SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மே 25 முதல் 31 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல தடைகள்லாம் நீங்கி, நீண்ட நாளைய கனவான சில சுபவிசேஷங்கள் சிறப்பாக நடந்தேறுமுங்க. புது உறவுகள் முளைக்கும், மகிழ்ச்சியும்  தருமுங்க. அதே சமயம், குடும்பத்தாரோடு வாக்குவாதம் வேண்டாங்க. பெற்றோர், பிற பெரியவங்க உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. எண்ணி யதெல்லாம் ஈடேறுமுங்க. ஆக்கபூர்வமான எந்த முயற்சியும் வெற்றி தருமுங்க. வியாபாரம், தொழிலில் சாதித்துக் காட்டுவீங்க. போட்டிகள், தடைகளை யும் மீறி, லாபமும் வளர்ச்சியும் சந்தோஷம் தருமுங்க. உத்யோகத்ல புதுப்புது யோசனைகளால் புது உயரத்தை எட்டுவீங்க. தேடிவரும் புது பொறுப்பு களையும் எளிதாக நிறைவேற்றி, பெருமை தேடிப்பீங்க. பாரம்பரிய நோய் அறிகுறி தெரிசா, உடனே மருத்துவர் யோசனையைக் கேட்டுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்; குடும்பத்தில் மதிப்பு உயரும். ஞாயிற்றுக்கிழமை அம்மனை வழிபடுங்க: அரவணைத்துக் காப்பாள் அன்னை.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கூர்மையான நோக்கு, புது யோசனைகளால நீங்களும் மேம்பட்டு, குடும்பத்திலும் வெளிவட்டாரப் பழக்கத்திலும் நல்மதிப்புப் பெறுவீங்க. நீங்க சொல்ற  தீர்வு எல்லோருக்கும் நன்மை தருமுங்க. பிள்ளைங்க நடவடிக்கைகளில் கவனம் வையுங்க. அவங்க பாதை மாறிப் போறதாகத் தெரிஞ்சா, நிதானமா  விசாரிங்க. நேரடியாகவே அவங்ககிட்ட பேசி, சில விஷயங்களை சரிபண்ணிக்கலாமுங்க. பொதுவாகவே பேச்சிலும் சாப்பிடுவதிலும் கட்டுப்பாடு வேணு முங்க. இது குறிப்பா, விருந்து, கேளிக்கையின் போது மிக அவசியமுங்க. வியாபாரம், தொழிலிடத்தில் நிதானமாகப் பேசி நன்மைகளைப் பெறுங்க.  உத்யோகத்ல மேலதிகாரி என்ன சொன்னாலும், ‘சரி சரி’னு சொல்லிட்டுப் போய்கிட்டே இருங்க. சளி, சுவாசக் கோளாறு, எலும்பு தேய்மானம்னு  உபாதைகள் வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குதர்க்கமாகப் பேசி சூழ்நிலையை மோசமாக்காதீங்க. புதன்கிழமை பெருமாளை வழிபடுங்க; புதுமை நலம் பெறுவீங்க.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எடுத்தேன் கவிழ்த்தேன்ங்கற அடாவடித்தனத்திலேர்ந்து விடுபடுங்க. குறிப்பாகப் பெரிய முதலீடு ஏதாவது செய்யறதுன்னா சரியா ஆலோசிச்சு, உங்க மேல அக்கறை உள்ள பெரியவங்க யோசனையைக் கேட்டுக்கோங்க. தடைகள்லாம் விலகி சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்குமுங்க. முயற்சிகள்  வெற்றியாகும். இப்படி காரியம் ஜெயமாகும்போது அனாவசியமா பழிவாங்கற எண்ணத்தையும் தேவையில்லாம வளர்த்துக்கறீங்களே, அது ஏன்? உய ரத்துக்குப் போகும்போது நல்லதையே நினைக்கறதுதான் சறுக்கி விழாதபடி காக்கற பற்றுக் கோல்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. ஒவ்வாமை உபாதை யால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படலாம். உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. உத்யோகத்ல உருவான பிரச்னை முடிவாகி, அதனால இடமாற்றம்  கிடைச்சா, அமைதியா ஏற்றுக்கோங்க; நல்லது.

