SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக

2020-10-06@ 09:33:51

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-66

‘‘சந்நியாசிக்கு பிச்சை இடுவது என்ன அவ்ளோ பெரிசா? என்று குறுக்கே கேள்வி கேட்டாள், பட்டு.‘‘ஆமாம்மா’’ என்றார், தாத்தா.‘‘இன்னும் சொல்றேன் கேளு. சந்நியாசி அல்லது பக்தாளுக்கு ஒரு வேளை சாதம் போட்டா அந்த ஊரிலுள்ள எல்லா ஜீவராசிக்கும் மூனு வேளை சாப்பாடு போட்ட பலன் வரும். இது வியாதி நிவர்த்தி, ஆரோக்யம், ஆயுள், தர்ம சிந்தனை எல்லாத்தையும் கொடுக்கும். இதைவிட மேலான மோட்சம் கிடைக்கும்னு சொல்லியிருக்கா. இதையேதான் பட்டர்.

‘அடியாரைத் தொழும் அவர்க்கு பல்லியம் ஆர்த்து எழ வெண்பகடூறும் பதம் தருமேன்னு சொல்றார்.வீட்டிலுள்ளவா தவறிப் போனவாளுக்கு திவசம் எல்லாம் முறையா பண்றதுக்காகவும், இறந்து போன ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுக்காம மோட்சத்துக்கு போறதுக்கான செயலாகிற திவசத்தை செய்யறதுக்காகவுன்னு அர்த்தம்.

அந்த வகையில் அபிராமி ஆன்மாக்களுக்கும் நலனை செய்கிறாள் என்பதை பட்டர். ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்வில் தோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் என்பதாக ஆத்ம நலனையும் சேர்த்துச் சொல்கிறார்.‘‘கொங்கை குறும்பை குறியிட்ட நாயகி ’’ - 62 என்று காஞ்சியில் அம்பாள் சிவ பூசை பன்றதா சொல்றார்..

இந்த ஏழு விஷயத்தையும் நமக்கு புரிய வைக்கறத்துக்காகத்தான் அபிராமி பட்டர் முதல்ல தவற்றை சொல்லி, அதுக்கப்புரம் விவாகத்தை சொல்ல பின்னால் விவாகப் பிரயோஜமான புத்திர சந்தானத்தை சொல்ற மாதிரி.அன்னையும் ஆயினள்னு சொல்லியிருக்கார். மேலும், அன்னை ஆயினள்னு சொல்லலாம். அன்னையும் ஆயினள் என்று சொன்னார். எதுக்குன்னா தாம் பெத்த குழந்தைகளுக்கு தாயாரா இருக்கறது லோகபிரசித்தம் அதனால்தான்.

‘பெற்ற தாயும்னார்’ கணவனுக்கும் தாயாரா இருக்கிறதுனால இருவரையும் சேர்த்து ‘‘அன்னையும்’’னு சொன்னார்.
‘‘அது எப்படி’’ என்றாள், மாட்டுப் பெண்.

‘‘மாமா நமஸ்காரம்’’ என்ற படியே அம்புஜமும் அவர் கணவரும் உள்ளே நுழைந்தார்கள்.
‘‘வாங்கோ... வாங்கோ... என்றார், தாத்தா.’’
 ‘‘வாடீம்மா’’ என்றாள், பாட்டி.

கையில் குங்குமம் அட்சதை பழத்தட்டுடன் அம்புஜம் மாமி.‘‘என் பொண்ணு பெரியவளாயிட்டா. நாளைக்கு இஷ்டமித்ர பந்து சகிதமா வரனும்’’ என்று சொன்னபடி தட்டை கையில் கொடுத்து அம்புஜமும், அவள் கணவரும் தாத்தா, பாட்டி இருவருக்கும் நமஸ்கரித்தாள்.‘‘சுமங்கலிரியம் வதூரிமாகும் ஸமேத பச்யதா சௌபாக்ய மஸ்யை... ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று ஆசிர்வதித்தார்.

