SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வித்தியாச விநாயகர்கள் வழிபாடு!!

2020-08-21@ 10:33:59

கேரள மாநிலத்தில் உள்ள மல்லியூர் திருத்தலத்தில் விநாயகர்  தனது இடது மடியில் உண்ணிக்கண்ணன் என்ற திருநாமம் பூண்ட கண்ணனை தனது இடது மடியில் அமர்த்திய நிலையில் தரிசனமளிப்பது வித்தியாசமான ஒன்றாகும்.

திருவாளப்புத்தூர் ரத்னபுரீசுவர சுவாமி திருக்கோயிலில் காட்சி தரும் நடன விநாயகர் ரிஷப வாகனத்துடன் அபூர்வமாக காணப்படுவார்.

கீழ்க்கபிஸ்தல ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் பகைவர்களின் தொந்திரவுகளை அழிக்கும் இரட்டை பிள்ளையார்களை பக்கத்து பக்கத்தில் இடம் பெற்று தரிசனமளிக்கிறார்கள்.  

ஐந்து  தலை நாகருடன், செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் வரகுண கணபதி என்ற திருநாமம் பூண்டு,பக்தர்களுக்கு அருள்கிறார் ‘முதல்வன்’!

ஆரம்பத்தில் ஆலய சுவற்றில் ஓவியனாகத் திகழ்ந்த பிள்ளையார் திருஉரு ஒன்று நாளடைவில், அதே இடத்தில் சுயம்பு விக்கிரகமாக ஆன அதிசயம் நடந்த இடம் கேரள மாநில காசர்கோட்டின் அருகில் அமைந்த மதூரில் உள்ள ஸ்ரீமத் அனந்தேஸ்வர் திருக்கோயிலில்தான்!

108 விநாயகர்கள் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு, தரிசனமளிக்கிறார்கள்.  ஸ்ரீசக்ரமேடு வடிவில் அமைந்த மேடையில், இந்த அற்புத காட்சியைக் காண விரும்புபவர்கள் செல்ல வேண்டிய இடம் கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள தாமஸ் பார்க் ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் செல்வ விநாயகர் ஆலயம். ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒரு பிள்ளையார் என்ற கணக்காம்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக மிகப்பெரிய கணபதியாக விளங்குகிறார் கோயம்புத்தூர் டவுனில் புலியகுளம் பகுதியில் எழுந்தருளியுள்ள பிள்ளையார். 10 அடி 10 அங்குல உயரத்துடன், 11 அடி 10 அங்குலம் அகலத்துடன் 8 அடி சுற்றளவு கொண்டு 190 டன் எடையுடன் கூடியவர். முந்தி விநாயகர் என்று வழிபாடாகும், இவர் வலம்புரியாக உள்ள துதிக்கையில் ஏந்தியுள்ளது அமிர்த கலசம்.

பாம்பின் மீது கால் ஊன்றிய விநாயகராக, அவர் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் உள்ள சந்நதி ஒன்றில்.

திருக்கழுக்குன்றம் தாழக் கோயிலின் முதல் பிராகாரத்தில் வண்டு வனப்பிள்ளையார் என்ற நாமதேயத்துடன் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கணபதி. இது காரணப் பெயர். திருக்கழுக்குன்றம் கதலி வனம் (வாழை வனம்) என்ற சிறப்பு பெயர் பெற்றிருக்க, வண்டு எனும் வாழை வகை இவ்வூரில் நிறைய விளைந்துள்ளது.

பெங்களூரு - தர்மஸ்தலா பாதையில் 20வது கிலோ மீட்டரில் இடம் பெற்றுள்ள சவுத் அடிகா என்ற தலத்தில் கோயில் இன்றி வெட்ட வெளியில் சித்தி, புத்தி சமேத விக்னேஸ்வரர் அருள்பரிபாலிக்கிறார். இவருக்கு வெள்ளரிக்காய் மாலை சார்த்தி, அவலந்தி பஞ்சகஜியா என்ற பிரசாதம் படைக்கப்படுகிறது.

பிள்ளையார் தனது கரமொன்றில் கதாயுதம் பற்றியும், வேறொரு கரத்தில் பணியாரம் ஏந்திய பாத்திரமுடன் அழகு தரிசனமளிக்கிறார், கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயிலில்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலயத்தின் ஈசான திசையில் காட்சி தருகிறார் புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்ற வித்தியாசமான திருநாமங்கொண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் கோயில் நைவேத்தியத்திற்கு புழுங்கல் அரிசியை மழைபோல்வாரித் தந்தாராம் இவர்!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் 1000 கால் மண்டப முன்வாசல் ஸ்தம்பத்தில் காணப்படும் ஊர்த்துவ கணபதி10 திருக்கரங்களும், வலதுகாலைபூமியில் ஊன்றியவாறு இடதுகாலை மடித்து, அதில் தேவியை ஏந்தியமாறுபட்ட காட்சி தருகிறாா்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்