SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்னோட ராசி நல்ல ராசி: மிதுன ராசி - சிறுவர் பண்புகள்

2021-01-06@ 12:01:54

என்னோட ராசி நல்ல ராசி 18

மிதுன ராசி பண்புகள் என்பது மே மாதம் 15 முதல் ஜூன் மாதம் 14 தேதி வரையில் பிறந்தவர்களுக்கு பொருந்தும். மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் லக்கினாதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில் இந்த பண்புகள் பொருந்தும். மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகளவில் பொருந்திவரும், மிதுன ராசியின் கிரகம் புதன் பகவான். புதன் என்றால் புத்திக்கு உரியவன். எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பவன். எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாதவன். நிதானமானவன். இந்தக் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்ற உண்மை வெளியே யாருக்கும் தெரியாது.

அமைதியாகவும் அடக்கமாகவும் (well behaved) ஆக இருக்கும். குழந்தை என்றால் அது மிதுன ராசி குழந்தையாக இருக்கும். unruly, problem child என்ற பேச்சுக்கே இடமில்லை. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்ற கொள்கை உடையது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும். கடவுள் நம்பிக்கை உடையது. தெய்வகீதங்கள் இசைக்கும். சிலர் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று நினைப்பார்கள். அத்தகைய குரல்வளம், குரலினிமை, கவிதை எழுதும் திறன், பலகுரல் வித்தை, பல மொழி கற்கும் திறன் என்று இதன் மேதா விலாசத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பல மொழி அறிவு

மிதுனராசிக் குழந்தைக்கு ஐந்து வயதுக்குள் ஐந்து மொழிகள் கற்றுத் தரலாம்.  தொன்மையான மொழிகளான தமிழைத் தவிர லத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை சிறப்பாகக் கற்கும். சமஸ்கிருத ஸ்லோகங்கள், தெலுங்கு கீர்த்தனைகள் சொல்லித் தரலாம். ஆங்கிலம் அற்புதமாகப் படிக்கும். word buildingல் expert ஆக விளங்கும். மிதுன ராசிக் குழந்தையின்  சொற்கிடங்கு [lingua franca] அபரிமிதமானது. நிறையச் சொற்களை விரைவாகக் கற்றுக் கொள்ளும். poems recitation and rhymes சொல்வதில் கில்லாடி. கணிதப்புலி எனலாம். வாய்ப்பாடுகள் மனப்பாடமாக கடகடவென்று ஒப்பிப்பார்கள். கணக்குகளை கவனமாகச் செய்து முடிப்பார்கள். கவனக்குறைவாக தவறு செய்யும் பழக்கம் இவர்களிடம் கிடையாது. [தெரிந்தே செய்வார்கள்]. ஆக இவர்களின் கணக்கில் careless mistakes வராது.

சிலர் சிறுவயது முதல் மேடை ஆர்வம் மிக்கவர்கள். மேடையில் ஏறி சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவர்கள். மேடையில் ஏறி பாட்டு பாடுவார்கள். எந்தக் கூட்டமாக இருந்தாலும் நிகழ்ச்சி நடத்துவோரை சந்தித்து தனக்கொரு வாய்ப்பு தரும்படி கேட்டு மேடையில் ஏறிப் பேசிப்பாடி கைதட்டல் பெற்றுவிடும் சமர்த்து குழந்தைகள். புதனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சிலர் வாயாடிகளாக இருப்பார்கள். சனி சேர்க்கை இருந்தால் வசை மொழிகள் அதிகம் பேசுவர்.  ராகு சேர்க்கை இருந்தால் ஆபாச மொழிகள் வாயில் சரளமாக வரும். கேது இருந்தால் மௌனம் அதிகம். அப்படியே ஓரிரு சொற்கள் முத்து போல உதிர்ந்தாலும் தத்துவ மொழிகள்தாம். யாருக்கும் முழுதாகப் புரியாது. புதிரான சொற்கள் பேசுவார்கள். புதனுடன் வியாழன் இருந்தால் நம்பிக்கையூட்டும் வகையில் நல்ல சொற்களைக் கொண்டு கவிதை எழுதும் கவிஞர்களாக வருவர்.

புறம் பேசும் பழக்கம் உண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவர். கண்களால் பேசுவர். புன்னகையால் பேசுவர்.  அலட்டிக் கொள்ளாமல் தலையசைப்பு மற்றும் கை ஜாடையாலும் பேசுவர். கற்பனைக் கதைகளை அவிழ்த்துவிடுவதில் சமர்த்தர். சிறு வயதில் சில குழந்தைகள் ஏழையாக இருக்கும். அப்போதும் செல்வாக்குடையவர்போல காட்டிக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள். சில விஷயங்களை மட்டும் சொல்வர். சில விஷயங்களை சொல்ல மாட்டார்கள். இக்குழந்தைகள் சொல்வது முழு உண்மை என்று எதிர்பார்க்க  இயலாது. ஆனால், பொய் சொல்ல மாட்டார்கள். பகுதி உண்மையை அழகாக பேசி ஜெயித்து விடுவார்கள்.

கணினி மற்றும் தொழிநுட்ப அறிவு

மிதுன ராசியில் பிறந்த குழந்தைகள் தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள். இக்காலத்திற்கு ஏற்ற வகையில் கணினி அறிவில் பிரமிப்பூட்டுவர். மொபைல் போனில் apps டவுன்லோடு செய்வதில் இன்ஸ்டகிராம், ஷேர் சாட் என்று பகிர்வதில் படு வேகமாக இருப்பர். வளர்ந்த பிறகு இவர்கள் பிட் காயின், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து கெட்டிக்கார இன்வெஸ்டர்களாக இருப்பார்கள். அறிவியல் பரிசோதனை சாலைகளில் [லேப்களில்] கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.

