SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரியத்தடை நீக்கும் மாலினி

2021-03-22@ 12:49:23

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

‘‘சாமளை’’ இந்த உமையம்மை வடக்கு திசையின் காவல் தேவதையாக திகழ்கின்றாள். சாமளை என்ற தேவதை உமையம்மைக்கு உடன் நின்று அம்மை சொற்படியே செயலாக்கப்படுத்துபவள். உபாசகனின் எண்ணங்களை எண்ணியபடியே நிறைவேற்றி வைப்பவள். காளியை (சாமளை) வணங்கினால் காலத்தினால் வரும் தடங்கல், நவகிரக தோஷம் ஆகியவை நீங்கும். காலத்தினால் வரும் நற்பயனை மட்டும் மிகுதியாக்கி அளிக்கும் பண்பு கொண்டவள், இந்த த்யானத்தை செய்து தடை தீங்கி நன்மை பெறுவோம்.

சாமளை த்யானம்
கிங்கிணீ மாலயாயுக்தாம் பஜேத்காளீம்
வரப்ரதாம் ச்யாமபாம் ரக்த வஸ்த்ராம்
ஜ் வலன சிகயுதாம் அஷ்ட ஹஸ்தம்
த்ரிணேத்ராம். சூலம் வேதாள  கட்கம்
டமருக ஸஹிதம் வாம  ஹஸ்தே  
கபாலம் அன்பே கண் டேந்து
கேடாம் அபய வரயுதாம் சாப
ஹஸ்தாம்ஸீ தம்ஷட்ராம் ச்யாமளாம்
பீமரூபாம் புவன பயகரீம் த்ர காளீம் நமாமி.

‘‘சாதி’’  இந்த உமையம்மை வடகிழக்கு திசையின் காவல் தேவதையாக திகழ்கின்றாள். நாயகக்ஷி ‘‘சாதி’’ என்ற தமிழ் சொல்லால்
சூட்டப்படுகிறது. இந்த தேவதையை உபாசனை செய்தால், நிகழ்காலம், கடந்த காலம், இறந்த காலம் மூன்றையும் அறிந்து அதில் உள்ள தடங்களுக்கு ஏற்ற ப்ராயச்சித்தங்களை செய்து நாம் நினைத்த காரியத்தை தடையின்றி சாதிக்கலாம். உபாசனை நெறிகளில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ளலாம். இந்த தேவதையின் மூல மந்திரத்தை பல லட்சக்கணக்கான ஆவர்த்தி செய்யும் போது அதுவே வசப்பட்டு நம்மிடம் பேசும். இந்த தியானத்தை சொல்லி அதன் பொருளை உணர்ந்து வழிபடுவோம் வரம் பெறுவோம்.

சாதி த்யானம்
காத்ரம் யஸ்யாம் சுநேத்ரம் ஜலதர
கபரி பாரமாகல்ப ஜாலை: ராஜத்
கும்பீந் ரத்ன கும்பஸ்தன யுகல
பரம் மஞ்சு மஞ்ஜீ  ர நாதை :
நாகா நாதாய பணௌ நக நகர
தரு நேத்ய  லீலா விலா விலாசை :
சம்லக்ஷியா நாகயக்க்ஷி கலயது குசலம்
நாகராஜ  ப்ரியாவ் :
 
இந்த சாதியாகிய தேவதை அழகான  கண்களுடையவள் மேகங்கள் போல் கருமையான குழல்கள் உள்ளவள் எண்ணற்ற ஆபரணங்களை அணிந்திருப்பவள். அதனால் ஒளி வீசும் உடம்பையுள்ளவள். பெரிய யானையினுடைய மத்தகங்கள் போன்ற கொங்கைகளிரண்டின் சுமையினால் வணங்கியிருப்பவள். அழகிய சலங்கைகளின் இனிய ஒலியினால் கவர்ச்சிகரமான கைகளில் பாம்புகளை எடுத்துக் கொண்டு மலைகளின் மேலும் பட்டினங்களிலும், பெரிய மரங்களிலும் சென்று பல வேடிக்கைகளைக் காட்டி விளையாடும் இயல்புள்ளவள். நாகராஜனுக்கு (பாம்புகள் தலைவனுக்கு) இஷ்டமான மனைவி. இவ்வாறான ‘‘நாகயக்ஷி’’ உங்களுக்கு க்ஷேமத்தைக் கொடுக்கட்டும்.