இந்தத் தேதிப் பெண்களுக்கு புது உறவால சந்தோஷம் உண்டுங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை  வழிபடுங்க; ஆனந்தம் நிலைக்கும்.   

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல சங்கடங்கள் மாறி, சந்தோஷம் பூக்குமுங்க. படிப்பு, தொழில் அல்லது உத்யோக நிமித்தமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவங்க மறுபடி  ஒண்ணு சேருவீங்க. உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவை வெறுத்துப் போனவங்களும் குடும்பப் பெரியவங்க முயற்சியால மறுபடி ஒண்ணு  சேர்ந்து நல்ல மனமாற்றம் பெறுவீங்க. மனச்சோர்வு நீங்கிடுமுங்க. மனதில் நம்பிக்கை உறுதியாகி, எதிர்கால பயங்களெல்லாம் நீங்கி, தெளிவு பெறு வீங்க. சரியான எண்ணங்களும் அதன்படி சரியான செயல்களுமாக பல புது பலன்களை அடைவீங்க. உத்யோகஸ்தர்களுக்குத் தடை நிவர்த்தி ஏற்படு முங்க. வியாபாரம், தொழில்ல எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவீங்க. தினமும் சிறிய அளவில் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு ஏற்பட்டிருந்த சங்கடங்கள் எல்லாம் தீருமுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரரை வழிபடுங்க; மகிழ்ச்சி மேலோங்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வியாபாரம், தொழில்ல பழைய பாக்கிகள்லாம் எளிதாக வசூலாகிடுமுங்க. புது ஒப்பந்தங்களால பல நன்மைகளை அடைவீங்க. உத்யோகத்ல உங் களுக்குப் பிந்தியவங்க பெற்ற சலுகைகளைப் பார்த்து வருந்திய உங்களுக்கு, பதவி, வருமான உயர்வுகள் தேடி வருமுங்க. இந்த வாரம், வாகனப்  பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்க. எந்தச் சிறு பழுதையும் அலட்சியமா விட்டுடாதீங்க. வாகனத்தையே நம்பி தினசரி நடவடிக்கைகள்ல ஈடுபடற வங்க, நன்றி தெரிவிக்கற வகையில, அந்த வாகனக் குறைகளைத் தீர்த்து வையுங்க! வேற்று மொழியினர், வேற்று நாட்டினரால திடீரென்று நன்மைகள்  ஏற்படுமுங்க. படைப்பாளிகளுக்கு விருது, சன்மானம், அங்கீகாரம் எல்லாம் கிடைக்குமுங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயைப் பரிசோதிச் சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்குப் புதுப் பொருள் சேரும்; மாதவிடாய்க் கோளாறு ஏற்படலாம். சனிக்கிழமை அனுமனை வழிபடுங்க; சங்கடங் கள் விலகும்.  

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பெற்றோர், கூடப் பிறந்தவங்க, பிள்ளைகளோட உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. அனாவசிய கற்பனைகளால நீங்களே மனச்சோர்வை வள ர்த்துக்காதீங்க. குடும்பத்துப் பெரியவங்க, வாழ்க்கைத் துணையின் யோசனை கேட்டே எதையும் செய்ங்க.  விடுபட்டிருந்த குலதெய்வ வழிபாட்டை  நிறைவேற்றிடுங்க. அதேபோல நீத்தார் கடன் பாக்கியிருந்தா அதையும் நிறைவேற்றுவதோடு, வருடந்தவறாம அந்த சாங்கியத்தை மேற்கொள்றதாக  உறுதி எடுத்துக்கோங்க. வழக்குகளை உங்க நேரடி கவனத்துக்குக் கொண்டுவாங்க. வியாபாரம், தொழில் எல்லாம் நல்ல மாதிரியாகத்தான் போய்கிட் டிருக்கு. உத்யோகத்ல உடன் வேலை செய்யறவங்களை விமர்சிக்காதீங்க. நரம்பு உபத்திரவம், அடிபடுதல்னு ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அண்டை அயலார் வீட்டு விஷயங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க; மூக்கு உடைபட்டுக்காதீங்க. வெள்ளிக்கிழமை விநாயகரை வழிபடுங்க; வெற்றி  உங்க பக்கம்தான்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில், உத்யோகத்தில் ஏதேனும் மாற்றம் வருமானா அதை உடனே ஏற்றுக்கோங்க; எதிர்கால நன்மைகளுக்கு கேரண்டி. சிலர் உபதொழிலையும்  மேற்கொள்வீங்க. இதுக்குத் தேவையான மூலதனம், உற்சாகம், உடல் சக்தி எல்லாமும் தாமே கூடி வருமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்க, தங்க ளோட திறமைகளுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கக்கூடிய வேறு வேலையைத் தயங்காம ஏற்கலாமுங்க. ஆனா என்ன காரணமா இருந்தாலும் தாய்  நிறுவனத்துக்குத் திரும்ப வேண்டாங்க. தந்தையார் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கோங்க. வீடு, நிலம் வாங்கறவங்க அதுக்கான ஆவணங்களை  உன்னிப்பாக சரி பாருங்க. குடும்பத்ல வசதிகள் அதிகரிக்குமுங்க. ஒற்றைத் தலைவலி, காது-மூக்கு-தொண்டைப் பகுதிகள்ல உபாதை வரலாமுங்க.  கண் பரிசோதனை செய்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு யோகமான காலமுங்க; செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடுங்க; துன்பம் எது வுமே அண்டாது.  