‘‘நமஸ்காரம் பன்றச்செல்லாம் இந்த மந்திரத்தையே சொல்றியே தாத்தா. உனக்கு வேற மந்திரம் தெரியாதா?’’ என்று கேட்டுக் கொண்டே தட்டிலிருந்த பழத்தை கையிலெடுத்தாள், அபி.‘‘இதுதான் பொம்மனாட்டியா பொறந்தவா எல்லாருக்கும் நன்மையைக் கொடுக்கும்’’ என்றார், தாத்தா.‘‘கொஞ்சம் புரியற மாதிரிதான் சொல்லுங்கோ’’ என்றாள், அம்புஜம் மாமி.‘‘குடும்ப நலனை ஆளும் இந்த மணப் பெண்ணை நல்ல புத்திரவதியாகவும், நல்ல ஐஸ்வர்யமுள்ளவளாகவும் செய்வாயாக. இவளுக்கு பல உத்தமமான பிள்ளைகள் பிறக்கட்டும், கடைசி பிள்ளையாக கணவனை பார்த்துக் கொள்’’ என்று பொருள்.

‘‘இது எல்லா பெண்களுக்கும் அவசியம்தானே. இப்போ புரியறதா என்றார், தாத்தா. வந்ததுக்கு ஒரு நல்ல விஷயம் தெரிஞ்சுண்டோம். ரொம்ப சந்தோஷம். மறக்காம நாளைக்கு வாங்கோ’’ என்றபடி புறப்பட்டாள், மாமி.இதையேதான், தாய், தந்தை இல்லாத அனாதியான சிவனுக்கே தாயார் ஸ்தானமாகவும் ஆனாள் என்பதை பட்டர். ‘‘ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலே இறைவியுமாம்’’ என்று முடித்தார்.

சாப்பாடு முடிந்து சற்று கண் அயர்ந்தார். வாசல் திண்ணையில் தினந்தோறும் படிக்க வரும் நாலு குழந்தைகள் முதல் நாள் பாடத்தை உரக்கப் படித்தனர். அந்த சப்தத்திலே அவர் கண் விழித்துக் கொண்டார். மெதுவாக நடந்து வந்து, திண்ணையில் தடியைச் சாத்திவிட்டு அமர்ந்து குழந்தைகளைப் பார்த்து இன்றைக்கு என்ன பாடம் பாக்கனும்? என்றார்.

இன்னைக்கு சிவனுக்கு விளக்கம் சொல்றேன்னு சொல்லியிருந்தேள், என்றன குழந்தைகள்.சிவனுக்கு யாராலயும் விளக்கம் சொல்ல முடியாது சிவ சப்தத்துக்கு தான் விளக்கம் சொல்ல முடியும் என்றபடி. கண்களை மூடி நெற்றியை சுருக்கி ‘‘அம்பிகே பராசக்தி ஜெகன் மாதா’’ என்ற வழக்கமான சொல்லுடன் வியாக்யானம் சொல்ல ஆரம்பித்தார். ‘‘சிவாத் பரதரம் நாஸ்த்தி’’- சிவனுக்கு மேல தெய்வமில்லை ஆகமம்.

‘‘சிவனோடு ஒக்க தெய்வம் தேடினும் இல்லை’’ திருமூலர் சொன்னது . என்று வடமொழியும், தென்மொழியும் இணைத்து பேசினார். சிவனுக்கு எதனால் உயர்வு? அப்படின்னு கேட்டா. அனாதி வஸ்து அதனால ஓசத்தியின்னார் அனாதின்னா என்ன? என்று கேட்டான், அகோர சிவம்.
‘‘உனக்கு என்ன வயசு’’ என்று கேட்டார் தாத்தா.

