பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)
2020-12-26@ 16:44:28

ஹர ஹர ஸங்கர பக்த ஹ்ருதம்பர
வாஸ சிதம்பர நாதவிபோ
துரித நிரந்தர துஷ்ட பயங்கர
தர்ஸன ஸங்கர திவ்ய தனோ!
தஸஸதகந்தர ஸேஷ ஹ்ருதந்தர
ஸங்கர ரக்ஷித பார்த்த குரோ
ஜய ஜய ஹே நடராஜ பதே
ஸிவ பாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!
ஹர ஹர சங்கரா, எப்போதும் பக்தர்களுக்கு சுகத்தை அருள்
பவரே, பக்தர்களின் இதயத்தில் வீற்றிருப்பவரே, சிதம்பர நாதரே, மகாபிரபுவே, இடைவிடாது பாபங்களைச் செய்யும் துஷ்டர்களுக்கு அச்சத்தை ஊட்டுபவரே, தரிசனம் செய்பவருக்கெல்லாம் முக்தியை அருள்பவரே, திவ்ய திருவுருவம் கொண்டவரே, ஆயிரம் தலையனான ஆதிசேஷனின் இதயத்தில் இடம் பெற்றவரே, துரோணருக்கு எதிரான யுத்தத்தில் அர்ஜுனனை ரட்சித்தவரே, அனைவருக்கும் குருவானவரே, உலகிற்கு நாயகனாக, மங்களநாதனாக விளங்கும் நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், எங்களுக்கு நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.
(தில்லையில் நின்றாடி உலகைக் காக்கும் நடராஜப் பெருமானை குறித்து அனந்தராம தீட்சிதர் இயற்றிய துதி, நடராஜ சதகம். இதில் பதினோரு ஸ்லோகங்கள் இடம் பெற்றிருக்கும். இப்போது அதில் ஒன்றை மட்டும் நாம் கொடுத்திருக்கின்றோம். இதை தினமும் சொல்லி வந்தால் எல்லா வகையான நோய்களும் நீங்கும். நடராஜப் பெருமானின் திருவருளால், அனைத்து நன்மைகளும் கிட்டும். மிக முக்கியமாக 30-12-2020 அன்று வரும் ஆருத்ரா தரிசனத்தன்று சொல்லுங்கள்.)
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் (துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்...)
பலன் தரும் ஸ்லோகம் (குடந்தையின் பெருமை...)
பலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)
பலன் தரும் ஸ்லோகம் (மன அமைதி பெற)
பலன் தரும் ஸ்லோகம் (வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட)
பலன் தரும் ஸ்லோகம் (ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி...)
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!