SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : மே 11 முதல் 17வரை

2013-12-11@ 16:00:48

(1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

குடும்பத்ல தடைகள் எல்லாம் நீங்கி, சுபவிசேஷங்கள் அமோகமாக நடந்தேறுமுங்க. ஆனா இந்த வாரத்ல நீங்க பிரதானமா கவனிக்க வேண்டியது  உங்க உடல் நலத்தைதாங்க. சாத்வீகமான உணவையே எடுத்துக்கோங்க. ரத்தத்ல சர்க்கரை அளவையும் பரிசோதிச்சுக்கோங்க. பெற்றோருடன்  பேசும்போது கொஞ்சம் பணிவோடேயே பேசுங்க. அவங்ககிட்ட எந்த சின்ன வாக்குவாதமும் வேண்டாங்க. அசையும் அசையா பொருள் சேர்க்கை  மகிழ்ச்சியைக் கூட்டுமுங்க. அயல்நாட்டில் வர்த்தகம் செய்யறவங்க அந்த நாட்டு சட்ட திட்டங்களை சரியாகத் தெரிஞ்சுக்கோங்க; பிரச்னை வராது. உ த்யோகத்ல இருக்கறவங்க தங்களோட திறமையால முன்னேற முடியுமுங்க; எந்த எதிர்ப்பும் மறைமுக நடவடிக்கைகளும் ஒண்ணும் செய்யாது.  தொழில், வியாபாரத்ல எந்தத் தொய்வும் தெரியலீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் திட்டமிட்டு செயல் முடிப்பீங்க. துர்க்கை அம்மனை வழிபடுங்க; துன்பமெல்லாம் விலகிப் போகும்.

(2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

இனம்புரியாத மன சங்கடங்கள் விலகி, தெளிவு பிறக்குமுங்க. புதிய தொழில், உத்யோகத்துக்கு சீரியஸாக முயற்சிக்கலாங்க. ரொம்பநாளா இழுத் தடிச்சுகிட்டிருந்த அரசாங்க விஷயம் சாதகமான முடிவுக்கு வருமுங்க. பிறரோட ஏற்பட்டிருக்கக் கூடிய பகையை வளர விடாதீங்க. பணிந்து போய்  பகையை நட்பாக்கிக்கோங்க. இது பல எதிர்கால நன்மைகளைத் தருமுங்க. பிள்ளைகளை தோழர்களாக நினைச்சுப் பழகுங்க; பேசுங்க. குடும்பத்ல  ஏற்பட்டிருந்த ஒற்றுமைக் குறைவு, உங்களோட தன்மையான அணுகுமுறையால மறைஞ்சிடுமுங்க. வரவுக்கு மீறி செலவு செய்யாதீங்க. இரக்கப்பட்டு  உதவியாக செய்யற செலவுகள் எல்லாம் பின்னால உங்கமேல உங்க குடும்பத்தார் குறை சொல்ல வைச்சுடுமுங்க. ஏற்கெனவே வயிற்று உபாதை  இருக்கறவங்க, மருத்துவத்தை விடாம தொடருங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்தாரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்க. அனுமனை வழிபடு ங்க; அல்லல்கள் தீரும்.  

(3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

உத்யோகஸ்தர்களுக்கு, குறிப்பாக அரசுத்துறை ஊழியர்களுக்கு கௌரவம் மேலோங்குமுங்க. புது பொறுப்புகளும் உயர் பதவிகளும் கூடுதல் சலு கைகள், வருமானங்களும் பெறுவீங்க. வியாபாரம், தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்க, புது உத்திகளால லாபம் பெறுவீங்க. தயங்காம தொடர்பு கொள்ற  குணத்தினால புது ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்; எதிர்கால நன்மைகள் மலருமுங்க. ரொம்பவும் உன்னதமான வாரமுங்க. தைரியமாக ஈடுபடற  எல்லா முயற்சிகள்லேயும் வெற்றி பெறுவீங்க. கீழே வேலை செய்யறவங்க அல்லது வீட்டு வேலைக்காரங்களை பிறர் முன்னால கேலியாகப்  பேசாதீங்க; அவங்களோட நீறு பூத்த எதிர்ப்பு, உங்களுக்குப் பெரிய பாதகங்களை உருவாக்குமுங்க; கவனம். அவசியமில்லாத பிரயாணத்தைத் தவிர் த்திடுங்க. காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல உபாதை வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு உறவினர்கள் உதவி கிடைக்குமுங்க. பெருமாளை  வழிபடுங்க; பிரச்னைகள் காணாமல் போகும்.