‘‘சௌமிய வருஷம், தனுர் மாசம், மக நட்சத்திரம், பானு வாரம்’’ என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போனான்.அதற்கு மேல் தொடர விடாமல் அவர் பாதியில் குறுக்கிட்டு, ‘‘இப்ப நீ சொன்னீயே இதெல்லாம் என்னன்னார்’’‘‘நான் பொறந்த நேரம்’’‘‘இந்த மாதிரி வருஷம் மாதம், நட்சத்திரம்,திதி இது எல்லாம் சிவனுக்கு இல்லை அவர் எப்ப பொறந்தார்னு யாருக்கும் தெரியாது. ஆனா, அவர் இருக்கார். அப்படி பொறக்காதவாளுக்கு இறப்பு இல்லை, அதனால் சிவன் எல்லாத்தையும் விட மேலான வஸ்து.’’‘‘அப்படி அனாதியா இருக்கிறது மட்டுமே தனி சிறப்பா?’’

‘‘அது மட்டுமே இல்லப்பா இன்னும் பல லட்சணம் இருக்கு, ஒன்னு ஒன்னா சொல்றேன் கேளு, அதைப் பத்தி விளக்கமா சொல்றதுதான் சைவம்.’’
‘‘சர்வத்துக்கும் சுகத்தை செய்யறதுனாள சங்கரன்னு பேரு, எல்லோரும் சுகத்தை விரும்பறச்ச அதை கொடுக்கிற சங்கரனை பெரியவனா சொல்றா, அதனால சிவத்துக்கு மேல சாமி இல்லன்னு சொல்லுவா’’ என்றார் தாத்தா.

‘‘எல்லாத்துக்கும் மேல சிவன்தான்னு தெரிஞ்ச நீங்களே ஏன் எப்ப பார்த்தாலும் அம்பிகே. பராசக்தி ஜெகன்மாதன்னு’’ சொல்றீங்களே’’ என்றான். கணபதி சிவம்.அவனை குறுக்கே மறித்து அதெல்லாம், ‘‘அவா, அவா அபிப்பிராயம் அதைப்பத்தி அப்யாசத்துல கேக்கப்படாது’’ என்றான் ஜெய்வேந்தன்.

‘‘ரெண்டு பேரும் நன்னாதான் கேக்குறேள். அனாதியா இருக்கிற சிவனை கல்யாணம் பன்னின்டு குழந்தை குட்டியை பெத்துண்டு பெரிய குடும்பின்னு சொல்றதுக்கே காரணம் அம்பாள்தான். எல்லோருக்கும் சுகத்தை தர்ர சிவபெருமானிடமிருந்து அனுக்கிரகத்தை வாங்கி, அவா அவாளுக்கு தகுந்த மாதிரி கல்யாணம் வீடு, வாசல், சொத்துன்னு பிரிச்சு அனுபவிக்கிற பதத்துல தர்ரவ அம்பாள்தான். பசுமாடு காப்பியாவே கரக்கரதில்லையே. ஆகையினால் எல்லாத்துக்கும் மேல சிவன்தான். அவர்கிட்ட இருக்கிற அனுக்கிரகத்தை வாங்கி கொடுக்கறதுனால அம்பாள்தான் ஓசத்தி.

இதைத்தான் பட்டர், ஆகையினால், இவளே கடவுளர் யாவர்கும் மேலே இறைவியுமாம் துவளேன் இனியொரு தெய்வம்
உண்டாக மெய்த் தொண்டு செய்தே... அனுஷ்டானத்துக்கு நாழியாயிருந்து நீங்களும் அனுஷ்டானம் பண்ணுங்கோ இதோ வர்ரேன்’’ என்று உள்ளே நுழைந்தார் தாத்தா. அவர்கள் ஒவ்வொருவராய் முற்றத்துக்கு வந்து அனுஷ்டானத்துக்கு தயாரானார்கள்.

பஞ்சபாத்திரத்தையும், தாம்பாளத்தையும் கையிலெடுத்தபடியே ஒரு கேள்வி கேட்டான் துர்காராம். ‘‘கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டாதான் எல்லா பலனும் வரும்னு சொல்றா. பின்ன அனுஷ்டானம்னு ஒன்னு தனியா எதுக்கு?’’ என்றான்அனுஷ்டானம் முடித்து வந்த பிறகு அவங்கிட்ட என்ன கேட்ட? என்றார், தாத்தா,‘‘அதெல்லாம் ஒன்னுமில்லை’’ என்றான், பயந்தபடியே.

