SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீமையை நன்மையால் வென்றிடு

2021-07-16@ 15:50:15

டோரா பக்தியும், பண்பும் நிறைந்த பெண், சிறுவயது முதலே பிறர்க்கு உதவி செய்யும் பண்பு கொண்டவள். அவள் குணத்திற்கு ஏற்ற தொழிலும் அவளுக்குக் கிடைத்தது. ஆம்! அவளது ஊருக்கு அருகில் இருந்த கிராம சுகாதார மையத்தில் செவிலியராக பணிசெய்யும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. பணி செய்யுமிடத்திற்கு செல்லும்போதும், வரும்போதும், பணி செய்யும் இடத்திலும் கிறிஸ்துவின் அன்பைப் பற்றி பிறருக்கு எடுத்துரைப்பதை அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள், அவ்வூரில் இருந்த ஒரு இளம் வாலிபனுக்கு டோராவின் இச்செயல் எரிச்சலைத் தந்தது. ஒரு நாள் டோரா சுகாதார மையத்திலிருந்து வீட்டிற்கு செல்கையில், அந்த இளம் வாலிபன் கல் ஒன்றை எடுத்து, மிகுந்த கோபத்துடன் டோராவின் நெற்றியில் பட எறிந்தான். டோரா வலி தாங்க முடியாமல் துடித்தாள். இரத்தம் வடிந்துக் கொண்டேயிருக்க டோரா, தன் மீது கல்லெறிந்த நபருக்காக பிரார்த்தனை செய்துகொண்டே இல்லம் சென்றாள்.

சில நாட்கள் சென்றன. அவ் வூரில் நடந்த வாகன விபத்து ஒன்றில் இரண்டு இளம் வாலிபர்கள் காயமடைந்தனர். அவ்வாலிபர்கள் டோரா பணி செய்த சுகாதார மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவ்விரு வருக்கும் டோரா முதலுதவி செய்தாள். அடுத்த நாள் இருவருக்கும் காயம் கட்டுவதற்காக டோரா செல்கையில் இருவரில் ஒருவன், டோராவின் நெற்றியிலுள்ள தழும்பைக் கண்டு இதயம் நொறுங்குண்டவனாக அக்கா, சில மாதங்களுக்கு முன்பு உங்கள் மேல் கல்லெறிந்தவன் நான்தான் என்று தழுதழுத்த குரலில் கூறினான். இதைக் கேட்டு டோரா தன்மீது கோபங் கொள்வாள் என்று எண்ணினான். ஆனால், டோராவோ அவன் மீது சற்றும் கோபமின்றி, தம்பி! உன்னை நேற்றே அடையாளம் கண்டு கொண்டேன் எனக்கூறி, ஒன்றுமே நடைபெறாதது போல, அந்த இளம் வாலிபன் மீது எந்தவொரு மனவருத்தமுமின்றி, மற்றொரு இளம் வாலிபனுக்கு காயம் கட்டுவதற்குச் ெசன்றாள். டோராவின் இச்செயல், அந்த இளம் வாலிபனுடைய உள்ளத்தை நெகிழச் செய்தது.

நடைமுறை வாழ்வில் வெற்றி பெறுவது என்பது பிறரை தோல்வியடையச் செய்வதாகும். ஆனால், ஆன்மிக வாழ்வில் வெற்றி பெறுவது என்பது நமக்குத் தீமை செய்தவரை தோல்வியடையச் செய்வதல்ல; மாறாக, தீமை செய்தவருக்கு நன்மை செய்து, அவரது உள்ளத்தை வெற்றிக் கொள்வதே ஆகும்.இந்த உண்மையை விளக்கும் திருமறைப்பகுதி ஒன்றைக் காணலாம். இஸ்ரவேல் நாட்டை சவுல் என்னும் அரசர் ஆட்சி செய்து வந்த காலம் அது. அவரது படை வீரர்களில் தாவீது என்னும் வாலிபன் மிகவும் பேர் பெற்று விளங்கினான். இதனால் சவுல் அரசருக்கு அவன்மீது, ஏனோ வெறுப்பு ஏற்பட்டது. எனவே, தாவீதைக் கொல்வதற்கு பல நேரம் முயற்சித்தார். எனினும் தாவீது, கடவுளின் பேரருளால் ஒவ்வொரு முறையும் உயிர் பிழைத்துக் கொண்டார். மேலும், சவுல் அரசரை கொலை செய்யும் வாய்ப்பு ஒன்றும் அவனுக்குக் கிடைத்தது. எனினும் தாவீது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல், சவுல் அரசரை பிழைக்கச் செய்தான். இவ்வுண்மையை அடுத்த நாள் காலையில் உணர்ந்து கொண்ட சவுல் அரசர் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே,
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் (சாமுவேல் 26:5) என்று ஆசீர்வதித்தான் என்று திருமறை கூறுகிறது.
ஆம்! அன்பானோரே! தீமைக்கு தீமை செய்வது உண்மையான வெற்றியல்ல. தீமையை நன்மையினாலே வெல்லு (ரோமர் 12:21) என்று திருத்தூதுவர் பவுல் கூறுகின்ற வண்ணம் நன்மை செய்வதே தீமை செய்தோரை வெல்வதற்கான வழியாகும். எனவே நன்மை செய்வோம்! தீமை வெல்வோம்!

Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம்,
பேராயர், தூத்துக்குடி -
நாசரேத் திருமண்டலம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்