SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதை மாறி பயணிக்காதீர்கள்!

2020-09-14@ 11:02:18

ஆவியின் கனி - 12

உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் (எரேமியா 1 :8). சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். இத்தாலியா என்னும் நாட்டை நோக்கி கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பல் பயணிகளுடன் இறையடியவர் ஒருவரும் பயணித்தார். எதிர்பாராதவிதமாக திடீரென்று கடுங்காற்று ஒன்று அக்கப்பலின்மேல் மோதியது. அக்காற்றில் அகப்பட்ட கப்பல் காற்றின் போக்கிலேயே இழுத்துச் செல்லப்பட்டது. மேலும், பெரு மழையும் தொடர்ந்து பெய்துகொண்டிருந்த காரணத்தால் குளிராலும், பயத்தாலும் பயணிகள் அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தனர். இனித் தப்பிப் பிழைப்போம் எனும் நம்பிக்கையே அவர்களுக்கு இல்லாமல் போனது. மரண பயத்தினால் உணவு உட்கொள்ளக்கூட மனம் இல்லாமல் இருந்த அக்கப்பல் பயணிகளை நோக்கி அந்த இறையடியவர் திட மனதாயிருங்கள் என்று இப்பொழுது உங்களுக்கு தைரியஞ்சொல்லுகிறேன்.

கப்பல் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் உயிர்சேதம் வராது எனக்கூறி அவர்கள் அனைவரையும் தைரியப்படுத்தினார். அவரது வார்த்தையின்படி கடவுள், கப்பல் பயணிகள் அனைவரையும் அற்புதமாக பாதுகாத்தார். அன்புக்குரியவர்களே! திருத்தூதர் பவுல்தான் அந்த இறையடியவர். கப்பலில் பயணித்த அனைவருமே பயந்து நடுங்கிக் கொண்டிருந்த வேளையில், எப்படி அவரால் மட்டும் இவ்வளவு தைரியமாக இருக்க முடிந்தது? அதற்குக் காரணம், கடவுள் அவரோடுகூட இருந்தார். ஆம்!  முந்தின நாள் இரவில் கடவுளின் தூதர் அவருக்குக் காட்சியளித்து, நீ பயப்படாதே, நீயும், உன்னோடு பயணம் செய்கிற அனை
வரையும் நான் காப்பாற்றுவேன் என்று கூறி அவரை தைரியப்படுத்தினார்.

அன்புக்குரியவர்களே! உங்கள் வாழ்விலும் புயல் போன்ற பிரச்னைகள் சூழ்ந்துள்ளதா? பயப்படாதீர்கள்! புயல்காற்றை பூந்தென்றலாக மாற்றும் ஆற்றல் நிறைந்த கடவுள், நம் வாழ்விலும் அமைதியைத் தருவார். நீ தண்ணீரைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய். அக்னி ஜூவாலை உன்பேரில் பற்றாது (ஏசாயா 43:2) என்ற திருமறை வசனத்திற்கிணங்க ஆபத்துக்கள் நம்மை நெருங்காத வண்ணம், நம்மைச் சுற்றிலும் அரணாக இருந்து ஆண்டவர்தாமே நம்மைப் பாதுகாப்பார். திருத்தூதுவராகிய பவுலோடு இருந்து,
அவரைப் பாதுகாத்த கடவுள், நம்மோடும் இருந்து, நம்மையும் பாதுகாக்க வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது என்ன? நாம் கடவுளோடு இருக்க வேண்டும், அதாவது, ஆண்டவருக்கு பிரியமாக வாழவேண்டும்.

ஒரு காலத்தில் திருத்தூதுவராகிய பவுல் கடவுளுக்குப் பிரியமில்லாமல் வாழ்ந்து வந்தார். ஒருமுறை தமஸ்கு என்னும் ஊருக்கு செல்லும் பாதையில் ஆண்டவரை சந்தித்த அவர் மனம் மாறினார். அதற்கு முன்பு கடவுளுக்கு விருப்பமில்லாத பாதையில் பயணித்த அவரது வாழ்வு, ஆண்டவராகிய இயேசுவின் திருக்காட்சியைக் கண்டபின் மாறியது. அதற்குப் பின்பு, கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வு வாழத்தொடங்கினார். ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்
(அப் . 9.6) என்று கேட்ட அவர், அதன் பின்பு ஆண்டவருக்குப் பிரியமானதையே செய்து வாழ்ந்தார். இவ்வாறு கடவுளோடு அவர் இணைந்து வாழ்ந்த காரணத்தினால், கடவுளும் அவரோடு இருந்து அவரைப் பாதுகாத்தார். அன்புக்குரியவர்களே! நாமும் ஆண்டவருக்குப் பிரியமான வாழ்வு வாழ்வோம்.
கர்த்தர் நம்மோடும் இருந்து, அற்புதங்களையும், அதிசயங்களையும் நம் வாழ்வில் செய்வாராக ஆமென்.

தொகுப்பு: Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம்,
பேராயர், தூத்துக்குடி
நாசரேத் திருமண்டலம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்