SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணியபோதெல்லாம் அருளும் அண்ணாமலையான் : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

2020-12-23@ 14:20:30

துயர் துடைத்தாள் திருவுடையாள்  
 
நானும் என் துனணவியும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் திருவுடை அம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கம். முட்டைக்கடை உரிமையாளர் ராஜேந்திரனும் தன் மகன்களோடு கோயிலுக்கு வருவார். அவர் கோயிலுக்குள் வரும் போதே அம்மன் அவர் மீது இறங்கி அருள்வாக்கு சொல்வார். அவர் கூறியபடியே அநேகருக்கு நன்மை கிட்டியிருக்கிறது. கோயிலிலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. நான் ஒரு அரசு அலுவலர். எங்கள் அலுவலகத்தின் இயக்குநர், பொது மேலாளர், யூனியன் நிர்வாகிகள் ஆகியோர் அலுவலக பணி மேலாளர் மீது கொண்ட வஞ்சகத்தால் முறைப்படி இயக்குநர் மூலம் டெண்டர் விடப்பட்ட உபயோகமற்ற கழிவுப் பொருட்களை டெண்டர் எடுத்தவர் எடுத்துச் செல்லும் போது திருட்டுத் தனம் என யூனியன் ஆட்களால் தடுக்கப்பட்டு என்மீதும், பணிப்பார்வையாளர் மீதும் என்ஜினியர் இருவர்மீதும் திருட்டுக்குற்றம் சுமத்தி போலீஸ் கேஸாகி விட்டது. இது 1964ல் நடந்தது. நானும் பணிமேலாளரும் கோயிலுக்குப் போயிருந்தபோது ராஜேந்திரன் அம்மன் அருள் கொண்டு ஆடி ‘‘உங்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. நீங்கள் நல்லவிதமாக மீண்டும் பணியில் சேர்வீர்கள். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு துணையிருப்பேன்’’ என்று அருள்வாக்கு வந்தது. கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்து மீண்டும் பணியில் சேர்ந்தோம். சில நாளில் இயக்குநர் ஒரு கார் விபத்தில் மாட்டினார். பொது மேலாளரும் துயரில் விழுந்தார். அப்பாவிகளை மாட்டிவிட்டவர்களுக்கு திருவுடைத்தாய் அளித்த தண்டனை.
- R.அருணசலம், L.P.T., சென்னை - 600081.

துயர் துடைத்தாள் திருவுடையாள்

வழக்கை முடித்து வைத்த பைரவர்பணிவுடன் பழநிகுமார் எழுதுவது 2012 முதல் 2017 வரை எனக்கும், பல கோடிகளுக்கு சொந்தமான ஒரு செல்வந்தருக்கும், மதுரை நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கு நடைப்பெற்றது. 60க்கும் மேற்பட்ட வாய்தா வந்தது. பரிகாரம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - காரைக்குடி சாலையில் உள்ள வைரவன்பட்டி பைரவர் கோயிலுக்கு சென்று தேய்பிறை அஷ்டமியில்  நடந்த யாகத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தேன். அடுத்த வாய்தாவில என் மீது வழக்கு தொடர்ந்தவர் சமாதானமாக போய்விடுவோம் எனச் சொல்லி வழக்கை முடித்துக் கொண்டார். அதன் பின் தேய்பிறை அஷ்டமியில பைரவர் யாகத்தில் பங்கேற்று பிரார்த்தனையை நிறைவு செய்து, நன்றியை சமர்ப்பித்தேன். வழக்குகள், பிரச்னைகளை பைரவர் தீர்த்து வைப்பார் என ஓர் ஐதீகம் உண்டு. அது என் வாழ்வில் கண்ட உண்மை.
- வ. பழநிகுமார், கண்டவராயன்பட்டி - 630203

எண்ணியபோதெல்லாம் அருளும் அண்ணாமலையான்

என் சொந்த ஊர், கீழ்னாத்தூர். திருவண்ணாமலை, நான் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூங்கில் துறைப்பட்டில், எழுத்தராக பணி புரிந்த சமயம் நேர்ந்த அனுபவம். எனக்கு மூன்று மகன்கள், ஒரு மகள், அனைவருக்கும், திருமண வயதாகி விட்டது. காலாகாலத்திலே கல்யாணம் செய்து வைத்தால் தானே நல்லாயிருக்கும். என் உறவினர்கள் மூன்று பேர்கள் அடுத்தடுத்து பெண் ேகட்டு வந்தார்கள், அதில் ஒரு சம்பத்திக்கு பெண் கொடுக்க சம்மதித்தோம். என் வேலையை நம்பித்தான், எங்கள் குடும்பம் ஓடுது. இந்த நிலையில் என் பொண்ணு கல்யாணத்தை எப்படி முடிப்பது, அப்போது நான் வாங்கும் சம்பளமோ மிக குறைவு, சாப்பாட்டிற்கும், பிள்ளைகள் படிப்பு செலவுக்கே சம்பளம் போதவில்லை. நான் பத்து வயது சிறுவனாக இருக்கும் போது கூட, கடவுள் பக்தி உண்டு. படுக்கும் போதும், காலையில் எழும் போதும், முருகா! ஈஸ்வரா! மாரித்தாயே!!! என்று முனு முனுத்தபடியே இருப்பது வழக்கம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை வேண்டி மாதா மாதம் பௌர்ணமியன்று, மூங்கில் துறைப்பட்டிலிருந்து கிரிவலம் வரும் போதும், என் நான்கு பிள்ளைகளுக்கும், கல்யாணம் நடத்தி வைக்கவேண்டும், அய்யா! என்று நினைத்தபடி சுற்றுவது வழக்கம். ஒரு நாள், பௌர்ணமி அன்று என் கையில் ரூபாய் இல்லை, மூங்கில் துறைப்பட்டிலிருந்து, திருவண்ணாமலைக்கு வந்து போக பஸ் டிக்கட் எடுக்க ரூபாய், இரண்டு கம்மியாக இருந்தது. ‘‘பஸ்சில் கூட்டம் அதிகம், நின்றபடி கம்பியை பிடித்தவாறு’’ அண்ணாமலையானே! மலையை சுற்றிவிட்டு மூங்கில்துறைப்பட்டு போவதற்கு பஸ்கட்டணத்திற்கு ரூ.2 குறைவாக இருக்கு. என்னை யாரிடமோ போய் பிச்சை எடுக்க வைக்காதே என்று மனதில் வேண்டினேன். திருவண்ணாமலை இறங்கி வலம் வரும் போது, செங்கம் போகிற ரோட்டில், மண் ரோட்டில், நடந்து சென்று கொண்டிருக்கிறேன். அப்போது, அண்ணாமலையானை வேண்டிக்கிட்டு கீழே பார்த்த போது, இரண்டு ரூபாய் சிகப்பு தாள், நான்காக மடித்து கிடந்தது. அதை கீழே குனிந்து எடுத்து கையில் வைத்துக் கொண்டு நடந்து சென்றேன். என் கண்களில் நீர் ததும்ப அழுது கொண்டு, அப்பனே என்ன இது ஆச்சரியமாக இருக்குது சாமி, நான் ..கேட்டது இரண்டு ரூபாய் தான் அதையே கொடுத்துவிட்டாயே, இதை என் நண்பர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி மகிழ்ந்தேன். என் வாழ்க்கையில் இதுவரை நான்கு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கு.
     