(4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

குடும்ப பிரச்னைகள்ல அமைதியா இருந்தா, எல்லாம் தானே சரியாகிடுமுங்க. தொழில், வியாபாரம், வெளிவட்டாரப் பழக்கத்திலேயும் உங்க நிதானம்  மற்றவங்க மத்தியில பெருமை பெறுமுங்க. உத்யோகத்ல நீங்களுண்டு, உங்க வேலையுண்டுன்னு இருக்கறதுதான் இப்போதைக்கு சரி. பேசும் வார் த்தைகளில் மிகவும் கவனமா இருக்கணுமுங்க. ஏதாவது பிரச்னையில் நீங்களே பாதிக்கப்பட்டாலும் காந்திஜி போற்றிய மூன்று குரங்குகள்  பொம்மைபோல அடக்கமாக இருந்திட்டீங்கன்னா, உங்க வளர்ச்சி உங்களுக்கே பிரமிப்பு தருமுங்க. உங்களுக்கு எந்த வகையிலாவது எதிரா இருந்தவங்கள்லாம் உங்க பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் மதிப்பு கொடுத்து, உங்க பாதையில் குறுக்கிடமாட்டாங்க.

கணபதி வழிபாடு, கவலையெல்லாம் போக்குமுங்க.

(5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

எல்லா வகையிலும் ஏற்றமான வாரமுங்க. சுபவிசேஷங்கள் மனம்போல நிறைவேறுமுங்க. பெண்ணுக்கு நிச்சயித்தபடி திருமண ஏற்பாடுகள் நடக்கு முங்க. குடும்பத்ல அவரவர் பிறந்த வீட்டுப் பெருமைகளைப் பேசி கணவனும் மனைவியும் கிண்டலும் விளையாட்டுமாகத்தான் ஆரம்பிப்பீங்க; ஆனா,  சிலசமயம் அது பெரிய சண்டையாகவும் மாறிடலாம், எச்சரிக்கையாகப் பேசுங்க. இதைவிட குடும்பம், எதிர்காலம், சில பெரிய வசதிகளுக்காகக் கடன்  உதவின்னு பேசி, சில திட்டங்களைத் தயாரிக்கலாமுங்க. உத்யோகஸ்தர்களுக்கு வீண்பழி ஏற்படலாமுங்க. ஏதேனும் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட் டாலும், அதை அப்படியே மனசுக்குள்ளேயே வெச்சுக்காம, வெளிப்படையாகப் பேசி உடனுக்குடன் சரி பண்ணிக்கோங்க. சிலருக்கு முதுகெலும்பில்  பிரச்னை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு பூர்வீக சொத்து சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்குங்க. புற்றுள்ள அம்மன் கோயில்ல வழிபடுங்க; பிரச்னைகள் பறந்தோடும்.

(6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

உத்யோகத்ல இடமாற்ற வாய்ப்பு வந்தா உடனே ஏற்றுக்கோங்க; அனுகூலம்தான். இந்தத் தேதி இளைஞர்களின் காதல் பெற்றோரின் அங்கீகாரம்  பெறுமுங்க. குடும்பத்ல மகிழ்ச்சி அதிகரிக்குமுங்க. இது முக்கியமா பிரிந்திருந்த குடும்பம் மறுபடி ஒண்ணு சேர்வதால ஏற்படக் கூடியதுங்க.  உங்களுக்கு எதிரானவங்களும் மனந்திருந்தி உங்களோட உறவையும் நட்பையும் புதுப்பிச்சுப்பாங்க; அதை முறையாகப் பயன்படுத்திக்கோங்க.  இதனால இழந்த கௌரவத்தை மீட்டுப்பீங்க. பெரியவங்க யோசனையைத் தட்டாதீங்க. அவங்க ஆசீர்வாதத்தோடு, சில விஷயங்கள்ல விட்டுக் கொடு த்தும் நடந்துகிட்டீங்கன்னா, அது பல எதிர்கால நன்மைகளை அளிக்குமுங்க. சுபவிசேஷங்களுக்கு ஏற்பட்டிருந்த தடைகள் விலகிடுமுங்க; செலவுக்குத்  தேவையான பண உதவிகளும் வந்தடையுமுங்க. வயிற்றில் உபாதை வரலாம், உணவில் கட்டுப்பாடு வையுங்க.

இந்தத் தேதிப் பெண்களால குடும்ப ஒற்றுமை ஓங்குமுங்க. சிவனை வழிபடுங்க; சிறப்பு மிளிர வாழ்வீங்க.  
 
