தயிர் சாதம்
2020-03-02@ 12:39:41

தேவையானவை:
பச்சரிசி- 1 கப்
பால்- 1 டம்ளர்
தண்ணீர்- 1 1/2 டம்ளர்
தயிர்-3 கப்
உப்பு- தேவையான அளவு
வேகவைத்த பச்சைப்பட்டாணி- 1 கப்
வெள்ளரிக்காய்த்துருவல்- 1 கப்
கேரட் துருவல்- 1 கப்
மாங்காய்த்துண்டுகள்- 3 தேக்கரண்டி
மாதுளை முத்துக்கள்- 2 தேக்கரண்டி
திராட்சை(மாதுளைமுத்துக்கள் இருந்தால் வேண்டாம்)
தாளிக்க:
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 கப்
செய்முறை:
சாதத்தைத் தண்ணீர், பால் கொண்டு குழைவாக வேக விடவும். ஆற விட்டுக் கரண்டியால் மசித்துக் கொள்ளவும். பிறகு தயிர் கலந்து நன்றாகக் கிளறவும். மாங்காயைப் பொடித் துண்டுகளாக நறுக்கவும். வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றைத் தோலகற்றித் துருவிக் கொள்ளவும். அலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைஅலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைத் தயிர்சாதத்துடன் கலந்து விடவும். தாளிசப்பொருட்களைத் தாளித்து அதையும் தயிர்சாதத்துடன் சேர்க்கவும்.அரை டம்ளர் பாலைச் சூடாக்கி அதையும் தயிர்சாதத்தில் போட்டுத் தளரக் கிளறவும். அலங்கரிக்க வைத்திருக்கும் மாதுளை முத்துக்கள் அல்லது திராட்சையைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கச் சுவையான தயிர்சாதம் தயார்.
Tags:
தயிர் சாதம்மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!