SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிஷப ராசி பணியாள் :நோ சென்டிமென்ட்ஸ். நோ கமிட்மென்ட்ஸ்

2020-08-21@ 12:39:50

என்னோட ராசி நல்ல ராசி : 13

ரிஷப ராசிக்காரர் என்பவர் நம் நாட்டு ஜோதிடக் கணக்குப்படி சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் போது(வைகாசி மாதத்தில்)பிறந்தவர். இது மே மாதம் 15 முதல் ஜூன் 14 வரை ஆகும்.ஜாதகத்தில் ஒருவருக்கு ரிஷபம் ராசியாக இருந்து ராசியாதிபதி வலுவாக இருந்தால் ரிஷப ராசியின் பொதுப் பண்புகள் பொருத்தமாக இருக்கும். ரிஷபம் லக்கினமாக இருந்து லக்கினாதிபதி சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக இருந்தாலும் இப்பொதுப் பண்புகள் சரியாக இருக்கும்.பிறந்த நாளை வைத்து பலன் பார்ப்பவர்கள் மேலை நாட்டுக்கணக்குப்படி, ஏப்ரல் மாதம் 21ம் தேதியில் இருந்து மே மாதம் 21ம் தேதிக்குள் பிறந்திருந்தால் ரிஷப ராசி பலன் பொருத்தமாக இருக்கும்.ரிஷப ராசி என்பதன் அடையாளம் காளை மாடு. ‘‘ரிஷபக்காளை ராசி என் ராசி’’ என்று சினிமா பாடல் இருக்கிறது அல்லவா? அது இதே ராசி. பன்னிரு ராசிகளும் அவற்றின் தன்மையைப் பொறுத்து நெருப்பு, நிலம், நீர், காற்று என நான்கு வகையாக பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ரிஷப ராசி என்பது மண் (நிலம்) ராசி ஆகும்.

பணிபாதுகாப்பு அவசியம்

ரிஷப ராசிப் பணியாள் என்பவர் பணி பாதுகாப்பு உள்ள பணி உயர்வு மற்றும் பணிக் கொடை உள்ள safe and secured பணிகளையே விரும்புவார். அவர் மேஷ ராசிக்காரரைப் போல வருடத்துக்கு ஒரு நிறுவனத்திற்கு வேலைக்குப் போகமாட்டார். வேலையைத் தேர்வு செய்யும் போதே நிரந்தரமான பணியா? ஹெச். ஆர் , T.A.,D.A பென்ஷன் பி. எஃப் போன்ற சலுகைகள் உண்டா? என்பதைத் தெரிந்து கொள்வார். வேலையில் சுதந்திரம் உண்டா? விடுமுறை போதிய அளவுக்கு கிடைக்குமா? என்பதையும் அறிந்து கொள்வார். அதன் பின்பு தான் அந்த வேலைக்கே அப்ளிகேஷன் போடுவார். மேலும் பணியில் சேர்ந்தால் சம்பளம் ஒழுங்காக தருவார்களா? பணியில் முன்னேற்றம் உண்டா இல்லை கடைசி வரை இந்த தகுதியிலேயே இருந்து ஓய்வு பெற வேண்டுமா அல்லது பணி உயர்வு பெற்று உயர் அதிகாரியாகும் வாய்ப்பு உண்டா? என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்வார். இவற்றில் எது இல்லையென்றாலும் ரிஷப ராசிக்காரர் சம்பளத்துக்கு வேலைக்குப்போக மாட்டார்.

ஓய்வு முக்கியம்

ரிஷப ராசிக்காரர் வங்கி, வட்டிக்கடை, நகை அடகு கடை, பதிப்பகம், புத்தக விற்பனை நிலையம், பிரவுசிங் சென்டர், வீடியோ கடை போன்றவற்றில் வேலை செய்ய ஏற்றவர். வாய் சவடால் பேசும் சேல்ஸ்மேன் வேலைக்கும் மார்க்கெட்டிங் துறைக்கும் போவதை விரும்பமாட்டார். ஏனென்றால் இவற்றில் அலைச்சல் மிகுதி. அலைச்சல் இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி தெளிவாகப் பேசி நிலத்தை, பொருளை விற்கும் ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் ஏஜென்ட் அலுவலகத்தில் வேலை பார்க்க விரும்புவார். முதலாளிக்கு இவர் ஒரு asset ஆக இருப்பார். கருத்தாக கவனமாகப் பேசுவதில் கில்லாடி. வெட்டியாக ஒரு வார்த்தை கூட இவர் வாயில் இருந்து வராது. அழகாக அளவாகப் பேசுவார்.

பல் தொழில் பல வருமானம்

கல்வித்துறையில் ஆசிரியராகப் பணி செய்யும் ரிஷப ராசிக்காரர்கள் உண்டு. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் இவர்களைக் காணலாம். இவர்கள் நோகாமல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவிட்டு மற்ற நேரங்களில் வரியைக் குறைக்கும் இன்வெஸ்ட்மென்ட்கள் பற்றி ஆசிரியர்களுக்கு சொல்லித்தருவர். இருந்த இடத்தில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவர்கள். அமெசானில் பொருள் வாங்குவது ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்வது பற்றி ஆசிரியர்களுக்கு வகுப்பெடுப்பார். ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் எந்த மாதத்தில் வாங்கலாம். எந்தக் கடையில் வாங்கலாம். எந்த நாளில் வாங்கலாம். என்றைக்கு அதிக பட்ச தள்ளுபடி கிடைக்கும் என்பதைக் கணினி மூலமாக அறிந்து அவர்களுக்குசொல்லுவார்.

