SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்

2020-10-15@ 10:10:22

சென்ற இதழ் தொடர்ச்சி...

விபரீத ராஜயோகம்

ராஜயோக சேர்க்கை அமைப்புக்களில் சுப கிரகங்கள் மூலம் அந்த தசாபுக்திகளில் வரும். ராஜயோகத்தை போலவே சில மறைமுகமான கிரக அமைப்புக்கள் மூலம் ஒருவரை மிகப் பிரபலமானவராக ஆவதற்கு யோக அம்சங்கள் உள்ளன. பொதுவாக 6.8.12 ஆம் இடங்கள். எல்லாம் பிரச்னைகளை தரக் கூடிய இடங்களாக அறியப்படுகிறது. நோய்கள், பிரிவுகள், துக்கங்கள், கண்டங்கள், விபத்துக்கள், விரயங்கள், வழக்குகள், கடன்கள், எதிரிகள் என பல வகையான விஷயங்கள் இந்த 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த மறைவு ஸ்தான கிரகங்கள் ஒருவருக்கு மிகப் பெரிய ராஜயோகத்தை தந்து விடும். மிகச்  சாதாரண நிலையில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் கோடீஸ்வரர் யோகத்தை அனுபவிப் பார்கள். ராகு, கேது, சனி மூவரும் போன்ற கிரகங்கள் ஒருவருக்கு திடீர் ஏற்றத்தை கொடுத்துவிடும். சுப கத்திரி யோகமும், பாபகத்திரி யோகமும் சேர்ந்து ஒருவருக்கு உயர் உச்ச நிலையைத் தந்துவிடும்.

ஒருசிலருக்கு மனைவி வந்தவுடன் பட்டும், பகட்டுமான வாழ்க்கை வந்துவிடும். இன்னும் சிலருக்கு குழந்தை பிறந்தவுடன் தொட்டது துலங்கும், எல்லோரும் வியக்கும் அளவிற்கு எல்லா பாக்கியமும் கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது ஜோதிட விதி அந்த வகையில் இந்த 6,8,12-ஆகிய கிரகங்கள் பலமாக அமைந்தாலும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும், பரிவர்த்தனை, பார்வை பெற்றாலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். 3,6,8,12க்குரியவர்களின் தொடர்புகள் எந்த வகையிலாவது எதிர் பாராத ஏற்றத்தை தந்து விடும். ஆறாம் அதிபதி எட்டில், எட்டாம் அதிபதி ஆறில் இருந்தால் உயில் சொத்து சேரும். உழைப்பில்லாத செல்வம் கிடைக்கும். எது நடக்காது, எது கிடைக்காது என்று நினைப்பதெல்லாம் தானாகக் கூடி வரும். செல்வம், செல்வாக்கு, சொத்து, பதவி, உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். நீச கிரகம் பங்கமாகி 6,8,12க்குடையவர்களின் தொடர்பு பெற்று தசை நடந்தால் கோடிகளில் புரளுவார்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், அரசியலில் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், செல்வந்தர்களுக்கு பினாமியாகும் யோக அமையும். அதன் காரணமா வாழ்க்கைப் பாதை தலைகீழாக மாறிவிடும். பல லட்சங்கள், கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்க முடியாவிட்டாலும் அந்தக் காரை தன் பொறுப்பில் வைத்து ஓட்டி அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். பெரிய தொழில் அதிபருக்கு பினாமியாகும் அமைப்பு கிடைக்கும். அல்லது அவர்களிடம் இருந்து ஆதரவு, உதவிகள் கிடைக்கும். சில லட்சங்கள் போட்டு ஆரம்பிக்கின்ற தொழில் பல வகைகளில் பல்கிப் பெருகி பணம் சேரும். விபரீத ராஜயோகம் உள்ளவர்களுக்குக் கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒருவருக்கு சரியாக நடக்காத தொழில் இவர்கள் கை வைத்த நேரம் உச்சத்துக்கு கொண்டு போய் விடும். ராசி இல்லாத இடம், ராசி இல்லாத கடை என ஒதுக்கப்பட்ட பல விஷயங்கள், அது போன்ற இடங்களில் இந்த விபரீத ராஜயோகம் உடையவர்கள் தொழில், வியாபாரம் தொடங்கினால் ஒன்றுக்குப் பத்தாக பலகிப் பெருகும். வேலை சம்பந்தமான விஷயங்களிலும் எதிர்பாராத வெளியூர், வெளிநாட்டு வாய்ப்புக்கள் வந்து அமையும்.

நமக்கு சொந்தமாக அமைவது ஒருவகை யோகம், அடுத்தவருக்கு அமைவதை நாம் அனுபவிப்பது ஒருவகையான குருட்டு அதிர்ஷ்டம். குத்தகை, கமிஷன், காண்ட்ராக்ட் வகையில் எதிர்பாராத பெரிய தொகை மிகச்சுலபமாக வந்து சேரும். நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர் கொண்ட தோட்டங்கள், தோப்புக்கள், எஸ்டேட்டுக்களை வாங்க முடியாவிட்டாலும். அதை நிர்வாகம் செய்து அனுபவிக்கும் பாக்கியம் அமையும். சுருக்கமாக சொல்வதென்றால் ஒருவர் மிக விரைவாக, எளிதாக உயர்ந்த நிலைக்கு வருகிறார் என்றால் அவர் ஜாதகத்தில் விபரீத, நீச்ச பங்க ராக யோகம் வேலை செய்கிறது என்று அர்த்தம்.

