SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வித்தியாசமான நைவேத்தியம்

2020-03-10@ 13:01:26

சிவனுக்கு கள்ளும், மீனும் படையல்

கேரள மாநிலம், கண்ணூர் என்ற ஊருக்கு அருகில் உள்ளது பறச்சினி கடவி என்ற தலம். இங்கு சிவபெருமான் வேடன் ரூபத்தில், கையில் சூலமும், வாளும் கொண்டு முத்தப்பன் என்ற பெயருடன் விளங்குகிறார். இவருக்கு கள்ளும், மீனும் நைவேத்தியமாக படைக்கிறார்கள். முத்தப்பனை காட்டு தெய்வமாக வணங்குகிறார்கள்.

மோதிரப்படையல்

திருமறைக்காடு ஆலயத்திலுள்ள வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு நாள்தோறும் மாலை சந்தி வழிபாட்டின் போது மோதிரம் படையல் செய்யப்படுகிறது. இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

கேரளாவில்

1, கட்டம்பார் நாக பிரம்மஸ்தானம் என்னும் தலத்தில் பச்சரிசி, மிளகு, மஞ்சள் ஆகிய மூன்றையும் பனையோலையால் செய்யப்பட்ட கிண்ணத்தில் வைத்து இறைவனுக்குப் படைப்பர். இந்த வழிபாட்டிற்கு ‘தம்பில்லர்’ என்று பெயர்.

2, பய்யனூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகனுக்கு அப்பக்கூழாம் என்று சொல்லப்படும் அப்ப நைவேத்தியம் படைக்கிறார்கள்.

3, காசர்கோடு பந்துக்க சுப்பராய திருக்கோயிலில் சுப்பிரமண்யருக்கு வாழை இலையில் அவல் வைத்து நிவேதனம் செய்கிறார்கள்.

4, பரசினிக்கடவு முத்தப்பன் திருக்கோயிலில் பாயக்குட்டி என்பது விசேஷ நிவேதனமாகும் பாயக்குட்டி என்றால் அவல் சர்க்கரை வேகவைத்த தானியங்கள் தேங்காய் சில்லுகள், இளநீர் முதலியன படைக்கப்படுகிறது.

5, முஜங்காவு பார்த்தசாரதி கோயிலில் வெள்ளரிக்காய் நிவேதனமாக வைக்கப்படுகிறது.

6, நிலேஸ்வரம் கண்டயோகேஸ்வரிக்கு குறுமிளகு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

7, வஜ்ஜவரம் மகிஷாசுரமர்த்தனிக்கு வெல்ல நைவேத்தியம் வைக்கிறார்கள்.

கீரைச்சாதம்

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் இறைவனுக்கு காலை வேளையில் புழுங்கல் அரிசிச் சோறும் கீரையும் படைக்கப்படுகிறது. இரவில் வேக வைத்த பாகற்காயோடு சோறு படைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் தலத்து நம்பெருமாள் மீது, டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள்,  தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் அன்னப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் தானிய லட்சுமிக்கு சந்நதி இருக்கிறது. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.

சிவனுக்கு வடை மாலை


திருவள்ளூர் அருகே அமைந்துள்ள பூண்டி திருத்தலத்தில் சிவபெருமான் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்ததால் இத்தல இறைவன் ‘ஸ்ரீ ஊன்றீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் வடை மாலை சாத்தி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றியடையும் என்று கூறப்படுகிறது. இங்கு அருள்புரியும் அம்பாளின் திருப்பெயர் ஸ்ரீ இந்தப் பெயர் பெற்றாள். பார்வை குறையுள்ளவர்கள், தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தொகுப்பு: ச.சுடலைகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்