SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியோர் காட்டும் வழி!

2021-04-13@ 17:16:48

* நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
* தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
* மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
* ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
* பொருளை வேண்டிப் பொய் சொல்லாதே
* பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
* இரப்போர்க்குப் பிச்சை “இல்லை” என்னாதே
* குருவை வணங்கக் கூசி நிற்காதே
* வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
* தாய்-தந்தை மொழியைத் தள்ளி நடக்காதே
* எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே! எந்த உயிரையும் கொல்லக்கூடாது
* பசித்தவர்களுக்கு உணவளித்தல் நமது கடமை
* புலால் உணவு உண்ணக்கூடாது
- வள்ளலார் பெருந்தகை

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி?
பட்டினத்தடிகள்!

இப்பாடலை முழுவதும் படித்த பின்னர் கண்களில் தாமாக நீர் வருவதை யாராலும் தடுத்திட இயலாது; பெற்ற தாய்-தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் மாட்டார்கள்

இஞ்சியை புறத்தே இருக்கும் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியிலிட்டு, நன்கு அரைத்து, அத்துடன் நல்ல மலைத்தேனை கலந்து,  தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வாயிலிட்டு நன்கு மென்று உமிழ்நீருடன் சாப்பிட்டுவர, உடல் ஆரோக்கியம் மேம்படும் முகத்தில் ஒரு வித தேஜஸ் (முக வசீகரம்) உண்டாவதை அனுபவத்தில் காணலாம்.

ஆறடி கூந்தல் வேண்டுமா? செக்கிலாட்டிய தேங்காயெண்ணை ஒருகிலோ எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் 100 கிராம் கருஞ்சீரகம், பொடுதலை (நாட்டு மருந்துக் கடை களில் கிடைக்கும்) மற்றும் அறுகம்புல்பொடி ஒரு கரண்டி அளவு அனைத்தையும் வாணலியில் இட்டு, இளங்சூட்டுடன் ஒரு மணிநேரம் கழித்து இறக்கிவைத்து ஆறியபிறகு, தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து சூடுபறக்க, தலையில் தேய்த்துவர வெகுசீக்கிரத்திலேயே முடி கொட்டு வது நின்று, நல்ல அடர்த்தியுடன் கூடிய முடி வளர்வதை நீங்கள் அனுபவத்தில் காணலாம்.

ஒரு முள்ளங்கியை நன்கு கழுவி அத்துடன் கிராம்பு-2, ஏலக்காய்-4 லவங்கப்பட்டை சிறு துண்டு, சிறிதளவு மிளகு-சீரகம், மிக்ஸியிலிட்டு அரைத்து வடிகட்டி தங்களது சுவைக்குத் தேவையான மலைத் தேனையும் சேர்த்துப் பருகிட வயிற்றுச் சம்பந்தமான எல்லா வகையான நோய்களும், வயிற்று வலி, பசியின்மை, சிலருக்குவயிற்று உப்புசம், சாப்பிட்டவுடன் வாந்தி வருகிறாற்போல் நாவில் ஒருவித உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குணமாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்