SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மே 18 முதல் 24 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம், பிள்ளைகளோட சகவாசத்தை கவனிக்கணுமுங்க. உங்க பிள்ளையைப் பத்தி நீங்க நினைச்சுகிட்டிருக்கறதுக்கும் உண்மைக்கும் கொஞ் சம் அதிர்ச்சியான வித்தியாசம் இருக்கலாமுங்க. உங்க எண் சூரிய ஆதிக்கம் கொண்டதுங்கறதால சூடாகி கோபப்பட்டுட வேண்டாங்க. பெரிதாக சிக் கல் எதுவும் வராதுன்னாலும் பக்குவமா சொன்னா உங்க பிள்ளைங்க கேட்டுக்குவாங்க. சூரிய ஆதிக்கம் உங்களைப் பிரகாசமானவராகவும் காட்டு முங்க. உத்யோகம், தொழில்ல நல்ல முன்னேற்றம் தெரியுதுங்க. வருமானமும் புகழும் கூடப் பெறுவீங்க. பெரிய மனிதரோட அறிமுகம், அவர் உதவி  மற்றும் குடும்பத்துப் பெரியவங்க ஆசின்னு உங்க வாழ்க்கை புது மெருகு பெறுமுங்க. ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு அளவைப் பரிசோதிச்சு  சரியான மருத்துவம் எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மகான் ராகவேந்திரரை தியானம் பண்ணுங்க: மகிமைகள் நிகழும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம், அனாவசியக் கவலைகளுக்கும் கற்பனைகளுக்கும் ஆட்பட்டு சஞ்சலப்படுவீங்க. சந்திரன் ஆதிக்கத்ல பிறந்தவங்க என்பதால இந்த கலக் கம் சந்திரன் உண்டாக்கறதுதான்; ஆனா, பின்னால பிரச்னைன்னு எதுவும் வராதுன்னாலும் ஒரு செயலைச் செய்யறபோதே அது எப்படியாகுமோ, என் னவாகுமோன்னு அனாவசியமா கவலைப்படுவீங்க. அரசுத் துறை ஊழியர்களுக்குப் பல சிறப்புகள் கிடைக்க வாய்ப்பு இருக்குங்க. பிற ஊழியர்களுக் கும் உத்யோக மாறுதல், நல்ல ஆதாயத்தோட அமையுமுங்க. உங்க வார்த்தைக்கு மதிப்பு கூடுமுங்க. சமுதாயத்ல புது பொறுப்புகளை மேற்கொள் வீங்க. எந்த விஷயத்லேயும் மனசில் தோணும் முதல் எண்ணத்தை செயல்படுத்தினீங்கன்னா வெற்றி நிச்சயமுங்க. யாரையும் அனாவசியமா கோபிக்கா தீங்க. ரத்தத் தொற்று, கழிவுப்பாதையில உபாதைன்னு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சுபவிசேஷங்களால சந்தோஷப்படுவீங்க. துர்க்கையை  வழிபடுங்க. துன்பம் நெருங்காது.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம், எல்லா விஷயத்லேயும் நிதானத்தைக் கடைப்பிடிக்கணுமுங்க. குரு கிரகத்தின் ஆதிக்கத்ல நீங்க பிறந்தவங்க; அதனால அதிகாரம்,  ஆணவத்துக்கெல்லாம் அடிபணியமாட்டீங்க. தன்னம்பிக்கை உங்களுக்குக் கைகொடுக்க, வெற்றிக்கனியை எளிதாகப் பறிச்சுடுவீங்க. காரணமே புரியாம  மனசுக்குள் புகுந்துகிட்டிருந்த பயமும் குழப்பமும் விலகிடுமுங்க. அதனால எதையும் தைரியமாக ஏற்றுச் செய்யும் ஆற்றலும் கைவருமுங்க. சிலருக்கு  முன்பின் அறிமுகமில்லாத நபரால ஆதாயம் கிடைக்க வாய்ப்பு இருக்குங்க. உத்யோகத்ல இருக்கறவங்களுக்குப் புதிய பதவி, பொறுப்புன்னு வந்து  சேருமுங்க. உஷ்ண உபாதைகள் சிலரைப் படுத்தும்; உடலை இயற்கையாகக் குளிர்விக்கும் உணவுப் பொருட்களை எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப்  பெண்களின் கோபம், உபத்திரவத்தைதான் அதிகரிக்கும்; கவனமா இருங்க. ஆஞ்சநேயரை வணங்குங்க; ஆனந்தத்துக்குக் குறைவிருக்காது.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரத்ல வாழ்க்கைத் துணையின் உடல்நலத்ல அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. அவங்களை அலட்சியப்படுத்தாம, செலவுக்கும் கவலைப்ப டாம, மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு பண்ணுங்க. ராகுவோட ஆதிக்கத்திலே பிறந்திருக்கறதால, பொதுவாகவே எல்லா விஷயங்கள்லேயும் ஆர் வம் இருந்தாலும் குதர்க்கமாக யோசிக்கறதும் விதண்டாவாதம் பண்றதுமாக இருப்பீங்க. திடீர்னு எதுக்குன்னே புரியாம ஆக்ரோஷப்படுவீங்க; அனாவசி யமா கோபப்படுவீங்க. கொஞ்சம் அமைதியாக யோசிச்சு, அந்தக் கடுமையான நிலையிலிருந்து மாறிடுங்க. இனிமையான பேச்சு எல்லா அனுகூலங்க ளையும் தருமுங்க. உத்யோகம், தொழில்ல புது உத்திகளால ஆதாயங்கள் அதிகரிக்குமுங்க. சிலருக்கு நரம்பு உபாதை ஏற்படலாமுங்க.