அதற்கு ஜெய்வேந்தன் - அனுஷ்டானம் எல்லாம் எதுக்கு? கோயிலுக்கு போனால் போதாதா? என்று அவன் கேட்டதை அப்படியே தாத்தாவிடம் சொல்லி விட்டான்.‘‘ஒருபொருள்னா பேர் இருக்கணும், ஒரு வீடுன்னா விலாசம் இருக்கணும், இந்த பேரு விலாசமெல்லாம் நம்மள நாமளே அடையாளப்படுத்திக்கறதுக்கும், மத்தவா நம்மள அடையாளம் தெரிஞ்சிகிறதுக்கும், எப்படி பிரயோஜனப்படறதோ, அது மாதிரி ஆச்சாரமும், அனுஷ்டானமும், அம்பாளோட அனுக்கிரகத்தை வாங்கறதுக்கு பிரயோஜனப்பட்றது.

ஒரு தடவை ஒரு விலாசம் தெரிஞ்சுன்டா அதையே வச்சு புரிஞ்சினுடலாம். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியமில்லை. பேரும் விலாசமும் இல்லாம யாரையுமே தெரிஞ்சுக்க முடியாது. அதுமாதிரிதான் ஆச்சாரமும், அனுஷ்டானமும் இல்லாம சாமியோட அனுக்கிரகத்தை வாங்குறது கஷ்டம்.’’

‘‘உடனே... அகோரசிவம் சுவாமியே நேரில் வந்து அனுக்கிரகம் பண்ணிடுத்துன்னா? ஆச்சாரமும், அனுஷ்டானமும் வேணாங்கறேளா?’’
‘‘வேணாம்னு சொல்றதுக்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அது நல்லதுமில்ல. உதாரணமா - வெத்தலை பாக்கு போடறச்ச கையிலுள்ள பாக்கு கையை விட்டு நழுவாம பிடிச்சிக்கிறோம். அதே தூங்கி போட்டா கையில் இருக்கிற பாக்கு நழுவறதே தெரியல அத மாதிரி ஒருத்தருக்கு அனுக்கிரகம் கிடைச்சுடுத்துன்னா ஆசாரமும், அனுஷ்டானமும் தானாவே நழுவிடும்னு சொல்றேன்.’’

‘‘அப்படின்னா புரியல ? என்றான் கணபதி சிவம் இறையருள் முக்தியானது செயலால இல்ல, புத்திரப் பேரால இல்ல. . . தியாகத்தினாலேயே அடையப்படுகிறது. இதையே வேதம்...‘‘ந கர்மணா நப்ரஜயா தனேன த்யா கேன ஏகேன அம்ருதத்வ மானசு.’ இந்த வாக்கியத்தை படிச்சிட்டு கர்மத்தை விட்டுடனும்னு சொல்றதா புரிஞ்சிக்கப்படாது, சுவாமியோட அனுக்கிரகம் வந்தா கர்மா தானா விட்டுடும்னு புரிஞ்சிக்கனும்.

அபிராமி பட்டருக்கு, ‘பருத்தி புடவையா காய்சா மாதிரியும்’, ‘கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தா மாதிரியும்’... அம்பாளின் பரம கருணையினால பிரயோஜனமாகிற அனுக்கிரகம் முதல்லயே கிடைச்சிட்டதுனால, அதுக்கான காரியத்தை பண்ண வேண்டிய அவசியமில்லாத போயிடறது.  அதையே, துவளேன் இனியொரு தெய்வமுண்டாக. மெய் தொண்டு செய்தே என்று ஆச்சார அனுஷ்டானங்களை செய்து கஷ்டப்படுகிற அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. அபிராமி பட்டருக்கு மட்டுமே இந்த சிறப்பு விதி பொருந்தும்.மத்தவா எல்லோரும் ஆச்சாரம் அனுஷ்டானத்தை தொடர்ந்து பண்ணணும். எப்பவும் விட்டுடக் கூடாது.’’

( தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்