SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடக ராசி - பொதுப்பண்புகள்

2021-08-24@ 17:03:00

என்னோட  ராசி நல்ல ராசி

யாருக்கு இப்பலன் பொருந்தும்?

கடக ராசியின் பொதுப் பண்புகள் பின் வரும் வகையில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர்களுக்குப் பொருந்தி வரும். ஜூன் 21 முதல் ஜூலை 22க்குள் பிறந்தவர்கள்கடக ராசியில் பிறந்தவர்கள் [ராசியாதிபதியான சந்திரன் வலுவாக இருந்தால்] கடக லக்கினம் கொண்டவர்கள் [லக்கினாதிபதியான சந்திரன் வலிமை பெற்றிருந்தால்] கடக ராசி தண்ணீர் ராசி. சந்திரன் இதன் அதிபதி. நண்டு இதன் சின்னம்.
 
கடக ராசிக்காரர்களின் மனநிலை

கடக ராசிக்காரர் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவர்கள். நடக்காததெல்லாம் நடந்துவிடுமோ என்றெண்ணி அஞ்சுவார்கள். ரொம்ப சென்ட்டிமென்ட் பார்ப்பார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்கள். சீக்கிரம் அழுதுவிடுவார்கள். உடனே சமாதானமாகியும் விடுவார்கள். வீட்டுக்குள் இருப்பதைப் பெரிதும் விரும்புவார்கள். வெளியிடங்களுக்குச் செல்வதை அதிகம் விரும்ப மாட்டார்கள். வெளியாட்கள் யாரையும் சீக்கிரம் நம்ப மாட்டார்கள். நம்பிவிட்டால் அவர்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள். வீட்டில் தெரிந்தவர்களுடன் இருப்பதே பாதுகாப்பு என்று நம்புவார்கள். பாதுகாப்புணர்வும் அது குறித்த பயமும் இவர்களுக்கு அதிகம்.

ஆண்கள் என்றால் சொந்த ஊரில் இருப்பதற்கே முன்னுரிமை கொடுப்பார். வெளியூர் வேலைகளுக்குப் போனாலும் சீக்கிரம் திரும்பி வந்து அம்மா மடியில் படுத்துக்கொள்வார். ‘அம்மா பிள்ளை’ எனலாம். இவர்களுக்குத் தாய்ப்பாசம் அதிகம். இவர்கள் வாழ்வில் தாயின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.  திருமணமாகிச் சென்ற கடக ராசிப் பெண்கள் அம்மா வீட்டையே சுற்றிச்சுற்றி வருவார்கள். அடிக்கடி வந்து போகும் தூரத்தில் திருமணமாகிப் போவதையே விரும்புவர்.

சந்திரன் மனோகாரகன் என்பதால் இவர்களுக்கு சந்தேக புத்தி இருக்கும். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். நட்பு என்பதை கற்பைப் போலப் போற்றுவர். ஆனால் யாரிடமும் நட்பு கொள்ள மாட்டார்கள். இரவும் பகலும் சந்திரன் இரவுக்குரிய கிரகம் என்பதால் கடக ராசியினர் இரவில் உற்சாகமாக இருப்பர். தேய்பிறை , வளர்பிறை போல இவர்களின் மனநிலை மாறிமாறி வரும். பெரும்பாலும் கற்பனைகளில் மூழ்கியிருப்பர். சில சமயம் விபரீத கற்பனைகளில் மூழ்கி அலுத்து தவிப்பதும் உண்டு. பகலில் சோர்வடையும் இவர்கள் இரவு முழுக்க விழித்து வேலைகளை முடித்து விடுவார்கள்.

வெளிச்சமும் விளம்பரமும் இவர்களுக்கு அலர்ஜி. இவர்கள் மீது ஸ்பாட் லைட் வெளிச்சம் படுவது பிடிக்காது. பலர் முன்னிலையில் வந்து தம்மை தமது அழகாய் திறமையை புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. கடுமையாக உழைத்தாலும் அதன் பலனை அனுபவிக்க விரும்புவதில்லை. தான் நேசிக்கும் ஒருவருக்காக உழைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவர்.

