SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிதுன ராசி முதலாளி

2021-08-03@ 16:52:16

மொழி முக்கியம்  

மிதுன ராசி  முதலாளி பணித்தளத்தில் யாரும் கெட்ட வார்த்தைகள், வசை சொற்கள், சாபம் விடுதல் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் போன்றவற்றை அனுமதிக்க மாட்டார். அப்படி பேசுகிறவர்களை உடனே பணியில் இருந்து நிறுத்தி விடுவார். வார்த்தைகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பார். யாரையும் மனம் புண்படும்படி இவரும் பேச மாட்டார். அடுத்தவர் பேசினாலும் சகித்துக்கொள்ள மாட்டார். பல் மொழி அறிவை விரும்புவார். அதை ரசிப்பார். வேற்று மொழி பெண்கள் ஆண்களை வேலைக்கு சேர்ப்பார். அவர்களிடம் ஆங்கிலத்தில் இந்தியில் மலையாளத்தில் என பல மொழிகளில் கமென்ட் அடிப்பார். ஜோக் சொல்வார். அதை சற்று லேட்டாக புரிந்து கொண்டு சிரிக்கும் ஆட்களை குறிப்பாக பெண்களை ரசிப்பார். இவர் பேசி கவிழ்த்துபவர் கிடையாது. ஆனால் இவரது அறிவார்ந்த பேச்சுக்களை ரசிக்கும் ஆட்களை பாராட்டி மகிழும் நண்பர்களை அருகில் வைத்திருப்பார். அது ஜால்ரா கோஷ்டி கிடையாது. சொல் விளையாட்டை ரசிக்கும் கூட்டம். அவ்வளவு தான்.  

பணிவும் துணிவும்

மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் பணிவான ஆண்களையும் துணிவான பெண்களையும் விரும்புவர். பணிந்து செல்லும் ஆண்களிடம் இவர் பராக்கிரமசாலி போல நடந்துகொள்வார். துணிச்சலான பெண்களிடம் ரொம்ப பயந்த சுபாவம் போல காட்டிக்கொள்வார். ஆனால் பொதுவில் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார். சண்டை சச்சரவுகளைக் கண்டால் ஒதுங்கி போய் விடுவார். அடிதடிகளுக்குப் பயந்தவர்.  ஆனால் எதிரிகளை அறிவால் அடித்து வீழ்த்துவார். எந்த தலைப்பு பற்றியும் இவரால் பேச முடியும். அடிப்படை விஷயங்களை அறிந்து வைத்திருப்பார். அப்டேட்டாகவும் இருப்பார்.

இவர் அக்கறையோடு பேசுவதை கேட்டு பணிப்பெண்கள் இவர் தன் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்று தவறாக நினைத்துவிடக் கூடாது. அப்படி அவர் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் இவர் பாராட்டால் மகிழ்ந்து இன்னும் சிறப்பாக வேலை செய்வார்கள். வேறு நிறுவனங்களில் அதிக சம்பளம் கிடைத்தாலும் அதற்கு ஆசைப்பட்டு போக மாட்டார்கள்  என்பதை அறிந்து தெரிந்து இவர் பாராட்டி மகிழ்கிறார் அவ்வளவு தான்.

காதல் கத்திரிக்காய் எதுவும் இவர் வாழ்க்கையில் கிடையாது எல்லாமே ஒரு கணக்கு தான். வாழ்க்கையை வசதியாக வாழ வேண்டும். துன்பம் தொல்லைகள் வேண்டாம். தியாகம், தொண்டு, சேவை போன்றவை இவர்களுக்கு அர்த்தமற்றவை. இவற்றால் ஏதேனும் லாபம் உண்டென்றால் அதனை செய்வதில் ஓர் ஆட்சேபனையும் இல்லை.

பெண் முதலாளிகள்

மிதுன ராசி முதலாளிகளாக இருக்கும் பெண்களும் ஆண்களை போல கொஞ்சம் தெனாவட்டாக நடந்து கொண்டாலும் பணிவு தேவைப்படும் இடத்தில் பத்மினி, சரோஜாதேவியைக் காட்டிலும் பணிந்து  நடிப்பார்கள். இவர்களும் இரட்டை குணம் படைத்தவர்கள் தான். இதமாக  பேசி கனிவாக நடந்து கொள்ளும் இவர்கள் வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள். நல்ல வேலைக்காரர்களை பலர் முன்னிலையில் மனமார பாராட்டி மகிழ்வர். அவர்கள் குடும்பத்தோடு உறவு கொண்டாடுவர். பின்னர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஏதேனும் வேலை கொடுத்து நன்றிக்கடனால் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் கட்டிப் போடுவர்.

