குரு பெயர்ச்சி சஞ்சாரம் விளக்கங்கள்
2020-11-05@ 09:54:29

குரு பகவான் 15 - 11 - 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48க்கு உத்திராடம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
குரு பகவான் அதிசாரம்
குரு பகவான் 5.4.2021. திங்கட்கிழமை இரவு 1.09க்கு அவிட்ட நட்சத்திரம் 3ஆம் பாதம் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்கிறார்.
குரு பகவான் வக்கிரம்
குரு பகவான் 16.06.2021 முதல் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். 13.10.2021 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
குரு பகவான் அஸ்தமனம்
குரு பகவான் 22-01-2021 வெள்ளிக்கிழமை காலை மணி 10.40க்கு அஸ்தமனமாகி 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.36 க்கு கிழக்கில் உதயமாகிறார்.
குரு பகவான் நட்சத்திர சாரம்
மகர ராசியில் பிரவேசிக்கும் குரு, சூரியன் நட்சத்திரமான உத்திராடத்திலும், சந்திரன் நட்சத்திரமான திருவோணத்திலும், செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்திலும் தனது மகர ராசி சஞ்சாரத்தை செய்கிறார். குரு பார்க்கும் ராசி வீடுகள் குரு பகவான் மகர ராசியில் இருந்து தனது சுபயோக சுப பார்வையாக சுக்கிரன் வீடான ரிஷப ராசியை பார்க்கிறார். அடுத்து சந்திரன் வீடான கடக ராசியை பார்க்கிறார். அடுத்து புதன் வீடான கன்னி ராசியை பார்க்கிறார்.
குருவின் அம்ச பலம்
மகர ராசி உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குரு வர்கோத்தமம் அடைகிறார். உத்திராடம் நான்காம் பாதத்தில் குரு, மீன ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். திருவோணம் நான்காம் பாதத்தில் கடக ராசியில் உச்சம் அடைகிறார்.
குரு சஞ்சாரம்
குரு பெயர்ச்சியாகி மகர ராசிக்கு செல்கிறார், குரு, சனி வீட்டிலும், சனி, குரு வீட்டிலும் இருப்பதால் பரிவர்த்தனை யோகம் உண்டாகிறது. டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சியாகி மகர ராசிக்கு சென்று குருவுடன் இணைகிறார். இதனால் நீச்ச பங்க ராஜ யோகம் குருவிற்கு ஏற்படுகிறது.
குரு பார்வை சிறப்பு
குரு பார்க்க கோடி நன்மை, குரு பார்க்க குபேர யோகம், குரு பார்வை தோஷம் நீங்கும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். இந்த மகர ராசி குரு பெயர்ச்சி மூலம் பார்வை யோகம் பெறும். ராசிகள், ஸ்தானங்கள் பற்றிய விவரங்கள்.
மேஷ ராசிக்கு தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
ரிஷப ராசிக்கு பூர்வ புண்ணிய யோக ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
மிதுன ராசிக்கு தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
சிம்ம ராசிக்கு தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
கன்னி ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
விருச்சிக ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
மகர ராசிக்கு பூர்வ புண்ணிய, பாக்கிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
மீன ராசிக்கு பூர்வ புண்ணிய யோக ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.
மேற்படி இந்த ராசிக்காரர்களுக்கு தன ஸ்தானத்தையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் தடைகள் நீங்கும், தொட்டது துலங்கும், பட்டம், பதவி, பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும், திட்டங்கள் வெற்றியடையும். மகர ராசியில் இருந்து குரு பகவான், ரிஷப ராசியையும், கடக ராசியையும், கன்னி ராசியையும் பார்ப்பதால். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்கள் இருக்கும். அவரவர்கள் எண்ணங்கள், குறிக்கோள்கள் நிறைவேறும்.