இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-12-26@ 16:46:21

டிச 26, சனி: துவாதசி. திருப்பதி நவநிதி மஹா தீர்த்தம். திருவிண்ணாழி பிரதட்சணம். கார்த்திகை விரதம். சபரிமலையில் மண்டல பூஜை.
டிச. 27, ஞாயிறு: திரயோதசி. பிரதோஷம். வீரவ நல்லூர் சுவாமி விசேஷ அலங்காரச் சப்பரத்தில் பவனி வரும் காட்சி.
டிச 28, திங்கள்: திரயோதசி. சிதம்பரம் சிவபெருமான் தங்கரதத்தில் பிட்சாடணக் காட்சி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ராப்பத்து உற்சவம்.
டிச 29, செவ்வாய்: சதுர்த்தசி. பௌர்ணமி. ஆருத்ரா அபிஷேகம். மதுரை ஸ்ரீநடனகோபால சுவாமிகள் ஜெயந்தி. நடராஜர் அபிஷேகம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.
டிச 30, புதன்: பௌர்ணமி. அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம். திருஉத்திரகோசமங்கை கூத்தபிரான் ஆருத்ரா தரிசனம்.
டிச 31, வியாழன்: பிரதமை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகன் படித் திருவிழா. ஸ்ரீரமண மகரிஷி ஜெயந்தி.
ஜன 1, வெள்ளி: துவிதியை. அனைத்து தலங்களிலும் அருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு.