SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் (துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்...)

2021-02-27@ 16:07:52

சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விசேஷமோ அதேபோல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விசேஷம் ஆகும்.  சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல  தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று  பொருள். ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம்.  சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழே உள்ள பிள்ளையார் மந்திரம் அதை ஜபிப்பதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்: ஓம் ம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம்  தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா.

பொதுப் பொருள்: பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழுமுதற் கடவுளாகவும், பூத  கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்களோடு எப்போதும்  நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றி கொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி  நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுகச் செய்பவரே, உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன். சங்கடஹர சதுர்த்தி நாளில் ( 2:3:2021 - செவ்வாய்)  இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமணத்தடை அகலும். கடன் தொல்லை தீரும். இப்படி எண்ணிலடங்கா பல  நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்