SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபிராமிக்கு மேலொரு தெய்வம் உண்டோ...

2020-10-01@ 10:48:56

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-65

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர்தமக் கன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலே இறைவியுமாம் துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்தொண்டு செய்தே - 44
இப்பாடலின் முழு விளக்கமும் அபிராமி உபாசகரான அமரர் - திருக்கடவூர் சுப்ரமண்யன் வாழும் போது சொன்னதை மையப்படுத்தி எளிதில் புரிந்து கொள்ள உரையாடல் நடையில் எழுதப்பட்டுள்ளது.

தவளே

தாத்தா, தாத்தா, என்ற பேத்தியின் குரல் கூட காதுகளில் விழவில்லை ஏங்க, என்று அவர் மனைவி அழைத்ததும், மெல்ல அவர் கை அசைந்தது, சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த அவர் தலை சற்றே நிமிர்ந்தது.ஏதோ வேற்று கிரகத்திற்கு சென்று வந்தது போல் இருந்தது அவரின் விழிப்பு. என்ன தாத்தா பகல்லையே நல்ல தூக்கமா? என்றாள் பேத்தி.

அவரோ ஏதோ ஆனந்தத்தை நழுவ விட்டது போல் உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும், அதை வெளியில் காட்ட முடியாமல். சொல்லடி அபி - என்று தன் பேத்தியிடம் பேசினார். அம்மா இந்த காப்பியை உங்கிட்ட கொடுக்கச் சொன்னா, நல்லா ஆத்திட்டா அப்படியே குடி.. அவள் காப்பியை வாயருகில் கொண்டு சென்றாள். அவர் சுதாரித்துக் கொண்டு அவள் கையில் இருந்த காப்பியை வாங்கி மெல்லப்
பருகினார்.

தாத்தா

அப்பா இப்படி கை அசைக்காம ஏதே மூச்சு நின்னுட்ட மாதிரி, நாங்க பயப்பட்றாப்புல என்ன பன்ற? பேத்தி கேட்ட கேள்வியை உள்ளுக்குள் வாங்கினாலும், கண்களால் அதற்கு பதில் சொன்னார். அவர் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரை தன் பிஞ்சு கைகளால் துடைத்து விட்டாள்.
இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்படி அழற? அபி மேலும் விடைகாண முயன்றார்.
‘‘தவம்’’- பன்றேன்னார் அவர்.

‘‘தவம்னா’’ - தாத்தா எனக்கு புரியிறாப்படி சொல்லேன், என்ற கேள்வியை கேள்விக் குறி போடாமல் நிறுத்தினாள் அபி.
எங்கம்மாவை நினைச்சிக்கறது, என்றார் அவர்.

உங்கம்மா அம்பாச்சிக்கிட்ட போயிட்டாளாமே தாத்தா.
எங்கம்மா தான் சொன்னா. அதுக்கு தான் அழுறியா என்று கேட்டாள்.
‘இல்லம்மா, என்றார் தழுதழுத்த குரலில், பின்ன எதுக்கு தாத்தா அழற ?- என்றாள்.

சாமிகிட்ட போயிட்டாளோல்யோ, அந்த சாமியை நினைச்சித் தான் அழறேன்.சாமி அவ்வளது கொடுமையா பன்னும்? என்று அதிசயத்தோடு தாத்தாவின் முகத்தை பார்த்தால் இல்லம்மா சந்தோஷத்துலயும் சிலர் அழுவா.

சந்தோஷமா இருக்கறச்சயேவா அழுவா!
‘ஆமாம்மா, என்றார் தாத்தா உடனே அவள் தாத்தா ‘‘தவம்’’ பண்றாளம் பாட்டி, என்றாள்.
அப்படி என்ன தான் காமாட்சிதவமோ! என்று பேத்தியிடம் சலித்துக் கொண்டாள் பாட்டி.
தரையில் அடித்த பந்து திரும்பி வருவதைப் போல் பாட்டியிடமிருந்து மீண்டும் தாத்தாவிடம் வந்தாள் அபி.
காமாட்சி தவம்னா என்ன தாத்தா?

அபி இந்த கேள்வியை கேட்டதும், காமாட்சியை நேரில் கண்டது போல் பேத்தியை கட்டி அணைத்துக் கொண்டார்.
அந்த காமாட்சியே தவம் பண்ணித்தான் தனக்கு புடிச்ச சிவனை கல்யாணம் பண்ணின்டா.தவம் பண்ணினா சாமியோட அனுக்கிரகத்தை வாங்கலாம். அதுவே நாம் கேட்கிற எல்லாத்தையும் கொடுக்கும்.

இதையே தான் பட்டர், அபிராமி அந்தாதியிலும் தண்ணொளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் - செய்வார் ’’ - ன்னு சொல்றார்.
அந்த காமாட்சி பண்ணின தவத்தை தான் உம் பாட்டி சொல்றாஎன்றார் தாத்தா.

