SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி : சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்!!

2020-06-29@ 11:56:18

முன்புறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.
16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு...!கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக காட்சி தருகிறார்.

வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி மகாபலி வாமனனுக்குத் தானம் கொடுக்க தாரைவார்த்தபோது, சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப்பாதையை அடைத்தார். அப்போது திருமால் பவித்திரத்தால் கிளற, சுக்ராச்சாரியார் தன் கண்ணை இழந்தார். அங்கு பவித்திரமாக வந்தவர் சுதர்சனரே.ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

சக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோயில்களில் தனிச்சந்நதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதராஜர்கோயில், திருமாலிருஞ்சோலை (கள்ளழகர்) கோயில், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்) தற்போது இவரின் மகிமையைப் புரிந்துக்கொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரையும் பல இடங்களில் தரிசிக்கலாம். இவரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர். ஜ்வாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால்
கெடுதிகள் யாவும் நீங்கும்.

ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்பிசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து
காப்பாற்றுவார்.சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.

நரசிம்ம அவதாரத்தில் அரக்கனின் வரத்தையொட்டி எந்த ஆயுதமும் இல்லாமல் ஹிரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தபோது, அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே. சுவாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். சாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச்சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப்பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.மதுரை அழகர் கோயில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோயில் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் விசேஷமானவர்.

சக்கரத்தாழ்வாரைப் பற்றி பல சுலோகங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் கூரநாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளியுள்ளார். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்லோகமாகப் பிரபலமாகியுள்ளது. ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ‘ஆழ்வார்’ என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஸ்ரீ பகவானால் ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும், இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதியில் நெய் விளக்கேற்றி,‘‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’’ என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்.

- ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்