SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனியவை நாற்பது..!

2020-09-07@ 10:59:36

இறை நம்பிக்கையாளர்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இது குறித்து மார்க்கப் பேரறிஞர் சையத் மஹ்மூத் ஹஸன் அவர்கள் ஏராளமான நபிமொழிகளைஆய்வு செய்து அவற்றின் சாரத்தைப் பிழிந்து தந்துள்ளார். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.  இறை நம்பிக்கையாளர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.
2.  ஒருவருக்கொருவர் உதவியும் ஆதரவும் வழங்க வேண்டும்.
3.  ஒருவர் மற்றவர் மீது கருணை, பரிவு, பாசம் கொள்ள வேண்டும்.
4.  ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளக்கூடாது.
5.  ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது.
6.  ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பையோ பகைமையையோ தூண்டக்கூடாது.
7.  ஒருவர் அடுத்தவரைத் தாழ்த்தவோ தன்னை மற்றவர்களைவிட உயர்த்திக் காட்டவோ முனையக் கூடாது.
8.  ஒரு பொருளை வாங்கும் எண்ணமின்றி அந்தப் பொருளின் விலையை ஏற்றிவிடக்கூடாது.
9.  சகோதரர்களுக்கு இடையில் பகைமை, வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை மூட்டிவிடக்கூடாது.
10. ஒருவருக்கொருவர் உறவை முறிக்கக்கூடாது.
11. புறம் பேசக்கூடாது.
12. ஒருவர் வியாபாரம் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு அந்த
வியாபாரத்தைக் கெடுக்கக் கூடாது.
13. இறை நம்பிக்கையாளர்கள் ஒருவர்
மற்றவருக்குச் சகோதரர்கள் ஆவர்.
14. ஓர் இறை நம்பிக்கையாளர் அடுத்தவரின் நலம் விரும்பியாவார்.
15. தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவார்.
16. அவர் இல்லாத சமயத்தில் அவருடைய கண்ணியத்தைக் காப்பார்.
17. ஓர் இறை நம்பிக்கையாளர் அடுத்தவருக்கு இழப்பை ஏற்படுத்த மாட்டார்.
18. பலவீனங்களையோ ஒழுக்கக் குறைபாடுகளையோ கண்டால் அவற்றைக் களைய முயல்வார்.
19. பிரச்னைகளையும் துன்பத்தையும் தீர்க்க உதவுவார்.
20. அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முழுமையாக ஈடுபடுவார்.
21. கடன்பட்டோரிடம் கனிவுடன் நடந்துகொள்வார்.
22. அவருடைய கண்ணியம் தாக்கப்படும்போது அதைப் பாதுகாப்பார்.
23. நோயுற்றால் நலம் விசாரிப்பார்.
24. விருந்துக்கு அழைத்தால் அழைப்பை ஏற்றுக்கொள்வார்.
25. சந்திக்கும்போது ஸலாம் கூறுவார்.
26. ஸலாம் கூறினால் பதில் ஸலாம் கூறுவார்.
27. ஓர் இறை நம்பிக்கையாளர் மற்றவர்களைக் கொடுமைப்படுத்த மாட்டார்.
28. ஆதரவற்ற நிலையில் விட்டுவிட மாட்டார்.
29. மற்றவர்களின் தனிப்பட்ட தவறுகளையும் குறைகளையும் வெளிப்படுத்தாமல் மறைத்துவிடுவார்.
30. குத்திக்காட்டிப் பேச மாட்டார்.
31. தொல்லை கொடுக்க மாட்டார்
32. குற்றங் குறைகளைத் தேடித் திரிய மாட்டார்.
33. அவமானப்படுத்த மாட்டார்.
34. திட்டவோ வசைபாடவோ மாட்டார்.
35. மற்ற அனைவரையும்விட தம்மைத் தாழ்ந்தவராகக் கருதுவார். தற்பெருமை கொள்ள மாட்டார்.
36. கொலை செய்ய மாட்டார்.
37. அவருடைய வருமானத்தின் வாய்ப்புகளையும் வழிகளையும் அழிக்க மாட்டார்.
38. இழிவான பட்டப் பெயர் சூட்டி அழைக்கமாட்டார்.
39. ஏமாற்றவோ இழப்பை ஏற்படுத்தவோ மாட்டார்.
40. அவருக்கு நன்மை கிடைத்தால், நல்லது நடந்தால் மனம் திறந்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வார்.
இனிமையான இந்த நாற்பது கருத்துகளையும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தால் நம் வாழ்வில் அன்பும் பாசமும் வளரும். நல்லிணக்கப் பூக்கள் மலரும்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்