SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகுவையும் கேதுவையும் ஏன் நிழல் கிரகங்கள் என்கிறோம்?

2020-08-25@ 14:33:31

ராகு, கேது இரண்டையும் ‘சாயா கிரகங்கள்’ என்று சமஸ்கிருத ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தமிழில் நிழல் கிரகங்கள். ஆனால் பழங்காலத்திய சமஸ்கிருத ஜோதிட நூல்களில் ராகு-கேது பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை; சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களைப் பற்றி மட்டுமே அவை பேசுகின்றன. கிரகணங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும், வேத மந்திரங்களின் அடிப்படையிலும் பின்னாளில் ராகு, கேது கிரகங்கள் இருப்பதாக ஜோதிட அறிஞர்கள் நம்பத் தொடங்கினர். இவர்களது கண்களுக்கு இந்த இரண்டும் புகைமண்டலமாக தென்பட்டதால் (தூம்ர வர்ணம்) நிழலாக பாவித்தனர்.

இவை இரண்டும் நிலப்பரப்பினைக் கொண்ட உண்மைக் கோள்கள் அல்ல, ஆகவே புகைமண்டலமான நிலப்பரப்பற்ற நிழற்கோள்கள் என்று அறிவித்தனர். நிழல் என்பது ஒரு ஒளி மண்டலத்தில் ஏதேனும் ஒன்று குறுக்கிடுவதால், அந்த ஒளி மறைக்கப்பட்டு உருவாகின்ற கருமையான பிம்பம் ஆகும். ஆனால் இந்த இரண்டும் எந்த ஒரு பொருளின் பிம்பமும் அல்ல. அதேபோன்று நிழல் என்பது அது சார்ந்த பொருளை பின்தொடர்ந்து வருவது. ஆனால் இவை இரண்டும் நிழல் உண்டாக்கக்கூடியவை அல்ல; ஒரே இடத்தில் நிற்கக்கூடிய புகை மண்டலங்கள். இவற்றை வெட்டும் புள்ளிகள் என்று ஜோதிட அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு சந்தேகம் - ஒரே இடத்தில் நிற்கக்கூடிய புள்ளிகள் என்றால், ராகு-கேது பெயர்ச்சி என்பது பொய்யா, இன்ன ராசியிலிருந்து இன்ன ராசிக்கு இடம்பெயர்வதாக சொல்வதும் தவறா? இதே கேள்வி சூரியனுக்கும் பொருந்தும். அறிவியல் ரீதியாக சூரியன், ஒரு மிகப்பெரிய விண்மீன் ஆகும். அது ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும் மிகப்பெரிய நெருப்புக் கோளம். ஆனால் மாதா மாதம் சூரியனின் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. எது உண்மை?

சூரியக் குடும்பம் அமைந்துள்ள இந்த அண்டத்தை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இந்த அண்டம் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அண்டத்தின் மத்தியில் சூரியன் உள்ளதால் இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்தில் இடம் பிடிக்கிறது. ராகு, கேது இரண்டும் தொலைதூரத்தில் ஒரே இடத்தில் நிற்கின்ற வெட்டும் புள்ளிகள் என்பதாலும், சுழலுகின்ற இந்த அண்டத்தினூடே, பூமியும் சுற்றி வருவதாலும் பூமியில் வசிக்கும் நம் கண்களுக்கு அவை பின்நோக்கி செல்வதாகத் தென்படுகிறது - ஓடும் ரயிலில் பயணிக்கும் நம் கண்களுக்கு அருகில் நிற்கும் ரயில் பின்நோக்கி செல்வதாகத் தோன்றுவதுபோல. ராகு-கேது வக்ர கதியில் அதாவது வலமிருந்து இடமாக பின்னோக்கி சுற்றுவதாக நம் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த அண்டமும் சுழலுவதால் அந்தந்த காலக்கட்டத்தில் எந்த ராசி மண்டலம் இந்த புள்ளிகளுக்கு நேராக வருகிறதோ, அதில் இந்த நிழற்கோள்கள் வந்து அமர்வதாக நாம் கணக்கில் கொண்டு பலன் காண்கிறோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்