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அரசுத்துறை அலுவலர்கள் எந்த கையெழுத்தைப் போடுமுன்னும் நன்றாகப் படித்து, புரிந்து கொண்டு, அப்புறம் போடுங்க. குடும்ப விவகாரங்கள்ல  அந்நியர் யாரையும் அனுமதிக்காதீங்க. எந்த அனுதாபத்துக்காகவும் அவங்க பஞ்சாயத்தை நீங்க எதிர்பார்த்தீங்கன்னா, அவங்க உங்க அவஸ்தையில  குளிர்காய்வாங்களே தவிர, எந்த நற்பயனும் விளையப் போகிறது இல்லீங்க. இதனால அனாவசியமா உங்க குடும்பத்தாரோட மதிப்பிலேர்ந்து நீங்க  இறங்கவும் கூடும். வியாபாரம், தொழில்ல ஏதேனும் பெரிய முதலீடு செய்யறீங்கன்னா வீட்டாரை யோசனை கேட்டுக்கோங்க. பயணங்கள்ல எச்சரிக் கையா இருங்க, உடமைகள் பறி போகலாம். ஏற்கெனவே முதுகு எலும்பு உபாதை இருக்கறவங்க எச்சரிக்கையா இருங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்பப் பிரச்னையை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாங்க; இதனால அவமானம்தான் மிஞ்சும். திங்கட்கிழமை சிவன்-பார்வதியை வழிபடுங்க. சிக்கல்  எல்லாம் சீராகும்.  

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஏற்றுமதி-இறக்குமதி தொழில்ல ஈடுபட்டவங்களுக்கு அரசு சலுகைகள் பெரிய ஆறுதலாக இருக்குமுங்க. புது ஒப்பந்தங்கள் லாபம் தரும். தைரியமாக  பெரிய முதலீடுகளைச் செய்யலாமுங்க; தள்ளிப்போடாதீங்க. பெரிய மனிதர் சந்திப்பு பல நன்மைகளைத் தருமுங்க. குறிப்பாக உங்க பிள்ளைகளோட  எதிர்கால சந்தோஷத்துக்கு அந்த நட்பு உதவுமுங்க. சிலர் வசதியான, புதிய வாகனம் வாங்குவீங்க. பழைய வாகனத்தையும் நல்ல விலைக்கு விற்க  முடியுமுங்க. தொலைதூரப் பயணங்களால மகிழ்ச்சி உண்டுங்க. சில விஷயங்கள்ல குடும்பத்தார் யோசனையைப் புறக்கணிச்சு நண்பர் யோசனை யைக் கேட்காதீங்க. குடும்பத்தாரைவிட யாரும் உங்க மேல அதிக அக்கறை கொள்ள முடியாதுங்க. கழுத்து, மூட்டுப் பகுதிகள்ல வலி ஏற்படுமுங்க.  

இந்தத் தேதிப் பெண்களோட கனவுகள் நனவாகுமுங்க. பெற்றோர் ஆதரவோடு காதல், கல்யாணமாகக் கைகூடுமுங்க. ஞாயிற்றுக்கிழமை பிள்ளை யாரை வழிபடுங்க; பிரகாசமாகும் வாழ்க்கை.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்