அப்ப தூங்கரது தான் தவமா தாத்தா?
என்றாள் பேத்தி.
இல்லடியம்மா, இல்ல உம்பாட்டி என்னை
பரியாசம் பன்றா, அவளோட நீயும் சேந்துண்டியா?
காமாட்சி பண்ணினாப்ன யாராலையும் தவம் பன்ன முடியாது என்றார் தாத்தா.

அப்படி காமாட்சி என்ன தான் பண்ணினா ‘தாத்தா,
உச்சி வெய்யில் அடிக்கிறச்ச நாலு பக்கமும் அக்னியை கொளுத்திவிட்டு, நடுப்புற அக்னி மேல நின்னு சூரியனை பார்த்துண்டே பஞ்சாட்சரத்தை சொன்னாளாம்.

தரையில் இல்ல ஊசி மொனையிளநின்னுன்டு.கடும் குளிர் காலத்துல கொட்டுற மழையில, நடுக்கொளத்துள நின்னுன்டு, தல மட்டும் வெளியில தெரியிறாப்புல ஜெபம் பண்ணினாளாம்,நன்னா சாப்பிட வேண்டிய வயசிலே எல்லா வசதியும் இருந்தும், மரத்திலேயிருந்து காஞ்சு விழுமே அந்த இலையை மட்டுமேசாப்பிட்டாளாம்.

நீ இப்ப கட்டின்டு இருக்கியே பட்டு இத மாதிரி இல்லாம, கடினமா இருக்கிற மரப்பட்டை, தர்பையாளானதை துணியா கட்டின்டாளாம்.
தொட்டா அது கையை அறுத்துடும்பாளே அதுவா தாத்தா.அதே தான், அதே தான் ஓடி ஆடி விளையாடுற வயசில ஒத்த கால்ல அசையாம நின்னுன்டு பஞ்சாட்சரம் சொன்னாளாம்.

ஒரு நாளில்ல, இரண்டு நாளில்ல விதைச்ச விதை மரமாகிற வரைக்கும் சொன்னாளாம். இப்படி எல்லாம் கஷ்டப்பட்றது தான் தவமா? தாத்தா.
இல்லடியம்மா, இஷ்டப்பட்டு கஷ்டப்பட்றது தான் ‘‘தவம்’’ என்றார்.இஷ்டப்பட்டு ‘‘தவம்’’ பண்ணின பார்வதி சிவனை கல்யாணம் பண்ணின்டாளா ?
அதற்கு தாத்தா - இந்த பிஞ்சு வயசுல இப்படி எல்லாம் கஷ்டப்பட்றாளே காமாட்சின்னு சிவனுக்கு கருணை வந்துருதாம்.
உடனே சாமி காமாட்சி முன்னாடி வந்து நின்னுட்டாராம்.

அவ நினைச்சது போலவே அவளை கல்யாணம் பண்ணிக்குரேன்னு சொன்னாராம் என்றார் தாத்தா.
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? பாட்டிக்கு தெரியலையே என்றாள் அபி. இதெல்லாம் குமார சம்பவம் புத்தகத்துல படிச்சேமா. அபிராமி பட்டர் கூட ‘‘தவளே’’ ன்னு சொல்றார்.

பக்கத்தாத்து நீலு விளையாட வர்ரியாடீ அபி என்று கூப்பிட, இதோ வந்துட்டேன்னு துள்ளி குதித்து ஓடினாள் அபி.
இவள் எங்கள் சங்கரனார் மனைமங்களமாம் காஞ்சியிலிருக்கிறாளே அந்த காமாட்சியை - சொல்றேளா? என்றாள் பாட்டி.
சூத வனத்திலே இருக்குன்னு சொல்லுவாடீ சூதவனம்னா? புரியராப்பில் சொல்லுங்கோன்னா, மாங்காட்டு தான் டீ சூதவனம், என்றார் தாத்தா.
எல்லாம் காமாட்சி தானே இதுல என்ன பெரிய வித்யாசம் என்றாள்.

அவர் நிதானமாக சொன்னார் - அம்மிக்கும் ஆட்டுக்கல்லுக்கும், உரலுக்கும் வித்யாசம் தெரியாம பேசாத, அவரின் குரலில் அதிகாரத் தோரனை இருந்தது.அவா, அவாளுக்கு தகுந்தாப்பில தான் அப்பா விளக்கம், சொல்லுவா என்றாள் மாட்டுப்பெண் தனக்குள்ளே சிவனை ஒடுக்கிக் கொண்டவள் தவக்கோல காமாட்சி.