‘‘நச்சு வாயகி’’  இந்த உமையம்மை மேல்திசையின் காவலாவாள் பண்டைய காலத்தில் வீடுகளில் நண்டு வாக்கிளி தேள், ஜலமண்டலி, பாம்பு இவை கடித்தால் இறப்பதற்கு வாய்ப்புண்டு. இத்தகைய துன்பங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இந்த நாக தேவதையை வணங்குகிறார்கள். ஆய்  என்றால் தாயையும்.

அகி என்றால் பாம்பையும் நச்சு என்றால் விஷத்தையும் குறிக்கும் நாகாத்தம்மன் என்ற கிராமப்புர கிராமங்களை ஏற்படுத்த நிலத்தடி நீரை கண்டு பிடிக்க இந்த தேவதையை வணங்குவார்கள். கணவன், மனைவி இடத்து மனக்கசப்பு ஏற்பட்டால் அதை நீக்கி அருள்வாள். ஒருவர் மீது ஒருவருக்கு பேரன்பை ஏற்படுத்துவாள். அவளை வணங்கி பயன் பெற பொருளோடு த்யானம் செய்வோம்.

‘‘நச்சு வாயகி தியானம்’’
பாணு நிப வேத கர வன்னி
நயனம் ஸ்யாத் தக்‌ஷின, கரே விஷ
பக்ஷண வரத ஹஸ்த்தாம் ரக்த்த
வஸநான்வித ஐடா லம்ப யுக்த்தாம்
பீம வதணான்வித விஷா ப ஹர
ஸ்வ வரூபாம்
 
சூரியனை ஒத்த ஒலி உடையவளாய் நான்கு கரம் கொண்டவளாய் நெருப்பை கண்களாக கொண்டவளும் வலது கையில் விஷத்தை சாப்
பிடுபவளாய் வரத முத்திரையை கையில் தரித்தவளும் சிவந்த உடை அணிந்தவளும் ஜடை தரித்தவளாயும் அஞ்ச தக்க முகம் உடையவளாய்  விஷத்தை போக்குபவளான உமையம்மையின் வடிவை தியானிக்கிறேன்.

மாலினி

மாலினி இந்த உமையம்மை கீழ்த் திசையின்  காவல் தேவதையாவாள். நெருப்பின் தன்மை கொண்டவள் பூஜைகளில் ஏற்படும் தவறுகள் பெரிதும் பாவத்தை உண்டு பண்ணும். அதனால் பல இடையூறுகள் வரும். அதை தவிர்ப்பதற்கே இந்த தேவதை வழிபடுகிறார்கள். ஒன்பது வகை துர்கைகளில் இந்த உமையம்மையும் ஒருத்தி.

இந்த உமையம்மையை வணங்கினால் பாவங்கள் நெருப்பில் பட்ட பஞ்சுபோல் அழியும், காரியத்தடை நீங்கும் அவளை தியானித்து அருள் பெறுவோம்.
மாலினி தியானம்

ஜ்வாலா மாலா  வலீடா ஜ்வலந
சாதனு : சங்க சக்ராஸிகேடன்
சூலம் ஸந்தக் ஜநீம்யா சரஸிருஹை :
ஸந்ததானா த்ரிநேத்ரா ஔர் வாக்னிம்
ஸங்கிரந்தீ  ரண புவி
திக்கஜான் நாசயந்தீபராஸா துர்க்கா
ஜாஜ்வல்யமானா பவது மமஸதா
ஸிம்ஹஸம்ஸ்தா  புரஸ்தாத்
 
அம்பு வில், சங்கம், சக்ரம், கத்தி, கேடயம், சூலம், தூக்கிய ஆள் காட்டி  விரல் இவற்றோடு கூடியவளும், மூன்று கண்கள் உடையவளும், அக்னி ஜ்வாலையினால் சூழப்பட்டவளும் சிம்மத்தின் மேல் அமர்ந்திருப்பவளும் ஜ்வலிக்கின்றவளுமான ஜ்வலத் துர்க்கை என் முன்னே பிரசன்னமாகட்டும்.
இது வரை தீக் தேவதைகளைப் பார்த்தோம். இனி உமை அம்மையின் உடலில் ஒவ்வொரு உறுப்பையும் ஒவ்வொரு தேவதையாக கருதி வழிபடுவதை நியாசம் அல்லது அங்க பூஜை என்பர். அதில்  வரும் எட்டு தேவதைகளைக் காண்போம். இவை எட்டும் ஒருங்கிணைந்தே அஷ்டாங்க தேவதை எனப்படும். இவற்றை வணங்குவதால் சாதகன் உமையம்மையை நேரில் காண வழிவகை செய்யும்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்