SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு

2020-10-15@ 10:15:53

டாக்டர்: நெல்லை வசந்தன்

ஆற்றங்கரை நாகரிகத்திலிருந்து ஆண்டுகள் செல்லச் செல்ல மனிதன் தனது தேவைகளை மாற்றிக்கொண்டே வருகிறான். கட்டை வண்டியில் ஆரம்பித்து கார் வரையிலான பயணம் மனிதனின் முன்னேற்றத்தையே குறிக்கிறது. தனி ஒரு மனிதனால் தனக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்ய இயலாது. பருத்தி விளைவது ஓரிடம். பஞ்சாவது மற்றொரு இடம். ஆடையாவது அதற்கடுத்த இடம். இவ்வாறு தொழில்கள் பெருக ஆரம்பித்தன. வியாபாரம் விருத்தியாகியது. கூட்டுத் தொழில் ஆரம்பமாகியது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழில் விரிவுபடுத்த தலைப்பட்டபோது வெளியில் தனம் வைத்திருப்பவரை முதலீடு செய்யத் தூண்டி விற்பனைக்கு விழுக்காடு கணக்கும் செய்து லாபத்தில் பங்கு கொடுத்து வியாபாரம் ஆரம்பித்தது. இதை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு நிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் வழி கோலியது. மத்திய அரசிடம் அனுமதி பெற்ற ஸ்தாபனங்கள் பங்குச்சந்தை என்ற பெயரோடு வாணிபத்தை நடத்துகிறது. இப்பங்கு சந்தையில் கலந்து கொள்பவர் சிலர்.

கேள்வி பட்டவர் பலர். இதை கேள்வி படாதவரும் பலர்.  ஜோதிட ரீதியாக எல்லாப் பொருட்களுக்கும் எல்லா செயல்களுக்கும் கிரகங்களே காரணமாகின்றன என்பதை அறிய முடியும். ஒவ்வொரு பொருளுக்கும் மூலத்திற்கும் பொருள் உற்பத்திக்கும் விற்பனைக்கும் பெரும் லாபத்திற்கும் இழப்பிற்கும் இக்கிரகங்களே முன்னோடி. எது எப்படியாயினும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கிரகங்களின் கதிர்வீச்சுகளே கால வெள்ளத்தையும், காசு பணத்தையும் நிர்ணயிக்கின்றன என்பது உறுதியாகிறது. இதே போன்று பங்கு மார்க்கெட் என்றும் தேர்வில் பல பொருட்கள் தலையிடுகின்றன. எல்லா பொருட்களிலும் எல்லோரும் வியாபார ரீதியாக தலையிட முடியாது.

அவரவர் ஜனன ஜாதகப்படி கிரகத்தின் வலு, கிரகத்தின் சேர்க்கை, தசாபுக்தி இவைகளை மையமாக வைத்தே லாபங்கள் ஈட்ட முடியும். நான் முன்பே கூறியது போன்று ஒரு பொருளுக்கு ஒரு கிரகமோ! அல்லது கிரகங்களின் சேர்க்கையோ காரணமாக அமைகிறது. உதாரணமாக ஒரு ஜாதகத்தில் சனி வலுத்து நல்ல நிலைமையிலிருந்தால் சனியின் காரகமான தோல், இரும்பு போன்றவற்றில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டலாம். திசாபுத்தியும் சாதகமாக இருந்தால் பெரும் லாபத்தையும் ஈட்டலாம். இவ்வாறு பங்கு மார்க்கெட்டில் பவனி வரும் பொருட்களின் குறைநிறைவை இயக்கும் கிரகங்களையும் பட்டியலிட்டு காட்டுகிறேன்.

