இந்த வாரம் என்ன விசேஷம்?
2021-01-04@ 17:52:58

ஜன 5, செவ்வாய் : சப்தமி. மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் உற்சவாரம்பம் சிம்மாசனத்தில் பவனி. இயற்பகை நாயனார் குருபூஜை.
ஜன 6, புதன் : அஷ்டமி. மதுரை சோமசுந்தரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்தருளிய காட்சி. ரிஷபாரூட தரிசனம். திருப்பதி ஏழுமலையான் ஸஹஸ்ர கலசாபிஷேகம்.
ஜன 7, வியாழன் : நவமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்காப்பு உற்சவம் ஆரம்பம். பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி.
ஜன 8, வெள்ளி : தசமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய்க் காட்சி. இரவு சந்திரப் பிரபையில் பவனி வரும் காட்சி. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.