SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இல்லந் தோறும் தெய்வீகம் நலங்கள் யாவும் அருளும் நவதீப எண்ணெய்

2020-12-02@ 11:16:58

ஜோதி வடிவானவன் இறைவன் என்பதே இந்து தர்மத்தின் கருத்து. ஒளியாய் ஜொலித்தான் அருணாச்சலேஸ்வரன் அண்ணாமலையில். கனலில் கருவாகி புனலில் உருவானான் கந்தன் பொய்கையில். மகர  ஜோதியாய் எழுகிறான் மணிகண்டன் சபரிமலையில். சுடர் ஒளியிலே அவதரித்தான்
சுடலைஈசன் கயிலையில். ஒளிப்பெரும் சுடராக உருவாகி லிங்கமாய் முளைத்தான் கபாலீஸ்வரன் மயிலையில்.ஆதிமனிதன் ஒளியாய் வழிபட்ட இறைவனுக்குத்தான், நம் முன்னோர்கள் உருவம்  கொடுத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலானார்கள்.

இல்லத்திலும் இறைவனை எழுந்தருளச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வீட்டிலும் திருவிளக்கேற்றும் முறையை முன்னோர்கள் கொண்டு வந்தனர். அந்த விளக்கை எப்படி ஏற்ற வேண்டும். எவ்வாறு  ஏற்ற வேண்டும் எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும் என வகுத்துள்ளார்கள். ஒவ்வொரு திசைக்கும் அருள் கடாட்சம் உண்டு என்பதை அறிந்திருந்தார்கள்.

விளக்கில் கிழக்கு முகம் பார்த்து ஏற்றினால் துன்பம் அகலும், வீட்டிலுள்ள பீடைகள் ஒழியும். மேற்கு முகம் நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை தீரும்.
சனி தோஷம் விலகும். வடக்கு முகம் பார்த்து ஏற்றினால் செல்வம் பெருகும். திருமணம் போன்ற மங்கள காரியம் உண்டாகும். கல்வி சிறக்கும். ஞானம்
பெருக்கும்.தெற்கு முகம் பார்த்து விளக்கு ஏற்றுவதை மட்டும் தவிர்க்க வேண்டும்.

விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெயில் கூட பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் முக்கூட்டு தீப எண்ணெய், பஞ்ச தீப எண்ணெய், அஷ்ட தீப எண்ணெய், நவ தீப எண்ணெய் என பலவகை  எண்ணெய்களில் தீபம் ஏற்ற பலன்கள் பல உண்டாகும். இதில் சிறந்த பரிகாரமாகவும், வேண்டுதல் விரைந்து நடைபெறவும் நவ தீப எண்ணெயே உகந்தது. நவ தீப எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டால்  நற்பலன்கள் அதிகம் கிடைக்கும்.

அந்த வகையில் நவ தீப எண்ணெய் சிறந்ததாக உள்ளது. இந்த நவதீப எண்ணெய்யில் பசுநெய், நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், இலுப்பை எண்ணெய், புங்க எண்ணெய், வேப்ப எண்ணெய்,  தேங்காய் எண்ணெய், அரிசி எண்ணெய், சந்தனாதி தைலம் என ஒன்பது வகை எண்ணெய்களும் உள்ளடக்கம்.இதிலுள்ள ஒவ்வொரு எண்ணெய்க்கும் உரிய தனித்துவம் உண்டு.

பசு நெய் - வீட்டில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் உண்டாகும். அஷ்ட லட்சுமிக்கு உகந்தது. நல்லெண்ணெய் - கால கிரக தோஷம் போக்கும். மகா பைரவருக்கு ஏற்றது. காவல் தெய்வங்களான  சுடலைமாடன், முனீஸ்வரன், அய்யனார், சாஸ்தா, மதுரைவீரன், காத்தவராயன் அம்மன் முதலான தெய்வங்களுக்கு உகந்தது.ஆமணக்கு எண்ணெய் - இல்லத்தில் மன அமைதி கிட்டும். தம்பதியரிடையே  ஒற்றுமை ஓங்கும். தட்சிணாமூர்த்திக்கு உகந்தது.
இலுப்பை எண்ணெய் - கடன் தொல்லை அகலும். இல்லத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகிழ்ச்சி தங்கும். புவனேஸ்வரி அம்மனுக்கு உகந்தது. குல தெய்வத்திற்கு ஏற்றது.

புங்க எண்ணெய் - திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிட்டும். சர்ப்ப தோஷம் விலகும். நாக தெய்வத்திற்கு உகந்தது. நாகம் குடை பிடிக்கும் அம்மன் மற்றும் சுவாமிக்கு ஏற்றது.வேப்ப எண்ணெய் -  எதிரிகள் தொல்லை நீங்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். பராசக்திக்கு உகந்தது. காளி, வாராகி அம்மனுக்கு ஏற்றது.தேங்காய் எண்ணெய் - கண் திருஷ்டி நீங்கும்.  வியாபாரம் செழிக்கும். விளைச்சல் அதிகரிக்கும். பகவதி அம்மனுக்கும், விநாயகருக்கும் ஏற்றது.

அரிசி எண்ணெய் - இன்னல்களை போக்கும். தடைகளை தகர்த்தெறிய வைக்கும். அன்னலட்சுமிக்கு உகந்தது.சந்தனாதி தைலம் -  வீட்டிலும், வணிக நிறுவனத்திலும், தொழில் ஸ்தாபனத்திலும் செல்வம்  பெருகும். குபேரன் அருள் கிட்டும்.இத்தகைய மகத்துவம் வாய்ந்த நவ தீப எண்ணெயில் விளக்கேற்றி வேண்டினால்வேண்டுதல் பலிக்கும். வெற்றிகள் குவியும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்