இந்தத்  தேதித் பெண்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடுமுங்க; குடும்பத்தாருக்கு பக்க பலமா, முன்னுதாரணமா இருப்பீங்க. பிள்ளையாரை வழிபடுங்க;  தொல்லைள் விலகும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம், தைரியமாக எடுக்கற எல்லா முயற்சிகளும் வெற்றியைத் தருமுங்க. ஏன்னா, புதன் ஆதிக்கத்திலே பிறந்திருக்கற நீங்க ஒரு வேலையை  எடுத்தால் விடாப்பிடியாக முடித்துவிட்டுதான் நிமிருவீங்க; அதேசமயம், உங்க எதிர்பார்ப்புக்கு உடனிருக்கறவங்க சரிபட்டு வரலேன்னா பளிச்னு கோபப் படவும் செய்வீங்க. குடும்பத்ல சில பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிஞ்சுடுங்க; அது விபரீதமாகாம பார்த்துக்கோங்க. வெளிவட்டாரப் பழக் கத்ல உங்கப் புகழ் மேலோங்குமுங்க. கொஞ்சமும் எதிர்பாராத இடத்லேர்ந்து நல்ல செய்திகள் வந்துசேரும். சிலருக்கு அடிவயிறு, கழிவுப் பாதையில்  கோளாறு ஏற்படலாம். சுய மருத்துவம் வேண்டாம்; மருத்துவர் உதவியை நாடுங்க. உத்யோக இடத்ல உங்க யோசனைகளை எல்லோரும் கேட்டுப் பாங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு குடும்பத்ல புதிய வரவும், உறவும் சந்தோஷம் தருமுங்க. புற்றுள்ள அம்மனை வழிபடுங்க; அரவணைப்பாள்  அன்னை.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நகைச்சுவையாகப் பேசறதாக நினைச்சுகிட்டு சுத்தியிருக்கறவங்களை தர்மசங்கடப்படுத்தாதீங்க; சிலருக்கு இதனால மன வருத்தமும் ஏற்படலாம்.  அதேசமயம், எந்தக் கலவரமான சூழ்நிலையையும் கலகலப்பாக ஆக்கிடுவீங்க. இதுக்குக் காரணம் நீங்க சுக்கிர ஆதிக்கத்திலே பிறந்திருக்கறதாலதான். வெளிநாடுகள்ல இருக்கும் நண்பர் கள், உறவுக்காரங்ககிட்டேயிருந்து நல்ல தகவல்கள் வருமுங்க. அங்கே வாணிபம், வர்த்தகம்னு ஈடுபட்டிருக்கறவங்க சிறப்புப் பெறுவீங்க. ஆனா அந்த  நாட்டு சட்ட திட்டங்களைத் தெளிவாகத் தெரிஞ்சுக்க வேண்டியது முக்கியமுங்க. இங்கேயும், தொழில், வியாபாரத்ல உங்க திறமையை நிரூபிச்சு முன் னேறுவீங்க. உத்யோகத்லேயும் அப்படித்தான்; உங்க ஆற்றல் விசேஷ சலுகைகளையும் ஆதாயங்களையும் பெற்றுத் தருமுங்க. சிலருக்கு மறைமுக  நோய் உபாதை தெரியுதுங்க; ஆரம்ப அறிகுறியின்போதே மருத்துவரைப் பார்த்திடுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு, புது அறிமுகங்களால நன்மை கள் உண்டுங்க. தட்சிணாமூர்த்தியை வழிபடுங்க; தடைகள் விலகிப்போகும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