இடமாற்றம்

ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்காம் இடம் என்பது மிக முக்கியமான ஸ்தானமாகும். குறிப்பாக வீடு, வண்டி, சுகம், வசிப்பிடம், சொகுசு என நாம் இருக்கும். இடம், வசிக்கும் இடம், வேலை செய்யும் இடத்தை குறிக்கும். இந்த நான்காம் வீட்டுக்குரிய கிரகம் நீச்சம் அடைந்தாலும், 6,8,12 ஆம் அதிபர்களுடன் சேர்க்கை பெற்றாலும் பிரச்னைகள் உண்டாகும். அதே நேரத்தில் நான்காம் வீட்டில் நீசக்கிரகம் இருந்தாலும், ராகு, கேது இருவரும் 6,8,12 ஆட் அதிபதிகள் இருந்தாலும். அந்த வீட்டின் சுபத்தன்மை, ஸ்திரத்தன்மை பாதிப்படையும். சிறு வயதில் குடும்பத்தைப் பிரிந்து தாத்தா பாட்டி, அல்லது உறவினர் வீட்டில் வளர்வார்கள். இவர்கள் பிறந்த பின்பு குடும்பத்தில் சொத்து சம்பந்தமான பிரச்னைகள், பாகப்பிரிவினை, விற்பது, வாங்குவது போன்றவை நடக்கும். தொழில், வியாபாரம், வேலை சம்பந்தமாக அடிக்கடி பயணங்கள், ஊர் விட்டு ஊர் சென்று தங்குவது.

இடமாற்றங்கள் இருக்கும். எல்லாவகையான வாகனங்களை வெளியூர்களுக்கு ஓட்டி செல்பவர்கள் ஜாதகங்களில் இந்த மாதிரியான அமைப்பு இருக்கும். அடிக்கடி குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் தங்க நேரிடும். வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வேலை செய்வார்கள். அந்நிய நாட்டிலேயே நிரந்தரமாக வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். வீடு, நிலம், சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது சிக்கல்கள் வரும். பூர்வீக சொத்துக்கள் பாகப்பிரிவினை சம்பந்தமாக பிரச்னைகளை சந்திப்பார்கள். பஞ்சாயத்து, போலீஸ், கோர்ட் என்று அலைய வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். பெரும்பாலானவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் தாத்தா, தந்தை காலத்திலேயே விரயமாகிவிடும்.

அரிய வகை அமைப்புக்கள்

1). லக்னத்திற்கு கேந்திரத்தில் எந்த கிரகம் இருந்தாலும் தன் தசா புக்தி காலங்களில் யோகத்தை செய்யும். உடன் யோக கிரகங்கள் சேர்ந்து இருந்தால் இரட்டிப்பு யோகம். ராகு, கேது இருவரும் கேந்திரங்களில் அதிக பலத்துடன் பலன் தருவார்கள்.

2). சந்திரனுக்கு 6,7,8ல் கிரகங்கள் இருப்பது சந்திராதி யோகம். சமூகத்தில் நல்ல  மதிப்பு, உயர் பதவிகள் வகிக்கும் பாக்கியம் உண்டாகும். சந்திரனுக்குக் கேந்திரத்தில் புதன் இருந்தால் சகல கலா வல்லவர் என்றே சொல்லலாம். எதையும் கிரகித்து கொள்வதில் வல்லவர்கள். சிறந்த கல்வியாளர்கள், பேச்சாளர்கள், நகைச்சுவை, நையாண்டித் தனமாக பேசக்கூடியவர்கள். எளிதாக எந்தக் கலையும் இவர்களுக்கு வசப்படும். கண்பார்த்தால் ைக செய்யும். இவர்களின் மன ஓட்டத்தை எவராலும் அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது. வௌிப்படையாக, உள்ளதை உள்ள மாதிரி பேசுவதாக தெரிந்தாலும், எதை மறைக்க வேண்டுமோ, அதை மறைத்து பேசும் வித்தகர்கள். கல்வி மூலம் புகழ் பெறுவார்கள். திட்டங்கள் போடுதல், திட்ட அறிக்கை தயாரிப்பது, கணிக்கு வழக்குகள். வாத எதிர் வாதங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப பேசுவது, கட்டடக் கலை, மிகத்துல்லியமான கணிதம், வரை படங்கள், வீடு கட்டுவதற்கான வரை படங்கள். உள் அலங்காரம், கலைத்திறன், ஓவியம், சிற்பக்கலை. என எங்கு எதில் எல்லாம் நுணுக்கங்கள் உள்ளதோ அங்கெல்லாம் இவர்கள் தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துவார்கள்.

3). செவ்வாய், சந்திரன் இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக அமைந்து நான்காம் வீட்டோடு தொடர்பு, சம்பந்தம் உண்டானால் அரிய வகையான அம்சங்கள் கூடி வரும். தாய், தாய்வழி, தாய் மாமன் போன்றவகைகளில் ஆதாயம் அடைவார்கள். பூமி பாக்கிய யோகம் உண்டு. தோட்டம், தோப்பு, காப்பி, தேயிலை எஸ்டேட் என நிலபுலன்கள் அமையும். விவசாயம் மூலம் செழிப்படைவார்கள். கட்டட சம்பந்தமான தொழில்கள் செய்து பொருளீட்டுவார்கள். செங்கல், மணல், ஜல்லி போன்ற வகையில் ஜீவனம் அமையும். பல வீடுகள், பிளாட்டுகள் மூலம் வாடகை வருமானத்தை அனுபவிப்பார்கள். மேலும் மருத்துவ சம்பந்தமான படிப்பு, இன்ஜினியரிங் சம்பந்தமான படிப்பு அதன் மூலம் தொழில், வியாபாரம் செய்து சம்பாதிப்பார்கள். பரிசோதனைக் கூடம், எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்துக்கடை, உடற்பயிற்சி, பிசியோ தெரபி என தொழில்கள் அமையும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்