SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்

2021-07-12@ 15:46:22

விநாயகர் கவசம் -1

என்னதான் மிக தைரியமானவனாக இருந்தாலும் ஒரு போர்வீரன் போர்புரியும் போது இரும்பு (அ) செப்பிலான கவசத்தை தன் உடலின் மீது அணிந்து சென்றால்தான் எதிரி பிரயோகிக்கும் ஆயுதத்தால் பாதிப்பு ஏற்படாமல் எதிர்த்து நின்று போரில் வெற்றி கொள்ள முடியும். இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கும் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை ‘‘தலைக் கவசம், நமக்கு உயிர்க் கவசம்’’ என்றும் காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று சொல்வதை சீட்பெல்ட் என்பதால் life Best ஆக இருக்கும் இல்லையென்றால் Life Rest ஆகிவிடும்.

இன்னும் சொல்லப்போனால் நாம் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கும் கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிவது இன்றியமையாதது. என்பதை நாம் உணர்ந்து உள்ளோம். ஒருவர் எவ்வளவு செல்வம், உடல் வலிமை, புத்திக்கூர்மை பெற்றவராக இருந்தாலும் கடவுள் அருளாகிய கவசத்தை அணிந்திருந்தால் தான் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

ஒருவருடைய ஐாதகத்தில் எந்த கிரகம் நீசனமாகவோ அல்லது தோஷம் உள்ளனவாகவோ இருந்தால் அதற்கேற்றபடி கவசங்களைப் பாராயணம் செய்து வெற்றி பெற அந்தந்த கவசத்தின் கடவுள்கள் அருள்புரிவார்கள். இப்படி நாம் கடவுளின் கவசத்தை பாராயணம் செய்வதால் கடவுள் மகிழ்ச்சி அடைந்து நம் கஷ்டங்களையும் பீடைகளையும் நிவர்த்தி செய்வார் என்பது சாஸ்த்ர ரீதியான உண்மை இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆன்மிகம் வாசகர்களுக்கு இந்த இதழிலிருந்து வெற்றி மேல் வெற்றி தரும்  கவசங்கள் என்ற தலைப்பில் ஒவ்வொரு கடவுளின் கவசத்தை உங்களுக்கு தருகிறோம். இந்த இதழில் முழுமுதற் கடவுளாக  விநாயகர் கவசம்...

விநாயகர் கவசம்

விநாயகப் பெருமானை ‘‘ஓம்’’ என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருள் என்று சொல்லுவர். அவருடைய காது, அகன்ற தலை, வளைந்த துதிக்கை ஆகியன ‘‘ஓம்’’ என்ற சொல்லின் வடிவத்தைக் காட்டுகிறது. விநாயகன் என்ற சொல் தனக்கு மேலாக வேறொரு தலைவன் இல்லாத தனிப் பொருளை காட்டுகிறது. கணபதி, கணேசன், ஆனைமுகக் கடவுள், விஷ்வக்சேனர், தும்பிக்கை ஆழ்வார், பிள்ளையார் என்ற பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார். அவருடைய ஐங்கரங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பதை காட்டுகிறது. இறை வணக்கம் நமது பாரத தேசத்தில் குழந்தை பருவத்திலேயே தொடங்குகிறது. குழந்தை பருவத்திலேயே இறை வழிபாடு வணங்கத் தெரிந்தால்தான் பெருவழி பற்றி வாழ முடியும். இந்த விநாயக கவசத்தைப் நாம் படிப்பதால் சகல துன்பங்களும் நீங்கி, சகல நன்மைகளும் அடையலாம்.
 
ஈஸ்வர உவாச - ஸ்ருணு வக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திகரம் ப்ரியே: I
படித்வா பாடயித்வா  ச முச்யதே ஸர்வ  ஸங்கடாத்:II
அஜ்ஞாத்வா கவசம் தேவி! கணேஸஸ்ய  
மநும் ஜபேத்: I
ஸம்மோதோ ப்ரூயுகே  பாது ப்ருமத்யே  ச  கணாதிப : II
கணக்ரீடஸ் சக்ஷுர்யுகம் நாஸாயாம் கணநாயக: I
கணக்ரீடாசித: பாது வதநே ஸர்வஸித்தயே: II

ஜிஹ்வாயாம் ஸுமுக: பாது க்ரீவாயாம்
துர்முகஸ் ஸதா: I
விக்நேஸோ ஹ்ருதயே பாது விக்ந நாஸஸ்ச வக்ஷஸி : II
கணாநாம் நாயக: பாது பாஹுயுக்மே ஸதா மம: I
விக்ந கர்த்தா ச உதரே  விக்நஹர்த்தா  ச லிங்க்ககே: II
கஜவக்த்ர: கடீதேஸே ஏகதந்தோ நிதம்பகே: I
லம்போதர: ஸதா பாது குஹ்யதேஸே மமாருண: II

வ்யால யஜ்ஞோபவீ தீ, மாம் பாது பாதயுகே  ஸதா: I
ஜாபக: ஸர்வதா பாது ஜா நுஜங்கே கணாதிப: II
ஹாரித்ர: ஸர்வதா பாது ஸர்வாங்கே  கணநாயக:I
ய இதம் ப்ரபடேந் நித்யம் கணேஸஸ்ய மஹேஸ்வரி: II
கவசம் ஸர்வஸித்யாக்யம் ஸர்வவிக்ந விநாஸநம்:I
ஸர்வஸித்திகரம் ஸாக்ஷாத் ஸர்வபாப விமோசநம் : II

ஸர்வ ஸம்பத் ப்ரதம் ஸாக்ஷாத் ஸர்வஸத்ரு
க்ஷயங்கரம்: I
க்ரஹபீடா ஜ்வரா ரோகா: யே சாந்யே குஹ்யகாதய: II
படநாத் தாரணாதேவ நாஸமாயாந்தி தத்க்ஷணாத்: I
தநதாந்யகரம் தேவி கவசம்  ஸுரபூஜிதம்: II

ஸமோ நாஸ்தி மஹோஸாநி த்ரைலோக்யே  
கவசஸ்ய  ச: I
ஹாரித்ரஸ்ய  மஹேஸாநி கவசஸ்ய ச பூதயே: II
கிமந்யை ரஸதாலாபை: யத்ராயுர் வ்யயதாமியாத்I இதி விஸ்வஸாரரதந்த்ரே கணேஸ கவசம் ஸமாப்தம்

- கவசம் தொடருவோம்

(அடுத்த இதழில் முருகன் கவசம்)

அனுஷா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • IncomeTax_Raid_SaravanaStores

  சென்னையில் உள்ள அனைத்து சரவணா ஸ்டோரிஸ் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

 • Landslide_Tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு

 • Pelicans_wild lake_Velachery

  வேளச்சேரி-மேடவாக்கம் கூட்டு சாலையில் உள்ள காட்டு ஏரியில் உணவுக்காக காத்திருக்கும் கூழைக்கடா (பெலிக்கான்) நீர்பறவைகள்

 • Austalia_Vaccination

  ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்