தாய்மைப் பண்பு

சந்திரன் மாதுர்காரகன் என்பதால் சந்திரனின் ராசியில் பிறந்த இவர்கள் தாய்மைப் பண்புடன் திகழ்வார். எல்லோருக்கும் நன்றாக சாப்பாடு போட்டு சாப்பிட வைத்துப் பார்ப்பதில் அலாதிப்பிரியம் இவர்களுக்கு உண்டு. நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் தாய் போலக் கவனித்துக் கொள்வதே இவர்கள் வாழ்வின் லட்சியமாக இருக்கும்.

காதல் மற்றும் உறவு

கடக ராசிக்காரர்களுக்கு தன்னை நம்பியவர்களை நட்டாற்றில் விடும் பழக்கம் கிடையாது. தன்னை நம்பி வந்த வரை ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களை வசதியாக சிறப்பாக வைத்து கவனித்துக் கொள்வர். கடக ராசிக்காரரை கணவனாகவோ மனைவியாகவோ நண்பராகவோ நண்பியாகவோ பெற்றவர்கள் வாழ்க்கையில் கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் யாரையும் லேசில் நம்புவது கிடையாது. எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து சற்று தள்ளியே வைப்பது வழக்கம். தெரியாதவர்களிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் தனக்கு வேண்டியவர் என்று முடிவு செய்துவிட்டால் பிறகு அவருடைய நன்மை தீமைகளில் முழு பங்கு எடுத்துக் கொள்வர். கடக ராசிப் பெண்கள் வீட்டை கோயில் போல வைத்திருப்பார்கள். ஆண்கள் அழகு படுத்தி மியூசியம் போல வைத்திருப்பார்கள். காதல் தோல்வியை இவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது துவண்டு போவார்கள். தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. சிலருக்கு போதை பழக்கம் தொற்றிக் கொள்ளும் சிலருக்கு பைத்தியம் பிடித்து விடும். லுனடிக் lunatic[lunatic] என்ற சொல்லின் வேர்ச்சொல்லான lunarலூனார் [lunar] என்பது. சந்திரனைக் குறிக்கும்.

சிலர் சாமியார் அல்லது சந்நியாசி  ஆகிவிடுவார் ‘‘ஏறுக்கு மாறாக மனைவி வாய்த்தால், கூறாமல் சந்நியாசம் கொள்’’ என்று அவ்வையார் பாடியது கடக ராசிக்காரர்களைப் பார்த்துதான் என்று உறுதியாக சொல்லலாம். கடக ராசிக்காரர்கள் உண்மை விரும்புவார்கள். உண்மையைக் கண்டறியும் திறமை படைத்தவர்கள். புரளிகளை வதந்திகளை கேட்டு முடிவெடுப்பது கிடையாது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி உண்மை அறிவார்கள். இவர்களிடம் யாரும் பொய் சொல்லி விட்டு தப்பிக்கவே இயலாது. மனம் சோர்ந்திருந்தால் நண்பர்களை அழைத்துப் பேசி தன் மனதை தானே தேற்றிக் கொள்வார்கள்.

இவர்களை சமாதானம் செய்யவும் சந்தோஷப்படுத்தவும் காசு, பணம், பொருள் எதுவும் தேவையில்லை, மனங்குளிரப் பேசினால் போதும் பேச்சில் சர்க்கரையாகக் கரைந்து விடுவார்கள். அன்பை செயல்களின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவார்கள். கடக ராசி ஆண்கள், பெண்கள் யாரையும் வெளித்தோற்றம் கண்டு அல்லது பணம்  பதவி  செல்வாக்கு அதிகாரம் கண்டு மதிப்பதோ நேசிப்பதோ கிடையாது. இவர்கள் ஆத்தும நேசர்கள்.