இரண்டாவது நிகழ்ச்சி மட்டும் சொல்லி, திருவண்ணாமலை, தீபம் ஏற்றுவதற்கு முன்னால், விடியற்காலையில் பரணி தீபம் ஏற்றி பின்பு மாலையில் அதை கொடி மரத்தில் முன்பு நின்று 6.00 மணிக்கு விளக்கை மலையை பார்த்து காட்டினால், அதை பார்த்து தான் மலை மீது மகா தீபம் ஏற்றுவார்கள். ஆனால், திருவண்ணாமலையிலே பொறந்து வளர்ந்து, படித்தும், இந்த பரணி தீபம் என்றால் என்ன! அதை எப்படி நடத்துகிறார்கள் என்று எனக்கு உண்மையிலே தெரியாது. இதை எப்படியாவது பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். விடியற்காலை 2.00 மணிக்கெல்லாம். குளிச்சிட்டு, ரோட்டுக்கு வந்து பஸ்சுக்காக, காத்துகிட்டிருக்கேன். எந்த பஸ்சும் வரல! ‘‘அப்பா அண்ணாமலை’’ என்னை எப்படியாது தூக்கினு போய் தொப்புனு திருவண்ணாமலையிலே போட்டுடேன் என்று பலவாறு சிந்திக்கலானேன். அப்பாடா வன்னிகந்தன் பஸ் வந்தது, வேகமாக ஏறி அமர்ந்து கொண்டேன். இப்போது கூட பஸ் போக்குவரத்துக்கும், டீ செலவுக்கும் தான் காசு இருக்கு. பஸ்சை விட்டு இறங்கி வேக வேகமாக நடந்து போய் கோபுரத்தை அடைந்தேன். கோபுரத்தின் முன்னால், பக்தர்கள் வரிசையில் நின்று உள்ளே செல்ல வடக்கு - தெற்கு மூங்கில் கழிகளை கட்டியிருந்தார்கள். வடக்கு புறம் பெண்கள் கூட்டம், தெற்கு புறம் ஆண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். நானும் ஆண்கள் வரிசையில் நின்று கொண்டு, மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தேன். கோபுரமுன்வாயிலில் போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். வரிசையில் வரும் பக்தர்களிடம் போலீஸ்காரர் ஒருவர் பாஸ் இருக்கா! இருந்தால் உள்ளே அனுப்புகிறார், நான் என் முன்னால் நின்று இருப்பவரிடம் கேட்டேன் என்ன சார் பாஸ் கேட்கிறாங்க! என்று கேட்டேன்.  ஆமா சார் நாங்க பாஸ் வாங்கிட்டோம். எவ்வளவு சார் என்று கேட்டேன். 25 ரூபாய் என்றார்.‘‘அட பகவானே! நான் மூங்கில் துறைப்பட்டு போறதுக்கும், டீ செலவுக்கும் தான் வைச்சிருக்கேன் அதிகமா ரூபா கூட இல்லையே என்று எண்ணிக் கொண்டு. வரிசையை விட்டு குனிந்து வெளியே வந்து, கோபுர முன் வாயில் முன்னால் நின்று அண்ணாமலையானே, போச்சா என் உழைப்பு போச்சா என்று நினைத்தபடியே சுற்று முற்றும் பார்த்தேன். அங்கு காவல். நின்ற போலீஸ் காரர்களில் ஒருவர் என்ன சார் பாஸ் வேணுமா! ‘‘ஆமா சார் என்றேன், இந்தாங்க என்று பாஸ், ஒன்றை என் கையில் கொடுத்தார். அழுது கொண்டே வரிசையில் ஓடினேன். என் கண்களில் தண்ணில் வந்து, ஐயா, எனக்கு கோடி கோடியா பணம் கொடுத்தாலும் சந்தோஷப்பட மாட்டேன். உன் அருள் இருக்க… அது போதும் என்று எண்ணி பார்த்து விட்டு வீடு திரும்பினேன்.
V. அழகேசன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 05-03-2021

  05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 100farmmmm

  100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

 • train4

  கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

 • mars-4

  செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

 • hgoteell__sss

  தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்