இந்த வாரம், எந்த செலவையும் சமாளிக்க பணம் வந்து சேருமுங்க. பழைய கடன்களைப் பைசல் செய்ய சில வழிமுறைகளும் புலப்படுமுங்க. கேது வோட ஆதிக்கத்ல பிறந்திருக்கறதால பிறர் பாராட்டுக்கு எளிதா மயங்கிடமாட்டீங்க; நீங்களும் பிறரை எளிதாகப் பாராட்டமாட்டீங்க. பொதுவாகவே க்ரெ டிட் கார்டு வைத்திருந்தாலும் அதை அதிகமாக உபயோகிக்காதவங்க நீங்க. இதனால அனாவசியப் பொருட்கள் வீட்டில் சேராதுதான்! பிள்ளைகளோட  வேகத்தை இதமான, மென்மையான வார்த்தைங்கற தடையால அடக்கி, சீர் செய்ங்க. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்ல அக்கறை எடுத் துக்கோங்க. எதிர்கால நன்மைகளுக்கான அறிகுறி இப்பவே சிலருக்குத் தெரிய ஆரம்பிக்குமுங்க. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உபாதைகளை உடனே  கவனிங்க.

இந்தத் தேதிப் பெண்களின் யோசனை குடும்ப நல்வாழ்வுக்கு உதவுமுங்க. பெருமாளை தரிசனம் செய்யுங்க; பெருமை தேடிவரும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரத்ல பூர்வீக சொத்து விஷயத்ல ரொம்பவும் எச்சரிக்கையா நடந்துக்கணுமுங்க. அது சம்பந்தமா யார்கிட்டேயும் எந்த வாக்குவாதத்திலேயும்  ஈடுபடாதீங்க. பொறுமை காத்தீங்கன்னா, உங்களுடைய பங்கு எந்த பங்கமும் இல்லாம வந்து சேருமுங்க. அது கூடுதல் மகிழ்ச்சி தருமுங்க. இந்த  சமயத்ல சொந்த பந்தங்களும் நண்பர்களும் என்ன யோசனை சொன்னாலும் கேட்காம, உங்களுக்குன்னு தோணறபடி நடந்துக்கோங்க. விடாமுயற்சி யால விட்டதைப் பிடிக்கக் கூடியவங்க நீங்க. இதுக்கு சனி பகவானோட ஆதிக்கத்ல நீங்க பிறந்திருக்கறதும் காரணமுங்க. அதேசமயம் அற்பத்தனமான  விஷயங்களுக்கும் ஆரவாரம் பண்ணுவீங்க. போதைப் பொருள் பயன்படுத்தறவங்க, அதை முற்றிலுமாகத் தவிர்த்திடறது நல்லதுங்க. சிலருக்கு தலை  சுற்றல், காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பாதிப்புன்னு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது பொறுப்பை ஏற்பீங்க. துர்க்கையை வழிபடுங்க;  வெற்றிகள் அணிவகுக்கும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இந்த வாரம், யாரைப் பற்றியும் எதுக்காகவும் கோள், குறைன்னு சொல்லாதீங்க. பிறர், அதுக்கு கண்ணு, மூக்குன்னு வெச்சு உங்க கோபத்தோட  நியாயத்தை சரியாக பிரதிபலிக்காம செய்துடுவாங்க. செவ்வாய் ஆதிக்கத்ல பிறந்திருக்கறதால நீங்க எதுக்கும், யாருக்கும் அஞ்சமாட்டீங்கதான்; ஆனா,  ரொம்பவும் வெளிப்படையாகப் பேசி பிறரை தர்மசங்கடப்படுத்தாதீங்க. சிலருடைய ஆசை வார்த்தைகளுக்கு சபலப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான விஷ யங்கள்ல ஈடுபட்டுடாதீங்க. சிலர் தொலைதூரப் பயணம் மேற்கொள்வீங்க. குடும்பத்ல விட்டுக் கொடுத்துப் போயிடுங்க. குறிப்பாகப் பிள்ளைகளிடம்  அனாவசியமா ஈகோ பார்க்காதீங்க. உத்யோகத்ல உங்க உத்தி பாராட்டு தேடித்தருமுங்க. சிலருக்கு முதுகெலும்பு, மூட்டு பகுதிகள்ல வலி வரும்.  

இந்தத் தேதிப் பெண்கள் அண்டை அயலாரிடம் அதிகம் பேசாம எச்சரிக்கையாகப் பழகுங்க. நவகிரக குரு வழிபாடு, நன்மைகளைக் கொண்டு வரு முங்க.  

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்