SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

த்வனி தீபிகா எனும் ரிக் வேதத்தின் விளக்கவுரை

2021-02-25@ 15:35:26

ஒவ்வொரு சிறந்த இலக்கிய படைப்புக்கும் ஒரு தொனி ( த்வனி) உண்டு. த்வனியுடன் கூடிய மிகப்பெரிய இலக்கியம் வேதம். தாமரைக்கு பல அடுக்கு இதழ்கள் இருப்பதைப் போலவே, வேத இலக்கியங்களும் பல குறியீடுகளை மற்றும் பல நிலைகளைக் கொண்டுள்ளன. மேலோட்டமான, அதிபௌதீகமான, உள்ளார்ந்த மற்றும் அத்யாத்மீகமான நிலைகள். தீபிகா என்பது அறிவொளி. டாக்டர் ஆர்.ரங்கன் எழுதிய த்வனி தீபிகா என்பது ரிக் வேதத்தின் சமஸ்கிருத விளக்கவுரையாகும். இது வேத இலக்கியத்தின் த்வனியை விளக்கவும், வேதத்தின் இதயத்திற்கு நெருக்கமாக செல்லவும் எழுதப்பட்ட விளக்கவுரையாகும். ஒருவர் வேதத்தின் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பதால் முழுமையாகிறார். வேதம் என்பது தர்மத்தின் அதிகாரம். தர்மம் என்பது உலகைத் தக்கவைத்து, சமூக முன்னேற்றத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் கருவியாகும். வேதம் என்பது ஞானத்தின் நீரூற்று.த்வனி தீபிகா என்பது சமஸ்கிருதத்தில் பத்து தொகுதிகளைக் கொண்ட ஒரு பேருரை. சமஸ்கிருதம் அறியாத ஆனால் ஆர்வமுள்ள ஆத்மாக்களுக்காக அதன் சாரமாக ‘வேதம், என் வேட்கை’ (“The Veda My Passion”) என்ற ஆங்கில புத்தகமும் த்வனி தீபிகாவுடன் வெளியிடப்படுகிறது.

பல ஆண்டுகால ஆராய்ச்சியைத் தொடர்ந்து, வெபோலிமின் நிறுவனர் தலைவர் - டாக்டர் ஆர். ரங்கன் தனது சொந்த எளிய மற்றும் தெளிவான பாணியில் புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை 2021 ஜனவரி 27 ஆம் தேதி கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரில் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப் பிரேமி சுவாமிகள் வெளியிட்டார். வகுப்புகள் மற்றும் புத்தக வெளியீடுகள் மூலம் தர்மத்தைப் பரப்புவதற்காக செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான WEB OF LIFE MAKERS (WEBOLIM) இந்த புத்தகங்களை வெளியிட்டுள்ளது.ரிக்வேதத்தின் முந்தைய விளக்கவுரைகள் - ஸ்கந்த ஸ்வாமி, பட்டபாஸ்கரர் மற்றும் சாயணாச்சார்யார் - இவர்களுடைய விரிவுரைகள் சடங்குகளின் (கர்மாக்களின்) அடிப்படையில் அமைந்தவை. ரிக் வேதத்திற்கு ஆன்மீக விளக்கங்களும் உள்ளன. வேதமே அதன் ஆன்மீக கண்ணோட்டங்களைப்பற்றி பேசுகிறது. இந்திய காவியங்கள் வேதத்தை ஆன்மீக அடிப்படையில் விளக்குவதற்கான குறிப்புகளைக் கொண்டுள்ளன. சங்கரர், ராமானுஜர் போன்ற பெரிய ஆச்சார்யர்கள் இந்த ஆன்மீக விளக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். ரிக் வேதத்தின் மத்வரின் விளக்கவுரை ஆன்மீகத்தை தழுவியது.

பக்தி மரபில், ஸ்ரீபோதேந்திரரும் ஸ்ரீதர அய்யாவாளும் திவ்ய ராமத்தின் மகிமை வேதங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதைக் காட்டுகின்றனர். நம் காலங்களில் இதைத் தொடர்ந்து,  ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப் பிரேமி சுவாமிகள் அனைத்து அம்சங்களையும் கொண்ட பக்தி, வேதங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை தனது வேத விஞ்ஞானம் உரையில் காட்டுகிறார்.
 
