SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு

2020-03-23@ 10:03:11

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருட கணக்கில் இறுதியாக வரும் மாதம் பங்குனி மாதமாகும். பங்குனி மாதம் என்பது பல ஆன்மீக திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஒரு மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் தினங்கள், திதிகள் அனைத்து சிறப்பானதாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் “பங்குனி மாத அமாவாசை” தினத்தின் சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குளிர் காலம் முடிந்து கடும் கோடை காலம் தொடங்குவதற்கான மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதம் எப்படி தெய்வீகமான மாதமாக கருதப்டுகிறதோ, அதற்கு இணையான உன்னதம் மிகுந்த ஒரு மாதம் பங்குனி மாதம் ஆகும். மற்ற எல்லா மாதங்களை போலவே பங்குனி மாதத்திலும் அமாவாசை தினம் வருகிறது. அன்றைய தினம் என்னென்ன செய்தால் நமக்கு மேலான பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.

பங்குனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும். யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இந்த தினத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் புத்திர பாக்கியம்

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி அடுத்து பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வளமை பொங்கும்.

பங்குனி மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் என்பதை நம்மில் பலர் முன்னமே அறிவோம். இத்தகைய சிறப்பு மிக்க பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் பித்ரு சாபம் மற்றும் குல சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்க பெறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும். உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaiheavy29

  வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்