இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-12-18@ 17:54:02

டிச 19, சனி: பஞ்சமி. திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை இன்று கருட தரிசனம் நன்று. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருமொழித் திருநாள் தொடக்கம்.
டிச 20, ஞாயிறு: சஷ்டி. ஆவுடையார்கோயில் ஸ்ரீமாணிக்க வாசகர் உற்ஸவாரம்பம். வெள்ளிச் சிவிகையில் பவனி.
டிச 21, திங்கள்: சப்தமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மகிஷாசுரவதம் திருக்கோலமாய் காட்சி. நாச்சியார் கோயில் கல்கருட சேவை.
டிச 22, செவ்வாய்: அஷ்டமி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி. மைதுலாஷ்டமி.
டிச 23, புதன்: நவமி. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதிவுலா. ஆவுடையார்கோயில் ஸ்ரீமாணிக்கவாசகர் திரிபுரசம்ஹார லீலை. வாயிலார் நாயனார் குருபூஜை.
டிச 24, வியாழன்: தசமி. ஸ்ரீவிஷ்ணு ஆலயங்களில் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்.
டிச 25, வெள்ளி: ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி. பகவத்கீதா ஜெயந்தி. விஷ்ணு ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு. திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் தேரோட்டம்.