அரவிந்தர் மற்றும் டி.வி. கபாலி சாஸ்திரி போன்ற அரவிந்தரைப் பின்பற்றுபவர்கள் ஆன்மீக மற்றும் உளவியல் கண்ணோட்டத்தில் பல வேத மந்திரங்களின் விரிவான விளக்கத்தை அளிக்கிறார்கள். த்வனி தீபிகா என்பது வேதங்களின் மேற்கண்ட அனைத்து ஆன்மீக விளக்கங்களின் நீரோட்டத்தின் தொடர்ச்சியாகும்.
த்வனி தீபிகா ஐந்து வழிகளில் தனித்துவமானது:

1. த்வனி தீபிகா ரிக் வேதத்தின் அனைத்து மந்திரங்களுக்கும் ஆன்மீக விளக்கத்தை அளிக்கிறது. மற்ற விளக்கவுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரங்களுக்கு மட்டுமே ஆன்மீக விளக்கத்தை அளிக்கின்றன.
2. இந்த விளக்கவுரை மிகவும் எளிமையானது மற்றும் தெளிவானது.
3. இந்த விளக்கவுரை மந்திரங்களை ஆன்மீக ரீதியில் விளக்குவதில் முந்தைய விளக்கவுரைகளைப் பின் பற்றுகிறது என்றாலும், அவற்றை பிரதிபலிக்கவில்லை. இவ்வுரை ஆன்மீக விளக்கத்தின் நீரோட்டத்தை மேலும் பிரவகிக்கச் செய்கிறது. (எ.கா) அக்னியை  ஸ்ரீ அரவிந்தர் தெய்வீக விருப்பம் என்று விளக்கினால், இவ்வுரை அக்னியை உலகளாவிய நலனின் விருப்பம் என்று விளக்குகிறது. கபாலி சாஸ்திரி உஷஸை சுய அறிவின் விடியலாகவும், அஸ்விகளை உயிரணுக்களின் வசீகர சக்திகளாகவும் விளக்கினால், த்வனி தீபிகா அஸ்விகளை பிராணாயாமத்தில் வலது மற்றும் இடது ராசியில் காணப்படும் சுவாசத்தின் மீது தேர்ச்சி என்றும், உஷஸை கும்பகம் (மூச்சு நிறுத்துதல்) என்றும் விளக்குகிறது. இதுபோல, இவ்வுரை தொடர்ந்து கொண்டே செல்கிறது.
4. யமன் மற்றும் யமியின் உரையாடல் போன்ற ரிக் வேதத்தில் காணப்படும் புதிர்கள், சடங்கு நெருப்பின் மூத்த சகோதரர்களின் மரணம், ஊர்வசி மற்றும் புரூரவஸின் காதல் போன்ற கதைகள் விளக்கப்படுகின்றன.
5. ஆன்மீகம் மற்றும் நுண்ணறிவு அடிப்படையாகக் கொண்ட இந்த விளக்கவுரை பல நூற்றாண்டுகளாக இயங்கும் பாரம்பரிய மடங்களின் சிறந்த ஆச்சார்யர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது. மேலும் நம் காலத்தின் சிறந்த வேத அறிஞர்களாலும் பாராட்டப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி;

டாக்டர் ரங்கன்ஜி பெங்களூரின் ஜிகனி அருகே உள்ள ஸ்ருதிராம் குருகுலத்தை நடத்தி வருகிறார். அவர் ராமாயணத்தில் சிறந்த ஞானம் உடையவர். ராமாயணத்தின் மூலம் தர்மத்தை வலியுறுத்துபவர். நாடு முழுவதும் தனது சொற்பொழிவுகளுக்கு புகழ்பெற்றவர். பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலைக்கழகத்தில் யோகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வேத குருகுலத்தை நிறுவுவதும், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் சமூக முன்னேற்றத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் கல்வியில் சிறந்ததை வழங்குவதும் அவரது தொலைநோக்கு பார்வையாகும்.டாக்டர். ரங்கன்ஜி யோகா, ராமாயணம், சாஸ்திரங்கள், சமஸ்கிருதம் மற்றும் பொதுப் படிப்புகளின் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் - என்ஐஎஸ் மூலம்) முழுமையான கல்வியை வழங்கும் சீதாலட்சுமி குருகுலத்தையும் நடத்தி வருகிறார்.

புத்தகத்தைப் பற்றிய விவரங்களுக்கு webolimclasses@gmail.com/ 8825839404 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.ஸ்ருதிராம் குருகுலம் ஒரு தனித்துவமான குருகுலம் ஆகும். இது வேதக் கல்வி, ராமாயணம், யோகம், சாஸ்திரங்கள் மற்றும் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை வழங்குகிறது. வெபோலிம் அறக்கட்டளையின் கீழ் 2014 இல் குருகுலம் நிறுவப்பட்டது.WEBOLIM (வெப் ஆஃப் லைஃப் மேக்கர்ஸ்) இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேதங்கள் மற்றும் ராமாயணம் குறித்து வகுப்புகள், முகாம்கள் மற்றும் விரிவுரைகள் நடத்துகிறது. அனைத்து வகுப்புகள் மற்றும் விரிவுரைகள் இலவசம்.குருகுலம் மற்றும் வெபோலிம் பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம் - www.webolim.org.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்