தைப்பூசத் திருநாளின் மகத்துவம் என்ன?
2021-01-27@ 17:26:14

தைப்பூசம் என்பது தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு உரிய விசேஷ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் ஜோதி சொரூபமாக காட்சியளிக்கும் நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜோதிட அறிவியல் ரீதியாக இந்த நாளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. ஜோதிட அறிவியலைப் பொறுத்தவரை உணவு, விவசாயம், நீர்வளம் ஆகியவற்றை வழங்கும் கோள் சந்திரன். கடும் வெயிலால் அதிக வெப்பமோ அல்லது அதிக மழையால் வெள்ளமோ இன்றி விவசாயத்திற்கு ஏற்ற இதமான தட்பவெப்பநிலையை தை மாதத்தில் காண்கிறோம்.
முழு நிலவாக ஒளிவீசும் பௌர்ணமி நாள் தை மாதத்தில் வரும்போது மட்டுமே தனது சொந்த வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். அதுவே தைப்பூசத் திருநாள் ஆகவும் கொண்டாடப்படுகிறது. பௌர்ணமியுடன் கூடிய தைப்பூச நாளன்று ஆங்காங்கே அன்னதானம் நடைபெறுவதைக் காண்கிறோம். சந்திரனுக்கு உகந்த அந்த நாளன்று அன்னதானம் செய்வோருக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக வாழ்வினில் வளம் பெருகும்.
மேலும் செய்திகள்
ரத சப்தமி.. தை மாதம் முதல் நாள்..இரண்டு நாட்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
தர்மம் தலைகாக்கும் என்பதன் விளக்கம் என்ன?
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் பூஜையறையில் வைக்கலாமா?
நாய்க்கு மோட்சம்!
திருத்தியது எப்படி?
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!