அந்தக் குடும்பமே இவரது ஆதரவில் முன்னுக்கு வரும்.  இப்படி இரண்டு மூன்று கொத்தடிமைகள் வைத்திருப்பார். கற்றவருக்கு செல்லுமிடம் எல்லாம் சிறப்பு  என்ற திருவாக்கு இவர்களை பார்த்தால் புரியும். இப்பெண்கள் எந்த நாட்டுக்கு எந்த காட்டுக்கு சென்றாலும் அங்கும் ஒருவர் இவரை வரவேற்க  பூச் செண்டுடன் காத்து நிற்பார். ஆட்களை பழகி வைப்பதில் இவர்களை மிஞ்ச பன்னிரு ராசியிலும் ஆள் இல்லை.

மந்திரச் சாவி

மிதுன ராசி பெண்கள் நல்ல LISTENERS. அடுத்தவர் பேசுவதை பொறுமையுடன் கேட்பார்கள். அதிலேயே அவர்களின் மனதை கவர்ந்து விடுவர். முதலாளியம்மா நம்முடைய பேச்சை ஆலோசனையை காது கொடுத்து கேட்கிறாரே என்று பணியாளர் மகிழ்ந்து போவர். அந்த GAPஇல் அவர் கண நேரம் மகிழ்ந்திருக்கும் வேளையில் தான் நினைத்ததை சொல்லி அதை செய்ய வைத்துவிடுவர். இவர்களின் வார்த்தைகள் மந்திர சாவி. அதைக் கொண்டு எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். எந்த ரகசியத்தையும் இவர்கள் நயமாக பேசி வெளியே கொண்டுவந்து விடுவர். இவர்களின் வார்த்தைகளுக்குப் பணியாளர் கட்டுப்படுவர். இவர்களைப் பார்த்தாலே இவர்களின் அகன்ற நெற்றியும் உணர்ச்சிகள் மின்னி மறையும் கண்களும் இதமான விசாரிப்பும் கனிவான பேச்சும் காண்பவரை கட்டிப் போட்டுவிடும்.

பேசச் சொல்லி சிரிப்பார்

மிதுன ராசி முதலாளிகள் யாரையாவது வேலையை விட்டு நிறுத்த வேண்டும் என்றால் முதலில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்டு  ஆதாரத்தைத் தயார் செய்துகொண்டு அதன் பிறகு எழுத்து மூலமாக டெர்மினேஷன் நோட்டீஸ் அனுப்புவர். கூடுமானவரை அந்தப் பணியாளரை நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பர். நேரில் சந்தித்தால் அவரது கடிதத்தில் இருப்பதை அவர் ஒப்புதலை பொறுமையாக வாசித்துக் காட்டி அவர் வெளியேற்றப்படுவதற்கு அவரே காரணம் என்று நம்ப வைத்து அமைதியாகப் பேசி வாழ்த்தி அனுப்புவர். தன் மீது கோபம் வராதபடி நடந்துகொள்வார்கள். வெளியே எங்கே அவர்களைப் பார்த்தாலும் அன்பாக விசாரிப்பார்கள். மனதுக்குள் எவ்வளவு கோபம் வெறுப்பு இருந்தாலும் மிதுன ராசி ஆண்களும் பெண்களும் அதை வெளியே காட்டுவதில்லை. அடுத்தவரை கொண்டு கேலி செய்து அதற்கு சிரிப்பார்கள். தான் நேரடியாக கேலி செய்வதோ திட்டுவதோ கிடையாது. அடுத்தவரைப் பேச விட்டு ரசிப்பார்.

நிறைவு

மொத்தத்தில் மிதுன ராசி முதலாளி நல்ல அறிவாளி, கடும் உழைப்பாளி [ஆனால் எப்போதாவது மட்டுமே இப்படி உழைப்பார்], பேச்சுத் திறன் படைத்தோர், பல் மொழி தேர்ந்தோர், வார்த்தை ஜாலம் மிகுந்தவர், பல திறன்கள் உடையவர், வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார். சிறிய நிறுவனத்தை தொடங்கி பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவார். கோடீஸ்வரர் வீட்டில் பெண்ணும் எடுப்பார்.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

 • cryingroom-19

  இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்