பொருள்களை இயக்கும் கிரகங்கள்

பொருள்கள்                                      பொருள்களுக்கு கிரக சம்மந்தம்

லெதர்    சனிலக்கேஜ்(சூட்கேஸ் பெட்டி)              சனி-சுக்கிரன்
இயந்திர தளவாடங்கள்                                     செவ்வாய்-சனி-சுக்கிரன்
அலுவலக பொருள்கள்                                     சுக்கிரன்-குரு-புதன்
பிளாஸ்டிக் பொருள்கள்                                     குரு-செவ்வாய்-இராகு
பெயின்ட்                                                 செவ்வாய்-புதன்
பேப்பர்                                                 இராகு
பெஸ்டிசைட்ஸ்                                     இராகு-சந்திரன்-செவ்வாய்
பெட்ரோலிய தயாரிப்பு                                     சனி-சந்திரன்
குழாய்கள்                                                 சனி-சந்திரன்
கப்பல் துறை                                      சனி-சுக்கிரன்-இராகு
ஆயில்                                                 சனி
இரும்பு                                                 சனி
இனிப்பு                                                 இராகு-சுக்கிரன்
தேயிலை                                                 குரு-சந்திரன்-சுக்கிரன்
தொலைபேசி                                      குரு-புதன்
டெக்டைல்ஸ்                                      சந்திரன்-சுக்கிரன்-சனி
மெஷினரி காட்டன்                                      சுக்கிரன்-சனி
ரெடிமேடு துணிகள்                                      சுக்கிரன்-சனி-சந்திரன்
டயர்ஸ்                                                   சனி
சினிமா                                                   சனி-சந்திரன்-செவ்வாய்-புதன்
ரப்பர்                                                   சனி-புதன்
விவசாயம்                                                  சனி-சந்திரன்
கோழிகுஞ்சு                                        சனி-செவ்வாய்
புகைப்படம் (பிலிம்)                                       சனி-சந்திரன்
பிரின்டிங்                                                    சந்திரன்-புதன்
ஏற்றுமதி, இறக்குமதி                                       இராகு
வாட்ச்                                                  இராகு-செவ்வாய்-சனி
ரசாயணம்                                                  செவ்வாய்-குரு
இரும்பு-அலுமினியம்                                        சனி
ஆட்டோமொபைல்ஸ்                                       சுக்கிரன்
பிரிவேரிஸ்                                                   ராகு-சனி-சந்திரன்
எலெக்டிரிக்கேபிள்                                       செவ்வாய்-சனி
சிமென்ட்                                                   செவ்வாய்-ராகு
சிகரெட்                                                   சுக்கிரன்-ராகு
கம்ப்யூட்டர்                                                   சனி-ராகு
கட்டிட தளவாடங்கள்                                        சனி-செவ்வாய்
சைக்கிள்                                                    சுக்கிரன்
டைமெண்டு, ஜுவல்லரி                                        சுக்கிரன்-குரு
வீட்டு பொருள்கள்                                        சுக்கிரன்-சனி-செவ்வாய்
மருந்து                                                    செவ்வாய்-சூரியன்
எலெக்டிரிக் சாமான்கள்                                        செவ்வாய்-சனி
வெடி மருந்துகள்                                        செவ்வாய்
பெர்டிலைசர் (உரம்)                                         செவ்வாய்-குரு
உணவு                                                    செவ்வாய்
கிளாஸ்                                                    செவ்வாய்-சனி-சூரியன்
பற்பசை                                                    சனி-குரு
போர்டிங் அண்டு லாட்ஜிங்                            செவ்வாய்-சுக்கிரன்-ராகு
இன்டஸ்டிரியல் கேஸ்                                        செவ்வாய்-சந்திரன்
தவணை முறை                                        புதன்-சனி
பலநிற பெயின்ட்                                        புதன்-சூரியன் - சந்திரன்- சுக்கிரன்
சிவப்பு நிற துணி                                        புதன்-சூரியன்-சந்திரன்
மெடிசன் டானிக்                                        சூரியன்-செவ்வாய் விருச்சிக சம்மந்தம்
பருத்தி நூல்கண்டு                                         சந்திரன்-புதன்
மதுபானம்                                                     சந்திரன்-செவ்வாய்-சனி
லெதர் இண்டஸ்ட்ரீஸ்                                        செவ்வாய்-சுக்கிரன்
தொழிற்சாலையந்திர தளவாடங்கள்                             செவ்வாய்-சனி
சிவப்பு நிற பெயின்ட் பெட்ரோலிய தயாரிப்பு
இரும்பு, காப்பர், டின்                                        செவ்வாய்-சுக்கிரன், சந்திரன்
ரசாயணம்                                                    சனி-செவ்வாய்
லெதர் கார்மென்ட்ஸ்                                        சுக்கிரன்- சனி

இவ்வாறாக கிரகங்களுக்கு குறிப்பிட்ட பொருட்கள் காரத்துவம் பெறுகிறது. அந்தந்த கிரகங்களின் திசாபுத்திகளில் அந்த கிரகங்கள் குறிப்பிடும் பொருட்கள் மீது முதலீடு செய்து வெற்றி பெறலாம்.

(விளையாட்டு தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்