புதுமை நாட்டம்

மிதுன ராசிக் குழந்தைகளுக்கு தினம் ஒரு டிபன் செய்து தர வேண்டும். சாப்பாட்டை அவ்வப்போது சூடாக சுவையாக சமைத்து தர வேண்டும். குறிப்பாக தாயார் அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். டூர், பிக்னிக் போவதென்றால் போன இடத்துக்கே போவது இவர்களுக்குப் பிடிக்காது. புதிய இடங்களை இவர்கள் தெரிவுசெய்வர். சிறுவர்களை துணிச்சலுடன் முன் நடத்தி அழைத்து செல்வர். மலை ஏற்றம், குதிரை ஏற்றம், படகு சவாரி, காட்டுக்குள் போகும் ஆப்பிரிக்கன் சஃபாரி, ஸ்கை டைவிங் போன்றவற்றை விரும்புவர். ஆனால், சகல பாதுகாப்புகளுடன் எவ்வித ரிஸ்க்கும் எடுக்காமல் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வர்.

ஆண், பெண் வித்தியாசம் கிடையாது

மிதுனராசிக் குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தவர் நண்பர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பாலின ஈர்ப்பு பிரச்னைகள் வராது. கௌரவமாக கண்ணியமாகப்
பழகுவார்கள். எல்லோரையும் சமமாக நடத்தினாலும் சிலரை எப்போதும் காலை வாரிக்கொண்டே இருப்பார்கள். கேலி கிண்டல் செய்வதில் சமர்த்தர். ஆனால், வாய் திறந்து சிரித்துக்கொண்டாட மாட்டார்கள். எப்போதும் கண்ணன் பரமாத்மாவைபோல இவர்களைச் சுற்றி பெண்கள் கூட்டம் இருக்கும். இவர்களின் அறிவார்ந்த நகைச்சுவைப் பேச்சுக்கு இந்த ‘பாண்டி நாடே’ அடிமை ஆகும். ஆனால், காதல் கத்திரிக்காய், கிரஷ் என்று எவரிடமும் இக்குழந்தைகள் சிக்கி கொள்வதில்லை. மற்ற ஜோடிகளை கேலி செய்து ஆனந்திப்பார்.

மிதுன ராசி குழந்தைகள் கமென்ட் எதுவும் அடிக்காமலேயே அந்த குழுவை கலகலப்பாக்கிவிடுவர். மிதுனராசி குழந்தை இருந்தால் கலகலப்பாக இருக்கும். பெரியவர் சிறியவர் என எல்லோரையும் கமென்ட் அடிப்பார். ஆனால், அளவாக ரசிக்கும்படி இருக்கும் என்பதால் எல்லாரும் இக்குழந்தைகளை நேசிப்பார். இவர்கள் தனித்திருப்பதை பார்க்க இயலாது. எப்போதும் குழுவோடு தான் வேடிக்கையும் விளையாட்டுமாக இருப்பார்கள். மனதில் பெரிய கவலை இருந்தாலும் யாரிடமும் காண்பிக்க மாட்டார்கள்.

பல்துறைப் பயிற்சி

மிதுனராசிக் குழந்தைகள் புத்திசாலிகள் என்பதால் பள்ளியில் பாட்டு, இசைக்கருவி, டென்னிஸ், செஸ் என்று பல்துறைகளிலும் பயிற்சி பெறுவார். இவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வார்கள். ‘மல்ட்டி டாஸ்க்’ செய்வதில் கெட்டிக்காரர்கள். பெண் குழந்தைகள் என்றால் தையல் , சமையல்,  வீட்டை அழகுபடுத்துதல், அழகுக் கலை, [மேக்கப்], இதுபோன்ற ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்வார்கள்.

அடுத்தடுத்து புதிதாக ஏதாவதொன்றை படித்துக்கொண்டே இருப்பார்கள். பாட்டு கேட்டுக் கொண்டே ரெகார்டு நோட் எழுதுதல், அறிவியல் படங்கள் வரைதல், மேப்பில் இடம் குறித்தல் என்று சில வேலைகளை ஜாலியாக்கிக் கொள்வார்கள். போகும்போதும் வரும்போதும் மனப்பாடச் செய்யுள், சுலோகம், பாடல்கள், பார்முலா போன்றவற்றை மனப்பாடம் செய்வர். உடம்புக்கு அலுப்பு இல்லாத மூளைக்கு மட்டுமே வேலை தரக்கூடியதை மட்டுமே செய்வார்கள்.

கலையார்வம்

மிதுனராசிக் குழந்தைகள் நுண்கலைகளில் ஆர்வம் உடையவர்கள். விளையாட்டு என்றால் அதிகம் ஓடி ஆடி களைப்பு அடையாத விளையாட்டை தெரிவுசெய்வர். பாட்டு, படம் வரைதல், பின்னல் வேலை, கணினியில் முழுத் தேர்ச்சி, கதை கவிதை எழுதுதல், இசை அமைத்தல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவர். தொழில்நுட்பமும் கலையும் இணைந்த வேலைகளை ஆர்வமாக கற்றுக் கொள்வர். மொத்தத்தில் இவர்கள் டிஜிட்டல் ஆர்ட்ஸ் குழந்தைகள் எனலாம். பெற்றோர் செய்த புண்ணியம் மிதுனராசிக் குழந்தைகள். குறும்புத்தனம் உடைய கரும்புச் செல்வங்கள்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்