தன்னை சிவனோடு ஒக்க இணைத்துக் கொண்டவள் காமாட்சி என்றார் தாத்தா.ஒடுக்கி கொள்வதற்கும், இணைத்துக் கொள்வதற்கும் என்ன வித்யாசம். என்றாள் மாட்டுப்பெண்.ஒடுக்கி கொள்வது என்பது பாம்பின் விஷத்தை அது பாதிக்காத வண்ணம் சிவன் கழுத்திலே நிறுத்தி அடக்கினா மாதிரி, சிவனையே தன் இதயத்திலே மந்திர மூர்த்தியா அடக்கின்டா. அபிராமி பட்டர் கூட ‘‘புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான்’’ - 46 ன்னும் திணைத்துக் கொண்டது என்பது விசமுள்ள பாம்பை மகுடி ஊதி அடக்குற பாம்பாட்டி மாதிரி சிவனை தவத்தினால் தன்வயப்படுத்துறாள். அந்தாதியில் கூட துணையிறதி பதிசயமானது அபசயமாக முன்பார்த்தவர் தம் மதிசயமாக அன்றோ வாம - பாகத்தை வவ்வியதே - 17

அப்படின்னும் அம்பாள் சிவனைத் தவத்தினால அடைந்த தவக்கோல காமாட்சியை சொல்கிறார்.அப்படி சொன்னாலும், இவ்ளோ கஷ்டப்பட்டு தவம் செய்து பரமேஸ்வரனை கல்யாணம் பண்ணின்டது, மத்தவா போல தன் ஆசைக்காக இல்லலோக ஷேமார்த்தத்துக்காகத் தான்.தர்மாசரணம் மட்டும் தான் விவாஹ ப்ரயோஜனமா? என்றாள் மாட்டுப் பெண்.

இல்லம்மா அதைத் தவிர பல ப்ரயோஜனமும் இருக்கு தவத்தினாலே சிவத்தை சாதிச்சதால உடனடியாவே அவர் கிட்ட வரம் வாங்கி இறண்டற கலந்திருக்கலாம், ஆனால், தான் பிறந்த குலம் சிறக்க, மக்கள் அறவழியை பின்பற்ற தானே முன் உதாரணமாய் இருக்கனும்னு ராட்ஷசம், பைசாசம், காந்தர்வம்ன்னு பத்து விதமா விவாஹம் இருக்கறச்ச, தர்மாசரணம் பண்றதுக்காக அம்பாள் பிராஜாபத்திய விவாஹத்தை தேர்ந்தெடுத்து, சிவனை கல்யாணம் பண்ணின்டா இதை தான்‘‘தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்களமாம் ’’ - ன்னு அபிராமி பட்டர் சொன்னதை தாத்தா சொன்னார்.

அறத்தை இடையறாமல் பண்றதுக்கும், குலத்தை அபிவிருத்தி பண்றதுக்கும் ‘‘தர்ம , பிரஜார்த்தம் வ்ருனீமஹே’’ ன்னு விவாஹப்ரயோஜனம் சொல்றா.
இதையே தான்‘‘ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்’’ . . 57 ன்னு . ‘‘தடக்கையும் செம் முகனும்முந் நான்குரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ? - 65  ன்னும் சொல்லியிருக்கார் பட்டர். இதுமட்டும் தானா இன்னும் நிறைய காரணம் இருக்கா? என்றாள் பாட்டி. என்ன சொல்ற இப்ப?

என்னை விவாஹம் பண்ணின்டு சந்தோஷமா இருக்கேன்னு சொல்றியா ? இல்லை கஷ்டப்பட்ரேன்னு சொல்றியா? ஏன்னா நா ஒன்னு கேட்டா நீங்க வேற ஏதோ சொல்றேள். அட அசடே விவாஹம் பண்ணிக்கிறதுங்கிறது கஷ்ப்பட்றதுக்கு இல்லடி என்று மனைவியிடம் உரிமையாக சிரித்தார். என்னை தவிற வேறு ஒன்றும் அறியாமல் வாழ்ந்து விட்டாள் என்று உள்ளுக்குள்நினைத்துக் கொண்டார். விவாஹங்கிறது மேலும் ஐந்து பிரயோஜனத்துக்காக சொல்லியிருக்காடீ.பிரம்மச்சரிய, வானப்பிரஸ்த, சன்யாச, பித்ரு, தேவதா சேவார்த்தம் விவாஹம். வாஹம் என்றால் சுமப்பது என்று பொருள் விவாஹம் என்றால் சிறக்க சுமப்பது என்பது பொருள்.

ஒவ்வொரு மனுஷனாலும் தான் நன்னா இருக்கிறதுக்காகவும், மத்தவாளுக்கு ஒத்தாசை பண்றதுக்காகவுன்னு சொல்றீங்களே அதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சாமி என்றாள் வேலைக்காரி பட்டு, குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறது, அவர்களுடைய பாதுகாப்பு, உணவு, மற்ற எல்லா விஷயங்களிலேயும் ஒத்தாசையா இருக்கிறது.

‘‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர்’’ - 9
என்று பிரம்மச்சாரிக்கு, அனுக்கிரகம் பண்ணினதை பட்டர் சொல்றார்.

வீட்டில் அல்லது தனித்து வசிக்கும் வயசானவாளுக்கும், முடியாதவாளுக்கும் ஒத்தாசை பண்றது இதையே அபிராமி பட்டர்.
‘‘பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே - 24’’ - என்கிறார்.

( தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்