SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனித உரிமையின் மகத்துவம்..!

2020-10-05@ 10:15:00

மனித மானத்திற்கும் மனித உயிர்களுக்கும் மனித கண்ணியத்திற்கும் மிகந்த முக்கியத்துவம் அளிக்கும் மார்க்கம் இஸ்லாம். “ஆதத்தின் வழித்தோன்றல்களை
(மனித குலத்தை) நாம் கண்ணியப்படுத்தியுள்ளோம் என்று கூறுகிறது குர்ஆன். “தம் கைகளாலும் செயல்களாலும் யார் பிறருக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்களோ அவர்களே உங்களில் சிறந்தவர்” என்பது நபிமொழியாகும். நபிகளார்  ஹஜ்ஜின்போது கூறினார்: “இந்த நாளும் இந்த இடமும் எத்துனை புனிதமானவையோ அத்துனை புனிதமானவை மனிதர்களின் உயிர்களும் கண்ணியமும்.”

உலகின் முதல் இறையில்லமான கஅபாவைவிட மகத்துவமும் புனிதமும் வாய்ந்த ஒரு பொருள் அல்லது ஒரு படைப்பு உலகில் இருக்க முடியுமா? இறைவனை வழிபடுவதற்கென்று உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம் மக்காவிலுள்ள ஆலயம்தான் என்று  வேதம் உறுதிபடக் கூறுகிறது. அந்த அளவுக்கு மகத்துவம் மிக்கது அந்த ஆலயத்தைச் சுற்றிவரும்போது நபியவர்கள்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்: “ஓ ஆலயமே! எவ்வளவு மணம் பொருந்திய ஆலயம் நீ! எத்துனை மகத்துவம் மிக்கதாக நீ திகழ்கிறாய். உன் புனிதத்துவம் எத்துனை மாட்சிமை மிக்கது.

ஆனாலும், என் உயிர், யார் கைவசத்தில் உள்ளதோ அந்த இறைவன் மீது ஆணையாக, ஓர் இறைநம்பிக்கையாளனின் புனிதத்துவம் இறைவ னிடத்தில் உன் மகத்துவத்தைவிட மேலானதாகும். அவனுடைய உயிரும் உடைமையும் கண்ணியமானவையாகும். அவனுடைய விஷயத்தில் நல்லெண்ணம் கொள்வதையே நான் விரும்புகிறேன்.” (நூல்: இப்னு மாஜா, அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) இந்த நபிமொழியிலிருந்து தூய கஅபா எனும் இறை ஆலயத்தைவிட புனிதம் வாய்ந்தவை மனித உரிமைகள்தாம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் நபிகளார் அவர்கள்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்