SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாத வடிவான நமசிவாயம்

2020-09-10@ 14:13:44

இசை வடிவானவன் இறைவன்
இயங்கும் உலகின் தலைவன்
நாதவடிவானவன் நமச்சிவாயம்
நற்குண ராகத்தின் முதல்வன்!
கோடை தென்றல் சந்திரன் கொண்டல்
வள்ளல் இந்திரன்!

மல்லிகை சூழ்ந்த மணம்
மருவிலா தூய எண்ணம்
மயக்கமிலா நற்செயல்
மலர் பாதம்  சேர்த்து
மகேசன் பொன்னடி வாழ்த்தி
மன பக்தியில் கங்கை நீராடு!
கோயில் மணி இசையில்
கோள் பூமி விழித்திடும்
கையுடுக்கை ஓசையில்
பொடிப்பொடியாகும் தீவினை!

இடக்கை எழுப்பும் ஒலியில்
இடரெல்லாம் விலகும் சிவமே!
மேளம் பிரம்மதாளம்
எக்காளம் தாரை
கொக்கரை சங்கு
கொம்பு குழல்
வீணை மத்தளம்
சேமக்கலம் நகரா முழங்க
உறுமி  நாதஸ்வரம் கூடிய
திருக்கயிலாய இசைக்கு
திருநடனமாடும் தில்லைநாதன்
திருவடி பணிய மேன்மைதரும்!

திருநீறு சிந்தி சைவ ஆறாகும்!

இசையில் உருகும் உயிர்
இறைபதம் கலந்தபின்னே
இல்லறத்தை மனம் நாடுமா?
இறைபூசையில் கலந்த மலர்
மீண்டும் செடியை சேருமா!
இன்னுமோர் பிறவி விரும்புமா!

ஊழிக்காலம் நெருங்கும்போது
ஆழிஅலைகள் பொங்கிடும்
தர்மம் விலகியோடி
கர்மபூமி காடாகிடும்
உயரம் குறைந்து
மனிதயினம் முறைகள்
தவறி வாழ்ந்திடும்!

காமப்பேய் பிடித்தமனம்
கள்ளருந்தி மயங்கிடும்
ஆலங்காட்டில் ஆடும் இறைவன்
அறம்மீட்டு காத்திடுவான்
அச்சமின்றி மக்கள் வாழ
சித்தர் மீண்டும் தோன்றுவர்!
நடராஜன் ஆணைப்படி
நலம் பெறும் நானிலம்
மறைத்துநின்ற மேகம்விலகி
இசைவேதம் நிலைத்திடும்!

தொகுப்பு: விஷ்ணுதாசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்