இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-12-12@ 09:41:30

டிச 12, சனி : திரயோததி. சனி பிரதோஷம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவரதராஜர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்.
டிச 13, ஞாயிறு : சதுர்த்தசி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை. மாத சிவராத்திரி. ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி ஸ்ரீமங்களாம்பிகை சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி குப்த கங்கையில் தீர்த்தம் கொடுத்தல்.
டிச 14, திங்கள் : அமாவாசை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சோமவார அரசமர பிரதட்ஷணம். கார்த்திகை சோமவாரம் சிவாலயங்களில் சங்காபிஷேகம். கிணற்றில் கங்கையை வரவழைத்த திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் கங்கா (ஆ) கர்ஷணம்.
டிச 15, செவ்வாய் : பிரதமை. குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. ஸ்ரீசனீஸ்வரபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி( திருக்கணித பஞ்சாங்கப்படி)
டிச 18, வெள்ளி : சதுர்த்தி. திருவோண விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் பகற்பத்து உற்சவ சேவை.