(7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

குடும்பத்தாரோடேயும் சிறிது நேரமாவது செலவிட முயற்சி செய்யுங்க. வேலையில ஆர்வம் இருக்க வேண்டியதுதான்; அதுக்காக குடும்பத்தைப்  புறக்கணிச்சுட்டு வேலையே கதின்னு இருக்கணுமா என்ன? வீட்டிலே இருக்கற கொஞ்ச நேரத்திலேயும் வேலையைப் பத்தியே நினைச்சுகிட்டு, அடுத்து  என்ன செய்யணுங்கறதிலேயே கவனமா இருக்காதீங்க. குடும்பத்ல நீங்க காட்டற அக்கறை, வேலையிலே புது சக்தியோட ஈடுபட வைக்குமுங்க; இதை  அனுபவிச்சு உணர்வீங்க. குடும்பத்தார் யோசனைகளைத் தட்டாதீங்க.  கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க பாகஸ்தர்கள்கிட்ட விரோதம் பாராட்டாதீங்க.  கூட்டிலேர்ந்து விலகி தனியே தொழில் தொடங்க இப்ப நல்ல நேரமுங்க. ஏற்கெனவே ஏதாவது திட்டம் வெச்சிருந்தீங்கன்னா அதை இப்ப செயல்படு த்தலாமுங்க. கண் நரம்புகள்ல சிலருக்குக் கோளாறு வரும்; உரிய சிகிச்சை எடுத்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சுறுசுறுப்பா இயங்குவீங்க.  பார்வதி தேவியை வழிபடுங்க; புது பலம் பெறுவீங்க.

(8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

உத்யோகத்ல ஏற்பட்டிருந்த சிக்கல்கள் உங்களோட சாதுர்யமான பேச்சாலும் நடவடிக்கையாலும் எளிதாகத் தீர்வு காணுமுங்க. புதுத் தொழில் து வங்கலாம் அல்லது பார்க்கும் தொழிலையே விரிவுபடுத்தலாம். சிறு தொழில் செய்யறவங்களுக்கு அரசாங்க சலுகைகளும் விஐபிகளின் ஆதரவும்  கிடைக்குமுங்க. வியாபாரத்லேயும் கிளைகள் ஆரம்பிக்கற வகையில லாபம் அதிகரிக்குமுங்க. புது அணுகுமுறைகள், புதிய நட்புளால வாழ்க்கையில்  நல்ல திருப்புமுனை அமையுமுங்க. எடுக்கும் முயற்சிகள்லாம் வெற்றியடையுமுங்க. அதேசமயம், அரசுத்துறையினர் கொஞ்சம் எச்சரிக்கையாக செய ல்படுங்க - தூண்டில், மீனோடு காத்திருக்குது, கவனம். உடம்பில் இடது பகுதியில் ஏதேனும் உபாதை தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் வெளி மனிதரிடம் காட்டற அக்கறையை வீட்லயும் காட்டுங்க. முருகனை வழிபடுங்க; மனம் மகிழச் செய்வான் முருகன்.   

(9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு)

சிலருக்கு அயல்நாட்டிலிருந்து நன்மையான தகவல்கள் வரும். அங்கேயிருக்கற உறவுக்காரங்க, நண்பர்கள் உங்களோட சில திட்டங்கள் நிறைவேற  கை கொடுப்பாங்க. புதிய வரவுகளாலும் உறவுகளாலும் குடும்பத்தில் மகிழ்ச்சித் தென்றல் வீசுமுங்க. கொஞ்சமும் எதிர்பாராத இடத்லேர்ந்து நல்ல  செய்திகள் வந்து சந்தோஷம் தரும். வேற்றுமதத்தவர்களின் உதவியும் அரவணைப்பும் புதிய பாதையைக் காட்டுமுங்க. வீடு, மனை சம்பந்தமான  பிரச்னைகள் எளிதாகப் பைசலாகிடுமுங்க. இந்தத் தேதி இளைஞர்களுக்கு ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கிடுமுங்க. வேலை, தொழில், காதல், திரு மணம், புது வாகனம்னு எல்லா இனங்கள்லேயும் அவங்களுக்கு மனம்போல வாழ்வு அமையுமுங்க. நீங்க முன்னேறுவதோடு, உங்களைச் சார்ந் தவங்களையும் மேலே கொண்டு போவீங்க. மூட்டு, கழுத்தில் உபாதைன்னு சிலருக்கு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள், இனிமையாகப் பேசுங்க; எல்லோரையும் கவருங்க. ஸ்ரீரங்கநாதரை வழிபடுங்க; சீராகும் வாழ்க்கை.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்