SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காள சர்ப்ப தோஷமா, காள சர்ப்ப யோகமா?

2020-08-25@ 14:32:57

தோஷம் என்றால் ஏதோ ஒரு பெரிய குறை என்றும், யோகம் என்றால் பெரிய அதிர்ஷ்டம் என்றும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். யோகம் என்றால் இணைவு என்பதே பொருள். இரண்டு கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒரு கிரகம் இணையும் பாவகம் என்பதைக் குறிப்பிடுவதற்காக யோகம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். ஜாதகத்தில் குருவோடு சனி இணைந்திருந்தால் அதை ‘குரு சண்டாள யோகம்’ என்று சொல்கிறார்கள். குரு சண்டாள யோகம் என்றால் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது அல்ல! குருவினால் உண்டாகும் நற்பலனை சனி குறைத்துவிடும் என்றுதான் பொருள். ஆயினும் இதனை யோகம் என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள் காணக்கூடாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்களின் இணைவு என்பதே யோகம் என்பதன் பொருள்.
அதேபோன்று தோஷம் என்றால் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது. தற்கால ஜோதிடர்கள் காளசர்ப்ப தோஷம், காளசர்ப்ப யோகம் என்றும் இரண்டு விதமாக பலன் சொல்கிறார்கள். ஒரு மனிதனுடைய ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது கோள்களுக்கு இடையில் எல்லா கிரகங்களும் அடங்கிவிடும் தன்மையை தோஷமென்றும், யோகமென்றும் இரண்டுவிதமாக பிரிக்கிறார்கள். ஜாதகக்கட்டத்தில் இடமிருந்து வலமாகக் காணும்போது ராகுவிலிருந்து தொடங்கி மற்ற ஏழுகிரகங்களும் உள்ளடங்கி கேதுவில் முடிந்தால் அதனை தோஷம் என்றும், கேதுவில் தொடங்கி ராகுவில் முடிந்தால் அதனை யோகம் என்றும் தற்கால ஜோதிடர்கள் பலன் உரைக்கிறார்கள். ராகு மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர், கேது மனித உடலும் பாம்பு தலையும் கொண்டவர்.

உண்மைக்கோளான ஏழும் பாம்பின் வாயை நோக்கி சென்றால், அதாவது கேதுவை நோக்கி சென்றால் அது தோஷம் என்ற விளக்கத்தையும் சொல்வார்கள். தோஷ அமைப்பு உடையவர்கள் தனது வாழ்வில் முதல் 30 வருடங்கள் சுகத்தினையும் 30வயது முதல் 60 வயது வரை கடுமையான கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள், மாறாக யோக அமைப்பு உடையவர்கள் முதல் 30வயது வரை துன்பத்தை அனுபவித்தாலும், 30 முதல் 60 வயது வரை சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள் என்றும் பலன் சொல்கிறார்கள். ஆனால் இந்த கருத்தினை அறிவியல் ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

யோகம் என்று சொன்னாலும், தோஷம் என்று சொன்னாலும் அதனால் பெரிதாக பலன் ஏதும் மாறிவிடாது, இரண்டிற்கும் ஒரே மாதிரியான பலனே என்பது கற்றறிந்த ஜோதிடர்களின் கருத்து. இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் பரவலாக அமர்ந்திருக்க வேண்டும்; மாறாக ஒரு குறிப்பிட்ட பாவகங்களுக்குள் சென்று அவை முடங்கிவிட்டால் அந்த ஜாதகத்தின் பலன் குறைவாகவே இருக்கும் என்பதுதான். பொதுவாக இந்த காளசர்ப்ப அமைப்பினைப் பெற்றவர்கள் எந்த விஷயத்திலும் எளிதாக திருப்தி அடைந்து விடமாட்டார்கள். ஒரு சட்டையைக்கூட உடனே வாங்கிவிடாமல் அது சரியில்லை, இது சரியில்லை என்று பல்வேறு குறைகளைச் சொல்லி கடைசியாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்பொழுதும் திருப்தியடையாமல் இதைவிட நன்றாக
வாங்கியிருக்கலாமோ என்றும் சிந்திக்கும் மனோபாவம் கொண்டிருப்பார்கள். ஆகவே இந்த காளசர்ப்ப அமைப்பினை உடைய ஜாதகர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்