SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-03-07@ 08:43:04


மார்ச் 7, சனி :  சனி மஹா பிரதோஷம். மதுரை இன்மையில் நன்மை தருவார் புறப்பாடு. காங்கேயநல்லூர் முருகன் கோயில் முருகன் - வள்ளி திருமணம். திருச்சி நாகநாதர், திருமழபாடி வைத்திய நாதர், கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆகிய தலங்களில் தேரோட்டம்.
 
மார்ச் 8, ஞாயிறு : மாசிமகம். நடராஜர் அபிஷேகம். காரமடை அரங்கநாதர் கோயிலில் தேரோட்டம். காஞ்சி காமாட்சி அம்மன் காலை தீர்த்தவாரி- இரவு வெள்ளி ரதம். காஞ்சி கச்சபேஸ்வரர் ஐயங்குளம் திருவூறல் உற்சவம். காஞ்சி தேவராஜஸ்வாமி ராஜகுளம் தெப்போற்ஸவம்.

மார்ச் 9, திங்கள் : பௌர்ணமி. காமதகனம். திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலைக்கு ஸம்ஹார லீலை. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை இன்று ஆண், பெண் திருமணத்தடை விலக, தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற - பௌர்ணமி யாகம்.

மார்ச் 10, செவ்வாய் : சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் பெருவிழா. திருவள்ளுவ நாயனார் குருபூஜை. காஞ்சி கச்சபேஸ்வரர் தவன உற்சவம்.

மார்ச் 11, புதன் : திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடாயாற்று  உற்சவம். செம்மங்குடி ஆனந்தவல்லி அகஸ்தீஸ்வரர் ஆலய 22ம் வருட சம்வத்ஸராபிஷேகம்.

மார்ச் 12, வியாழன் : சங்கடஹர சதுர்த்தி. திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் உற்சவம்.  திருப்பதி  ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

மார்ச் 13, வெள்ளி : சதுர்த்தி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்