கற்பனையிலேயே பல ஆண்டு கால வாழ்க்கையை வாழும் தன்மை கொண்டவர்கள். நண்பர்கள்  உடன் பிறந்தவர், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், காதலி அல்லது காதலரிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவார்கள்.  ரொம்ப பொசஸிவாக இருப்பார்கள்  எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்  இவர்கள் பட்ட துயரம் ஆறாத ரணமாகவே உள்ளுக்குள் இருக்கும்.  எப்போதும் வேதனையைச் சுமந்து கொண்டே இருப்பார்கள்.  ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

பனிப்பாறை போன்றவர்

கடக ராசிக்காரர்கள் ஜோக் அடித்தால்கூட சிரிக்க மாட்டார்கள். நகைச்சுவை சேனல் நிகழ்ச்சிகளை மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார். சத்தம் போட்டு வாய் விட்டு கலகலவென்று சிரிக்க மாட்டார்கள். அடக்கமானவர்கள் ஆழ் கடல் போன்றவர்கள் யார் போய் நெருங்கி இவர்களிடம் பேசினாலும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு விலகிக் கொள்வர். கொஞ்சம் பழகி அவரது நம்பிக்கையைப் பெற்று விட்டால் பிறகு மெழுகாக உருகிவிடுவர். இவர்கள் கடலில் மிதக்கும் பனிப் பாறை போன்றவர்கள். வெளியே இருந்து நாம் பார்க்கும்போது குறைவாகத்தான் தெரியும் அதைக் கொண்டு அவர்களை நாம் மதிப்பிடக் கூடாது.

உள்ளே நிறைய திறமைகள் பொதிந்திருக்கும். இவர்கள் உருகினால் நீர். இறுகினால் கல். பெண்ணின் மனத்துக்குள் இருப்பதை யாராலும் கணிக்க இயலாது ஆழ் கடல் போன்றது என்று சொல்வது கடக ராசிக்கார ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். அன்பை கொட்டி குவிப்பார்கள். அந்நாள் யாருக்கு என்பதை அவர்களே முடிவு செய்வர். குடும்பத்தினருக்கு தம் கடமையை நிறைவேற்றுவதால் இவர்கள் அவர்களை நேசிக்கிறார்கள் என்பது அர்த்தம் கிடையாது அது கடமை. ஆனால், அன்பு, பாசம், நேசம் என்பது யாரோ ஒரு ஏழைக் குழந்தையிடம், ஒரு வயதான பெரியவரிடம், வளர்க்கும் கன்றுக் குட்டியிடம் பசுவிடம் கூட இருக்கலாம்.

வேலையும் தொழிலும்

கடக ராசிக்காரர்கள் வேலையை சம்பளத்துக்காகப் பார்க்க மாட்டார். உயிரைக் கொடுத்து வேலை செய்வார். உளப்பூர்வமாக உழைப்பார். பொய், ஃபிராடு, பித்தலாட்டம் என்பது இவரிடம் இருக்காது. போய் சொல்பவரைக் கண்டால் இவருக்குப் பிடிக்காது. சூதுவாது வஞ்சகம் கண்டு அஞ்சுவார். அவர்களை வெறுப்பார். இவருக்கு பொய்யைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. இவரிடம் யாரும் ஏமாற்ற முடியாது. இவரும் யாரையும் ஏமாற்ற மாட்டார். தொண்டுள்ளம் கொண்டவர்.

எனவே, பசி, தூக்கம், ஓய்வு இல்லாமல் உழைப்பதால் இவர்களை சேவை மனப்பான்மை தேவைப்படும். மருத்துவம் முதியோர் இல்லம் அநாதை இல்லம் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு ஏற்றவர்கள். கற்பனைக்கு இடம் கொடுக்கும் கலைத் தொழிலுக்கு, ஓவியம், காவியம், நாட்டியம், நாடகம், சினிமா துறைகளுக்கு ஏற்றவர்கள். இவர்கள் தமது வேதனைகளையும் களைப்பையும் மறைத்துக் கொள்வார்கள். வீட்டில் பூகம்பம் வீசினாலும் வெளியே ஆழ்கடல் போன்ற அமைதியுடன் செயல்படுவார்கள். மொத்தத்தில் கடக ராசிக்காரர்கள் தியாக சீலர்கள்; ஆகாயசஞ்சாரிகள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

 • tajmahal-love

  தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்