிறந்த பண்புகளைக் கற்றுக்கொள்ளும். எல்லோரையும் அண்ணா, அக்கா என்று அழைப்பதை இக்குழந்தை விரும்பும். பெரியவர்களை வேலைக்காரர்களை பெயர் சொல்லி அழைப்பதை விரும்பாது. பெரியவர்கள் தவறான பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தாலும் அதைச் செய்யாது. தவறு எனத் தெரிந்தாலும் பதவி பணம் அதிகாரத்துக்காக தப்பு செய்யும் பெரியவர்களுக்கு இக்குழந்தை ஒரு ஆசான் ஆகும்.

கல்வி நிலையத்தில்

கடக ராசி குழந்தைக்கு கணக்கு மற்றும் அறிவியலை விட சோஷியல் ஜியாக்ரஃபி, வரலாறு போன்றவை அதிகம் பிடிக்கும். இலக்கி யத்தில் தனி ஈடுபாடு உண்டு. குரூப் ஸ்டடி நடக்கும் போது கடக ராசிக் குழந்தை ஆசிரியராகி மற்ற குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும். அழகாகச் சொல்லித் தரும். ஆசிரியரை விட இக்குழந்தையிடம் பாடம் கேட்பது எளிதாக விளங்கும். கண்டிப்புடன் நடந்து கொண்டு தன் குரூப் பிள்ளைகளைப் படிக்க வைக்கும். தன குழு அல்லது தோழியர்  கூட்டத்துக்கு ஒரு ‘லீடராக’ இல்லாமல் முன் மாதிரியாகத் திகழும்.

இக்குழந்தைக்கு சிறு வயது முதல் ரசிகர் கூட்டம் இருக்கும். அன்னை மீனாட்சி போல தன் கண் அசைவிலேயே தனது தோழர் தோழியரை ரசிக ரசிகையர்களை கட்டுப்பாடாக வைத்திருக்கும். மேடையில் நாடகம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தும் போது கடக ராசி மாணவி மாணவர் இயக்குனராக வழிகாட்டியாக [OFF STAGE] இருப்பார்கள். நிகழ்த்து
கலைஞராக [PERFORMER OF ARTS] மேடையில் தோன்றுவதில்லை.

சிக்கனம் தேவை இக்கணம்

கடக ராசி குழந்தைகள் வெளியில் அது இது என்று வாங்கித்தின்ன ஏங்க மாட்டார்கள். அம்மா சமைத்துக் கொடுப்பதில் அளவற்ற ருசி காண்பர். கடைத் தீனி வாங்கித் தின்ன காசு கேட்க மாட்டார்கள். பாக்கெட் மணியை சேமித்து வைத்து அம்மா பிறந்த நாளுக்கு அன்பளிப்பு வாங்கி கொடுத்து மகிழ்வார்கள். தன் தோழர் தோழியர் பிறந்த நாள் என்றால்  அழகான  கிஃப்ட் செய்து கொடுப்பர். தானே வரைந்த பானை ஓவியம், கண்ணாடி ஓவியம் என்று விதவிதமாக ‘ஆர்ட்’ வேலைகள் செய்து பரிசளித்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவர். பணம் கொடுத்து வெளி கடைகளில் ஒரு பொருள் வாங்குவதோ தின் பண்டம் வாங்குவதோ இக்குழந்தைக்கு அறவே பிடிக்காது. தேவை தேவை என்று அலையும் மனம் இருக்காது.

பொதுநல விரும்பி

கடகராசி குழந்தை பொதுநலம் நாடும் குழந்தை என்பதால் தன் நலம் என்பதை விட பெற்றோர், உறவினர், சகோதரர், நண்பர், அடுத்த விட்டுக்கார குழந்தை, அடுத்த நாட்டுக் குழந்தை  என எந்நேரமும் பலரது கவலைகளை கஷ்டங்களை நினைத்து இவர்கள் மனம் வருந்திக்கொண்டே இருக்கும். இவர்கள் கண்ணில்  கண்ணீர் வருகிறதென்றால் அது இவர்களுக்காக வருவதை விட அடுத்தவர்களுக்காக வருவதே அதிகம். இவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் மழை போலக் கொட்டும்.

புகழ் எனின்  உயிரும் கொடுப்பர்
பழி எனின் உலகுடன் வரினும் கொள்ளலர்


என்ற புறநானூற்று வாக்கிற்கிணங்க வாழும் சங்ககாலக் குழந்தை இது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்