ஸ்லோ அண்ட் ஸ்டெடி

அரசு அல்லது நல்ல தனியார் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டே வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவர். சிறுக சிறுக முன்னேறுவார்கள். மாதச் சம்பளத்துடன் கூடவே சீட்டு பிடித்தல், சேலை வியாபாரம் செய்தல், மணப்பெண் அலங்கார நகை விற்றல் போன்ற ஏதாவதொரு சிறு தொழிலை செய்தபடி முன்னேறி வீடு, வாசல் என்று சொத்துக்களைச் சேர்த்துவிடுவர். நிரந்தர வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். நிலத்து ராசியுள்ளவர்கள் என்பதால் இவர்களுக்குப் பொதுவாக நிலம் நல்ல லாபத்தைத் தரும். சுக்கிரனின் ராசி என்பதால் சேலை அணிமணிகள், அலங்காரக் கலை போன்ற தொழில்கள் நல்ல லாபத்தைத் தரும். கணினி முலமாக நடத்தும் யூக வாணிகம், ஏஜென்சி தொழில், அவுட் சோர்ஸ்சிங், வேலைகளை விரும்பிச் செய்வர்; லாபமும் பெறுவார்.

சொகுசுக்காரர்கள்

ரிஷப ராசிக்காரப் பணியாளர் தனக்கு லாபமில்லாத ஒரு வேலையை கூடச் செய்யமாட்டார். பொதுவாக ரிஷப ராசிக்காரர் வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர். அவர் உட்காரக் கூட சொகுசான சோபா தேடுவார். நடக்கக்கூட யோசிப்பார். நடந்து போனால் ஏதோ இவர் பின்னால் படை பரிவாரங்கள் பவனி வர நடந்து போவது போல அசையாமல் அலுங்காமல் குலுங்காமல் அதிராமல் நடந்து போவார் என்று முன்பே படித்திருக்கிறோம். தன் சுகத்தை இழந்து பசி, பட்டினியோடு மழையிலும் வெயிலிலும் அலைந்து எந்த வேலையையும் செய்யமாட்டார். பதவியை பிடிப்பதில் கவனமாக இருக்கும் இந்த ராசிக்காரர் தேவைப்பட்டால் கொஞ்சம் நரி தந்திரத்தோடு செயல்படுவார். ஆனால் வெளியே இவரது தந்திரம் யாருக்கும் தெரியாது. தன் குடும்பம், தன் தொழில், தன் பிள்ளைகள், தன் சொத்துக்கு பங்கம் வராமல் மற்றவர் ஏதாவது உதவி கேட்டால் அளவாகச் செய்வர்.

பெண்களின் ஒயிலான தோற்றமும் பணிகளும்

ரிஷப ராசிப் பெண்கள் வீட்டில் இருந்தே தொழில் செய்வார்கள். வெளியே வேலைக்கு போனாலும் தலைமை பொறுப்பை ஏற்க விரும்பாமல் ‘மஞ்சள் அரைக்கும் வேலை’ என்பார்களே அது போல நோகாமல் செய்யும் வேலையைத்தான் விரும்புவார்கள். இவர்கள் நேர்மையான பணியாளர்கள். நேரத்துக்கு வந்து வேலையை கரெக்டாக செய்து முடித்து நேரத்தோடு வீடு திரும்பி விடுவர். இவர்களுக்குக் குடும்பம், சமையல், வீடு சுத்தம், சாமி பூஜை போன்றவை மிகவும் முக்கியம். அதனால் ஓவர் டைம் வேலை இவர்களுக்கு ஆகாது. விவரமானவர்கள். மற்றவர்களுக்கு அளவாக ஆலோசனை சொல்வர். விருந்துபசாரம் மற்றும் அலங்காரப் பணிகளில் விருப்பம் காட்டுவர். பணியிடங்களில் அழகாக உடை உடுத்தி அம்சமாக தோற்றம் அளிப்பார். ஆபீசுக்கு ஏற்றவர்கள். அதிகம் பேச மாட்டார்கள். கனிவாக கண்டிப்பாக பேசுவதால் உயர் அதிகாரிகளுக்கு பி.ஆர்.ஓ, பர்சனல்செகரட்டரி போன்ற பொறுப்புகளில் ஜொலிப்பார்கள்.

நிறைவு

பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர் முதலாளியின் நலன் குறித்து அதிகம் சிந்திக்க மாட்டார். முதலாளி விஸ்வாசம், கம்பெனி விஸ்வாசம் என்ற சென்டிமென்ட் எல்லாம் இவருக்கு கிடையாது. கொடுக்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்வார். அவ்வளவு தான். நோ சென்டிமென்ட்ஸ்.. நோ கமிட்மென்ட்ஸ். வேலை நேரம் முடிந்ததும் குட் பை என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்.
(தொடரும்)

முனைவர்
செ. ராஜேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்